![](http://www.pathivu.com/uploads/images/2009/raw_out.jpg)
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரசிங்கவுக்கு மாதம் மாதம் 78 பில்லியன் இலங்கை ரூபாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சியில் முக்கிய தலைவர்கள் மற்றும் பொறுப்பு வகிப்போருக்கும் பெருமளவான நிதியினை ரோ உளவுத்துறை வழங்கி வருகின்றது.
இதேபோன்று ஜேவிபி கட்சியிலும் முக்கிய தலைவர்களுக்கும் பெருமளவான நிதியினை '' ரோ '' அமைப்பு வழங்கியுள்ளது. அத்துடன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிலரும் ரோவின் இந்த நடவடிக்கைக்கு சோரம் போயுள்ளதாக தெரிய வருகின்றது.
இவ்வாறு சோரம் போயுள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நலன்களில் கரிசனை கொள்ளாது, மக்களுக்கு எதுவித அவலங்களும் ஏற்படவில்லை என நியாயப்படுத்திய கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
பாராளுமன்ற அமர்வுகளின் போது சக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பகிடிக்கு உரையாடுவதாகக் கூறிக்கொண்டு தங்களது ஆழ் மனதில் உள்ள கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றமையும் அவதானிக்கப்பட்டு வருகின்றமை நினைவூட்டத்தக்கது.
Comments