பெல்ஜியத்தில் ஐரோப்பிய ஆணையகத்தின் முன்பாக உரிமைப் போர் பேரணி: 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு

பெல்ஜியத்தின் தலைநகரான பிறசல்சில் உள்ள ஐரோப்பிய ஆணையகத்துக்கு முன்பாக நேற்று திங்கட்கிழமை சுவிஸ் தவிர்ந்த பிற ஐரோப்பிய நாடுகளில் உள்ள 30 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கலந்து கொண்ட உரிமைப் போர் பேரணி மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.

பிறசல்ஸ் நோத் தொடருந்து நிலையத்தில் இருந்து முற்பகல் 11:00 மணிக்கு தொடங்கிய ஊர்வலம் 3 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள ஐரோப்பிய ஆணையகத்தை 5 மணி நேரத்தின் பின்னரே சென்றடைந்தது.





இதனால் பல மணி நேரம் பெல்ஜியத் தலைநகரின் போக்குவரத்துக்கள் இடை நிறுத்தப்பட்டன.

இப்பேரணியில்

- தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகள்

- தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை நீக்கு

- தமிழீழமே எமக்கு வேண்டும்

- சிங்கள அரசின் தமிழின அழிப்பை உடன் நிறுத்து

- எங்கள் தேசியத் தலைவர் பிரபாகரன்

போன்ற கோரிக்கைகளுடன் தமிழீழத் தேசியத் தலைவரின் படங்களையும், தமிழீழத் தேசியக் கொடிகளையும் மக்கள் தாங்கியிருந்தனர்.

















Comments