வன்னியில் எம் மக்கள் தலைகளில் விழும் கொத்துக்குண்டுகளை
தடுத்து நிறுத்த உடன் கீள் உள்ள படிவத்தை Print எடுத்து
உங்கள் நண்பர்களிடம் கைஎழுத்து வாங்கி 10.03.2009 க்கு முதல் எமக்கு
அனுப்பிவையுங்கள்.
எம் மக்களே எம்மால் இயன்றதை செய்வோம் அதை உடனேயே செய்வோம். எம் தாயகத்தில் தினமும் நிகழும் படுகொலை பற்றி நாம் அனைவரும் தினமும் அறிந்தும் என்ன செய்வது என்று புரியாமல் நம்மில் பலர் மிக கவலையுற்று செய்வதறியாது தவித்து நிற்பதை நாம் அறிவோம்.
மக்களே விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி. எம் மக்களே எம்மால் இயன்றதை செய்வோம் அதை உடனேயே செய்வோம். அதன் ஒரு அங்கமாக Srilanka அரசாங்கம் எம்மக்கள் மீது உலகில் தடைசெய்யப்பட்ட Cluster குண்டுகளை பாவிப்பதை உடனடியாக தடை செய்ய எம்மாலான காரியங்களை செய்யலாம். உலகில் உள்ள 107 நாடுகளில் 94 நாடுகள் இந்த Cluster குண்டுகளை பாவிப்பதை தடை செய்வதற்கு ஆதரவாக கைச்சாத்திட்டுள்ளன. மீதமுள்ள 13 நாடுகளில் இலங்கையும் ஒன்று.
ஆனால் இலங்கையையும் இந்த கட்டுப்பாட்டுக்குள் எம்மால்கொண்டு வரமுடியும். நாம் தற்போது செய்ய வேண்டியது. இலங்கையையும் இந்த தடை ஒப்பந்தத்தில் உடனடியாக கைச்சாத்திட வைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிற்கு நாம் ஒவ்வொருத்தரும் கையெழுத்திட்டு அனுப்பிவைப்போம். இதுபற்றி நாம் சம்பந்தபட்ட அதிகாரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளோம். நாம் விரைந்து உடனடியாக எமது கையெழுத்து பணியைசெவ்வனே செய்வோம்.
மக்களே நாம் எவ்வளவு விரைவாகவும் அதிகூடிய எண்ணிக்கையான கையெழுத்தினை அனுப்பி வைக்கின்றோமோ அந்தளவு விரைவாக நாம் எம் தாயக மக்களை இலங்கை அரசாங்கத்தின் கொடூர படுகொலைகளிலிருந்து பாதுகாக்கலாம். மக்களே ஒரு நாடும் எமது கோரிக்கைகளை செவிசாய்த்து கேட்பதில்லை என்று எண்ணி அசட்டையீனமாக இருந்து விடாதீர்கள். உலகம் இப்போது எம்மை திரும்பிபார்க்க தொடங்கியுள்ளது, இதெல்லாம் எதனால் எமது சிறு சிறு பங்களிப்பினால்தான்.
Cluster குண்டுகளை தாம் பாவிப்பதே இல்லை என்று Srilanka அரசாங்கம் அடித்து கூறிவரும் இந்நிலையில். ஆயிரக்கனக்கான பொதுமக்கள் குறிப்பாக சிறுவர்கள் பெண்கள் உட்பட அனைத்து மக்களும் வயது வேறுபாடின்றி Srilanka அரசாங்கதின் Cluster குண்டுகளினால் இறந்துள்ளதுள்ளார்கள் என International Committee of tha Red Cross என்ற அமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மக்களே Srilanka அரசாங்கத்தின் பொய்ப்பரப்புரைகள் மெல்ல மெல்ல வெளிச்சத்திற்கு வருகின்றது. நாமும் எம்மாலான பங்களிப்பை செய்வோம். நீங்கள் கையெழுத்திட்டதுடன் நின்று விடாமல் உங்களை சூழ்ந்து உள்ளவர்களுக்கும் உங்களோடு பழகும் அனைவர்க்கும் இதை கூறுங்கள்.
அனுப்பவேண்டிய முகவரி:
Peace Activities Switzerland
Militärstrasse 84,8004 Zürich
Switzerland
மேலதிக விபரங்களுக்கு:
Ragu
0041 (0) 76 388 81 01
Tharan
0041 (0) 79 394 94 34
0041 (0) 76 341 94 34
http://www.tpas.ch/petition_Tamil_Eng.htm
எமதுகட்டாய பணியை எடுத்து கூறுங்கள்.
- தமிழ்க்கதிர்
Comments