வன்னியில் சிறிலங்கா படையினர் எறிகணை- துப்பாக்கிச் சூடு: 25 சிறுவர்கள் உட்பட 102 தமிழர்கள் படுகொலை

வன்னியில் சிறிலங்கா படையினர் இன்று அதிகாலை தொடக்கம் நடத்திய அகோர எறிகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 25 சிறுவர்கள் உட்பட 102 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 சிறுவர்கள் உட்பட 140 பேர் காயமடைந்துள்ளனர்.

'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், வலைஞர்மடம், இடைக்காடு, முள்ளிவாய்க்கால் மற்றும் அம்பலவன்பொக்கணை பகுதிகளில் இன்று திங்கட்கிழமை சிறிலங்கா படையினர் அதிகாலை தொடக்கம் அகோர எறிகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தினர்.

இதில் 25 சிறுவர்கள் உட்பட 102 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 சிறார்கள் உட்பட 140 பேர் காயமடைந்துள்ளனர்.


[படம்: புதினத்துக்காக சகிலா]


[படம்: புதினத்துக்காக சகிலா]


[படம்: புதினத்துக்காக சகிலா]

காயமடைந்தவர்களில் நெக்கோட் நிறுவனப் பணியாளரும் கூட்டுறவுச் சங்கப்பணியாளர்கள் மூவரும் அடங்குகின்றனர்.

இதேவேளையில் மாத்தளன் பகுதியை நோக்கி இன்று காலை தொடக்கம் இரவு 7:00 மணிவரை சிறிலங்கா படையினர் நடத்திய அகோர ஆட்லெறி எறிகணை, ஆர்பிஜி உந்துகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் மட்டும் 68 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இடைவிடாது நடத்தப்பட்ட இத்தாக்குதலில் பல குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் முழுமையாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் அதிகமானோர் உடல் சிதறிப் பலியானதாகவும் வன்னியில் இருந்து 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

தொடர்ச்சியான எறிகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதல்களால் இப்பகுதியில் காயமடைந்தவர்களை மீட்புப் பணியாளர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பலர் உயிரிழந்துள்ளனர் என்று 'புதினம்' செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.


[படம்: புதினத்துக்காக சகிலா]


[படம்: புதினத்துக்காக சகிலா]


[படம்: புதினத்துக்காக சகிலா]

இதேவேளையில் கரைத்துறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்க நிவாரணக் கிளை மற்றும் அதன் தலைமைப் பணியகம் களஞ்சியம் ஊர்திகள் தரித்து நின்ற பகுதிகள் எல்லாம் எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகின. அவை பெரும் அழிவுகளுக்கு உட்பட்டன. மேலும் நிவாரணம் பெற வந்தவர்கள் அதிகளவில் கொல்லப்பட்டும் காயமடைந்துள்ளனர் என்றும் எமது செய்தியாளர் கூறுகின்றார்.

கொல்லப்பட்டவர்களில் இன்று மாலை வரை அடையாளம் காணப்பட்டவர்களின் பெயர் விபரம் வருமாறு:

து.நாகேஸ்வரி (வயது 26)

வீ.நெல்சன்குமார் (வயது 34)

வீ.உதயசேகர் (வயது 43)

சு.பாலசுப்பிரமணியம் (வயது 34)

சு.பாலசிங்கம் (வயது 45)

த.தருமலட்சுமி (வயது 60)

சு.மாரி (வயது 52)

கே.ரஜனிகாந்த் (வயது 29)

மோ.தர்சிகன் (வயது 06)

க.பஞ்சலிங்கம் (வயது 50)

தா.அற்புதம் (வயது 60)

தா.ஸ்ரீஸ்கந்தராசா (வயது 47)

ப.சந்திராதேவி (வயது 40)

வே.ஆறுமுகம் (வயது 75)

வெ.குஞ்சுப்பனி (வயது 76)

சி.சண்முகநாதன் (வயது 57)

கா.கலைவரதராசா (வயது 54)

வீ.சசிதரன் (வயது 38)

ல.சசிதரன் (வயது 37)

த.யோகமணி (வயது 36)

தே.தேவசகாயம் (வயது 59)

தே.அமராவதி (வயது 49)

கு.நாகேஸ்வரன் (வயது 21)

கே.ரஞ்சித் (வயது 28)

யோ.தர்சிகா (வயது 06)

கி.காவியா (வயது 30)

வி.செல்லையா (வயது 78)

செ.மாரிமுத்து (வயது 88)

சே.தவராசா (வயது 45)

த.கௌரி (வயது 25)

ம.தேனுஜா (வயது 03)

ந.ஜதுர்சிகன் (வயது 02 மாதங்கள்)

செ.லக்சனா (வயது 08 மாதங்கள்)

த.விபுசன் (வயது 13)

ச.கல்பனா (வயது 05)

செ.லக்சனா (வயது 08)

சிறீ.நிலானி (வயது 13)

மி.மரியமலர் (வயது 13)

க.துசியந்தன் (வயது 10)

சு.யதீஸ்வரன் (வயது 04)

சு.ஜனதீசன் (வயது 07)

சு.சந்திரகலா (வயது 17)

நீ.பாலகுமார் (வயது 11)

சி.கலைவாணி (வயது 35)

இ.கண்மணி (வயது 74)

க.ரீற்றா (வயது 47)

வீ.வீரம்மா (வயது 60)

கி.கணேசராசா (வயது 35)

ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏனையோரின் பெயர் விபரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

இதேவேளையில் கரைத்துறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் வைக்கப்பட்டிருந்த உலக உணவுத்திட்ட நிவாரணப்பொருட்கள், பொருட்களை ஏற்றி-இறக்க அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழுவால் வழங்கப்பட்ட எரிபொருள் மற்றும் நிவாரணப் பொருட்களை ஏற்றும் சுமையூர்திகள், உழுவூர்திகள் என்பனவும் சிறிலங்கா படையினரின் இன்றைய எறிகணைத் தாக்குதல்களில் அழிவுற்றுள்ளன.


[படம்: புதினத்துக்காக சகிலா]


[படம்: புதினத்துக்காக சகிலா]


[படம்: புதினத்துக்காக சகிலா]


[படம்: புதினத்துக்காக சகிலா]


[படம்: புதினத்துக்காக சகிலா]




[படம்: புதினத்துக்காக சகிலா]


[படம்: புதினத்துக்காக சகிலா]


[படம்: புதினத்துக்காக சகிலா]

Comments