வன்னியில் சிறிலங்காவின் எறிகணை மற்றும் வான் தாக்குதல்களில் 64 தமிழர்கள் படுகொலை; 106 போ் காயம்

வன்னிப்பெரு நிலப்பரப்பில் 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளில் நேற்றும் நேற்று முன்நாளும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை மற்றும் வான் தாக்குதல்களில் 64 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 106 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் சிறிலங்கா படையினரின் துப்பாக்கிச் சூட்டில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க பணியாளர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன் மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்கள் மீது நேற்று திங்கட்கிழமை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் 39 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 64 பேர் காயமடைந்துள்ளனர்.

ச.சின்னம்மா (வயது 62)

கு.முத்துராசா (வயது 52)

அ.புவிதரன் (வயது 20)

இ.யசிக்கா (வயது 30)

லோ.காஞ்சனா (வயது 23)

சு.விவேதினி (வயது 08)

பா.ஈழவேந்தன் (வயது 28)

மா மனோன்மணி (வயது 47)

ஜே.மக்சிமஸ் (வயது 38)

த.சிறீசேகர் (வயது 22)

மீ.தெய்வானை (வயது 43)

த.புவனேஸ்வரி (வயது 46)

மோ.பிரான்சிஸ் (வயது 32)

ப.விதுசன் (வயது 05)

பத்மானந்தம் (வயது 33)

புவனேஸ்வரிஅம்மா (வயது 42)

ம.மனோகரசீலன் (வயது 44)

வரதலட்சுமி (வயது 52)

செ.விஜயகுமாரி (வயது 42)

இ.ஜீவராணி (வயது 26)

மோ.ஆறுமுகம் (வயது 75)

தா.பரமலிங்கம் (வயது 33)

ம.பாஸ்கரன் (வயது 26)

ஆகியோர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு உயிரிழந்தனர்.

இதேவேளையில் முள்ளிவாய்க்கால் 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதியில் உள்ள மக்கள் வாழ்விடங்கள் மீது நேற்று சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

இதில் 10 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர். 5 வீடுகளும் முற்றாக அழிந்து நாசமாகியுள்ளன.

ம.சுதர்சன் (வயது 08)

செ.செந்தில் (வயது 15)

ந.மாசிலாமணி (வயது 42)

சி.சிவமலர் (வயது 25)

ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளவர்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் சிறிலங்கா படையினர் நேற்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கப்பலில் நோயாளர்களை ஏற்றிக்கொண்டிருந்த போது படையினரின் துப்பாக்கிச் சூட்டில் குமாராசமி குலேந்திரராசா என்பவர் படுகாயமடைந்தார்.

அதேவேளையில் மாத்தளன் மற்றும் இடைக்காடு பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்கள் மீது நேற்று முன்நாள் சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் 15 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 22 பேர் காயமடைந்துள்ளனர்.

ம.கிரி (வயது 10)

ர.இதயராணி (வயது 16)

ம.மரியம்மா (வயது 80)

சி.துவாரகன் (வயது 66)

பேரின்பநாதன் (வயது 40)

ச.அன்னப்பிள்ளை (வயது 61)

சி.சபாரத்தினம் (வயது 48)

செ.சிவகுமார் (வயது 40)

ஆகியோர் படுகொலை செய்யப்பட்டவர்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏனையோரின் பெயர் விபரம் கிடைக்கப்பெறவில்லை.

இது இவ்வாறிருக்க, சிறிலங்கா படையினரின் தாக்குதல்களில் காயமடைந்த 482 நோயாளர்களை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல் நேற்று வந்து ஏற்றிச் சென்றுள்ளது.

புல்மோட்டையில் உள்ள இந்திய படையினரின் மருத்துவமனைக்கு நோயாளர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதே கப்பலில் படுகாயமடைந்த அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளளரும் மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார் என வன்னியில் இருந்து 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

Comments