அந்த சோழனின் கொடியும் புலிக்கொடிதான் நமது தலைவரின் கொடியும் புலிக்கொடிதான். கரிகாற் சோழன் இமயம் வரை சென்று புலிக்கொடி நாட்டினான். நமது தலைவரோ ஈழம் முழுவதையும் வெல்ல தொடர்ந்து போராடுகிறார். இத்தகைய போராட்டத்திற்கு ஊறு விளைவிப்பதற்கு இன்று புற்றீசல் போல துரோகிகள் புறப்பட்டுள்ளார்கள்.
தமிழக அரசியல்வாதிகள் சீன ஜப்பான் அரசுகள் நமது பணத்தில் உண்டு கொழுத்துவிட்டு நமக்கே துரோகம் செய்கிறார்கள். . இவர்களுடைய பொருட்களை தமிழர்கள் அனைவரும் ஈழம் மலரும் வரை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டும். எட்டு கோடித் தமிழர்களும் உடனடியாக இந்த நிமிடத்திலிருந்து துரோகிகளின் பொருட்களை வாங்காமல் புறக்கணிக்க வேண்டும்.
செய்திகளை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்கின்றன.1) சிறீலங்கா அரசின் பொருட்கள் (சிறீலங்கா ஏர்லைன்ஸ் காபி பொருட்கள் ஆயத்த ஆடைகள் உணவுப் பொருட்கள் மரச்சாமாங்கள்) கனடாவில் இருந்து மட்டும் சிங்களத்தின் தமிழின அழிப்பு போருக்கு வருடம் தவறாமல் 111.3 மில்லியன் டாலர்கள் செல்கிறது.
2) சீன அரசின் பொருட்கள் (சீன கைபேசிகள் கார்கள் பைக்குகள் பொம்மைகள் சைனீஸ் உணவுகள் சீன செராமிக் பாத்திரங்கள் எலக்ட்ரானிக் சாதனங்கள் பட்டாசுகள் சீன டூல்ஸ் - உபகரணங்கள்) சீன கைபேசிகள் மட்டும் இந்தியாவில் ஆண்டு தோறும் 2500 கோடிக்கு விற்பனை செய்யப்படுகின்றன.'
3) இந்திய வட நாட்டவரின் மாருதி கார்கள் பஜாஜ் ஹீரோ ஹோண்டா பைக்குகள் ஆடைகள்
4) ஜப்பான் பொருட்கள் (ஜப்பான் நாட்டின் ஹோண்டா சுசுகி டொயொட்டா மிட்சுபிசி கார்கள் பைக்குகள் பொம்மைகள் ஆடைகள் எலக்ட்ரானிக் பொருட்கள் விட்டு உபயோகப் பொருட்கள்).
5) சன் பிக்சர்ஸ் (கலாநிதி மாறன்) தயாரிக்கும் திரைப்படங்கள் (ரோபோ - எந்திரன் ,அயன், தீ படிக்காதவன், காதலில் விழுந்தேன் ,திண்டுக்கல் சாரதி, குருவி போன்ற படங்களை யாரும் பார்க்க வேண்டாம்).
6) சன் குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள்
7) கலைஞர் ஜெயா ராஜ் தொலைக்காட்சிகள்
8) சன் DTH, SCV
எமது இனம் அழிவின் விளிம்பில் இருக்கும் போது சிறு துரும்பையும் அவர்களின் அழிவை தடுக்க நாம் பயன்படுத்த வேண்டும். இந்த சிறு தியாகத்தை செய்வதினால் நம் உயிர் ஒன்றும் போய் விடப் போவதில்லை. நம் கையை எடுத்து நம் கண்ணையே குத்தும் இவர்களின் துரோகத்திற்கு தக்க பாடம் கற்பிப்போம். முடிந்தவரை அல்ல. எட்டு கோடித் தமிழர்களும் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்க வேண்டும்.
நம்மிடமிருந்து ஒரு பைசா கூட இவர்களுக்கு போகக் கூடாது. அப்போதுதான் இவர்கள் வழிக்கு வருவார்கள்.தமிழகத்திலிருந்து உணவுப் பொருட்கள் எல்லா நாடுகளூக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. திருப்பூரிலிருந்து ஆடைகள் சிவகாசியிலிருந்து பட்டாசுகள் உலகம் முழுவதும் செல்கிறது. புலம் பெயர் தமிழர்கள் அவற்றை வாங்கலாம்.இந்த மடலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தவறாது அனுப்ப வேண்டுகிறோம்.
-தமிழகத்திலிருந்து அதிபதி-
Comments