வன்னியில் இன்று எறிகணை; துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்: 49 தமிழர்கள் படுகொலை

வன்னியில் சிறிலங்கா படையினர் இன்று நடத்திய மூர்க்கத்தனமான தாக்குதல்களில் 49 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 47 பேர் காயமடைந்துள்ளனர்.

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல் இன்று வெள்ளிக்கிழமை வந்த போது அதற்கு அருகாக சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார், ஆர்பிஜி, பீரங்கித் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான அம்பவலவன்பொக்கணை, மாத்தளன், முள்ளிவாய்க்கால் மற்றும் இடைக்காடு பகுதிகளை நோக்கி இந்த தாக்குதல்களை சிறிலங்கா படையினர் தீவிரமாக நடத்தினர்.

இ.கோபிகிருஸ்ணா (வயது 27)

அன்னலட்சுமி (வயது 36)

செ.செந்தூரன் (வயது 09)

ஆ.சிறீபன் (வயது 60)

இ.கோபி (வயது 23)

க.திலகேஸ்வரி (வயது 13)

அ.தருமராசா (வயது 67)

சி.கோபிகன் (வயது 16)

ர.பிரசாந்த் (வயது 04)

இ.பரமேஸ்வரி (வயது 48)

சு.நிரோஜினி (வயது 10)

ஜெ.தர்சிகா (வயது 09)

இ.தினேஸ்குமார் (வயது 16)

வை.லலிதாமணி (வயது 24)

ல.சத்தியபாமா (வயது 15)

அ.புஸ்பராசா (வயது 29)

இ.ஜோர்ஜ் (வயது 78)

வ.சோமு (வயது 60)

சு.சுரேகா (வயது 20)

க.தேவிகாயினி (வயது 10)

வே.மடுத்தீன் (வயது 62)

நீ.மணிவண்ணன் (வயது 27)

த.ஜெயக்குமார் (வயது 35)

தி.ரவீந்திரன் (வயது 16)

வ.நடராசா (வயது 77)

வ.புவனேஸ்வரி (வயது 38)

பி.இந்திரன் (வயது 37)

ந.யோகமலர் (வயது 55)

அ.நாகேஸ்வரி (வயது 70)

து.யோகமலர் (வயது 01)

து.சுரேகா ( வயது 26)

து.சுரேஸ்குமார் (வயது 26)

ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். இதில் இரண்டு பேர் அடையாளம் காணப்படவில்லை.

கொல்லப்பட்டவர்களில் அன்னலட்சி என்பவர் கர்ப்பிணி ஆவார்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இவர்கள் உயிரிழந்துள்ளனர்.

சம்பவ இடத்தில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளையில் முல்லைத்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இரண்டு கடற்றொழிலாளர்களை சிறிலங்கா கடற்படையினர் தடுத்து வைத்திருப்பதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

சிலாவத்தையில் இருந்து இடம்பெயர்ந்து பொக்கணையில் வசித்து வந்த 3 பிள்ளைகளின் தந்தையான சுரேஸ் மற்றும் அவருடன் சென்றவரும் கடந்த 18 ஆம் நாள் கடலில் காணாமல் போய் இருந்தனர்.

இது தொடர்பாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் உறவினர்கள் முறையிட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் சிறிலங்கா கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழு இன்று அறிவித்துள்ளது.

Comments