சிறீலங்காப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட மூங்கிலாற்றுப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு அணியினால் ஆட்டிலறித் தளம் ஒன்று அழிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு இப்பகுதிக்குள் ஊடுருவிய விடுதலைப் புலிகளின் சிறப்பு அணி ஒன்று மூங்கிலாற்றில் அமைந்துள்ள மாவீரர் மண்டபத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றினுள் அமைக்கப்பட்ட ஆட்டிலறி ஏவுகணைத் தளத்தில் இருந்த 6 ஆட்டிலறிகளைக் (122 மில்லி மீற்றர் - பற்றி ) கைப்பற்றியுள்ளனர்.
ஆட்டிலறியைக் கைப்பற்றும் நோக்கில் இடம்பெற்ற கடுமையான மோதல்களில் 25-க்கும் அதிகமான சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ஏனையோர் காயமடைந்த நிலையில் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
ஆட்டிலறித் தளத்தில் எந்த நேரம் தாக்குதலை நடத்தத் தயாராக இருந்த 6 ஆட்டிலறிகளைக் கைப்பற்றிய தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகள், ஆட்டிலறித் தளத்தில் களஞ்சியப் படுத்திய 1000 அதிகமான எறிகணைகளை சிறீலங்காப் படையினர் இலக்குகள் நோக்கி ஏவியுள்ளனர்.
நேற்று நண்பகல் வரை இப்பகுதியில் நிலைகொண்ட விடுதலைப் புலிகள், எறிகணைகள் தீரும் வரை எறிகணைத் தாக்குதல்களை நடத்திவிட்டு, 6 ஆட்டிலறிகளையும் தகர்த்துவிட்டு, எந்தவொரு உயிரிழப்புகள் இன்றி மீண்டும் தளம் திரும்பியுள்ளனர்.
இவர்கள் ஏவிய எறிகணைகளே சிறீலங்காப் படையினரின் இலங்குகளிலும் தென்மராட்சிப் பகுதியிலும் வீழ்ந்து வெடித்துள்ளன. இவ் எறிகணைத் தாக்குதல்களில் சிறீலங்காப் படையினருக்கு பலத்த இழப்புகள் ஏற்பட்டுள்ளன. படையினருக்கு ஏற்பட்ட இழப்புகளை அடுத்தே சிறீலங்காப் படையினர் இடம்பெயர்ந்த மக்கள் மீது கடுமையாக எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 129 க்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 200 மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
வன்னி நிலப்பரப்பில் கடந்த சனவரி மாதம் முதல் நேற்று வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகளால் கருப்பட்டமுறிப்பு, இரணைமடு, ஒட்டிசுட்டான், குமிழமுனை, மற்றும் மூங்கிலாறு பகுதிகளிலேயே 20 ஆட்டிலறிகள் தகர்கப்பட்டுள்ளன. 3 ஆட்டிலறிகள் கடுமையாகத் தேசமாக்கப்பட்டுள்ளன. அத்துடன் படையினருக்கான விநியோக வாகனங்களும் பலவும்தாக்கி அழிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

Comments