புதுக்குடியிருப்பில் கடந்த 3 நாள் சமரில் 108 சிறிலங்கா படையினர் பலி

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு களமுனையில் கடந்த மூன்று நாட்கள் நடைபெற்ற சமரில் சிறிலங்கா படையைச் சேர்ந்த 108 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர்-கட்டளைப்பீட வட்டாரங்களை மேற்கோள் காட்டி 'புதினம்' செய்தியாளர் தெரிவித்ததாவது:

புதுக்குடியிருப்பின் முன்னணி களமுனையில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் சிறு சிறு தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

கடந்த மூன்று நாட்களாக சிறிலங்கா படையினரின் ஏழாவது சிங்க படைப்பிரிவின் மீதே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இதில் 108 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் படுகாயமடைந்துள்ளனர்.

Comments