சித்திரைப் புதுவருடத்துக்குள் போரை முடிவுக்குக் கொண்டு வரும் திட்டத்தோடு இலங்கை அரசாங்கமும், படைத்தரப்பும் சண் டையைத் தீவிரமாக்கும் முயற்சிகளில் இறங் கியிருக்கின்றன.
கிளிநொச்சி, ஆனையிறவுப் பகுதிகள் கைப்பற்றப்பட்ட பின்னர் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா வழங்கியி ருந்த பேட்டியொன்றில் சித்திரைப் புதுவருடத் துக்குள் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பிரதேசங்களையும் கைப்பற்றி விடுவோம் என்று கூறியிருந்தார்.
அதேவேளை, கடந்த வாரத்தில் இராணுவ அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியான தகவல் ஒன்று அடுத்த 3 வாரங்களுக்குள் புலி கள் முற்றாக அழிக்கப்பட்டு அவர்கள் வரள்ள பகுதிகள் கைப்பற்றப்பட்டு விடும் என்று கூறியிருந்தது.
புலிகளுக்கு எதிரான போர் 99 வீதம் நிறைவடைந்துவிட்டதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கடந்தவாரம் கூறியிருந்தார்.
ஆக, அரசாங்கத் தரப்புத் தகவல்களின்படி புலிகளுக்கு எதிரான போர் இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கிறது. இந்த வாரத்திலோ அடுத்த வாரத்திலோ இறுதிப் போர் நிகழும் என்பதே அரசதரப்பின் கணிப்பு.
ஆனால், இப்போது நடந்து வருகின்ற சண்டைகள் மிக உக்கிரமானவை என்பதும் இதுவரை இல்லாதளவுக்கு மூர்க்கமானவை என்பதும் உறுதியாகியிருக்கிறது.
இலங்கை அரசு போரை விரைவுபடுத்தி முடிக்க வேண்டும் அல்லது போர்நிறுத்தத்துக்கு சம்மதிக்க வேண்டும் என்று இந்தியாவின் தரப்பில் இருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப் படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வன்னிப் போரால் ஏற்படும் தாக்கங்கள் இந் திய அரசியலில் பல மாற்றங்களை ஏற்படுத்தி யிருக்கின்றன. இந்தியாவில் ஏப்ரல் முதல் மே வரையில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற வுள்ள நிலையில் அதற்கு முன்னர் போரை முடிவுறுத்த வேண்டும் என்று இந்தியா அறிவு றுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இல்லையேல் புதுவருடத்துடன் போர்நிறுத் தம் செய்ய வேண்டும் என்று இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
எனினும் இது பற்றிய எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பும் இந்தியாவிடம் இருந்து வெளியா கவில்லை. இந்தியா கொடுத்திருப்பதாகக் கூறப்படும் காலப்பகுதிக்குள் போரை முடிவுறுத்தவே இலங்கை அரசாங்கம் முற்படுவதாகத் தெரிகிறது.
இதனால் அடுத்து வரும் மூன்று வாரங்களுக்குள் வன்னிப் போர்முனையில் உக்கிரமான சண்டைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
விடுதலைப் புலிகள் இந்த மாதத் தொடக்கத் தில் நடத்திய ஊடறுப்பு மற்றும் வலிந்த தாக்கு தல்களுக்குப் பின்னர் தற்காப்பு நிலையிலான சண்டைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 10 ஆம் திகதிக்குப் பின்னர் புலிகள் தரப்பில் தாக்குதல் சண்டைகள் ஏதும் ஆரம்பிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை. அதேவேளை படைத்தரப்பு தாக்குதல் சண்டைகளைத் தீவிரப் படுத்தியிருக்கிறது.
இதனால் புதுக்குடியிருப்புக்கு வடக்கு, கிழக்கு, தெற்குப் பகுதிகளிலும் தேவிபுரம் பொதுப் பிரதேசத்திலும் பழைய மாத்தளன் பகுதிகளிலும் கடந்த வாரம் கடும் சண்டைகள் நடைபெற்றிருக்கின்றன.
தற்போது சண்டைகள் மூன்று முக்கிய முனைகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முதலாவது, புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தின் வடக்கு முனையான பழைய மாத்தளன் பகுதி.
யாழ்ப்பாணத்தில் இருந்து முன்னேறி வந்த பிரிகேடியர் பிரசன்ன சில்வாவின் 55ஆவது டிவிசன் இந்தப் பகுதியில் மொத்தம் 5 பிரிகேட் படையினருடன் நிலை கொண்டிருக்கிறது.
பிரிகேடியர் பிரசன்ன சில்வா மற்றும் 55ஆவது டிவிசன் பிரதி தளபதி பி?கேடியர் நிசங்க ரணவான, 551 பிரிகேட் தளபதி லெப்.
கேணல் மஹிந்த விஜேசூரிய ஆகியோரின் வழிகாட்டலில் இந்தப் பகுதியில் படையினர் முன்னகர முயற்சிக்கின்றனர்.
ஒடுங்கலானதும் பெரும்பாலும் பரந்த வெளி, புதைமணல் நிலப்பரப்பு போன்ற சிக்க லான போர்?னை அது. புலிகளின் அடுக்கடுக் கான தடுப்பரண்களைக் கடந்தே முன்னேற வேண்டிய கட்டத்தில் 55 ஆவது டிவிசன் இருக்கிறது.
கடந்த 16ஆம் திகதி லெப்.கேணல் சந்தன விக்கிரமசிங்கவின் தலைமையிலான 1 ஆவது இலகு காலாற்படை ஒடுங்கலான நிலப்பரப்பினூடாக முன்னேற முற்பட்ட போது புலிகள் கடும் பதில் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இதன்போது புலிகள் 30மி.மீ கனொன் வகைப் பீரங்கிகளையும் அதிகளவில் பயன் படுத்தினர்.
அடுத்த களமுனை புதுக்குடியிருப்புக்கு வடக்கு, மற்றும் வடகிழக்குப் பகுதிகளைச் சார்ந்துள்ளது.
இந்தப் பிரதேசம் இப்போது 58ஆவது டிவிசனின் நடவடிக்கைப் பகுதியாக வரைய றுக்கப்பட்டிருக்கிறது.
புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீதிக்கு வடக்கே தேவிபுரத்தின் பின்புறம், சாலையின் தென்மேற்கு பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தப் பிரதேசத்துக்குள் தான் இரணைப் பாலைக் களமுனை அமைந்திருக்கிறது.
சில வாரங்களாக கோம்பாவில் கிழக்கு, தேவிபுரம் பகுதிகளில் கடும் சண்டைகள் நடந்து வந்தன.
ஆனால் கடந்த வாரச் சண்டைகள் பெரும் பாலும் இரணைப்பாலையைக் கைப்பற்றும் நோக்குடையதாகவே இருந்தது.
இரணைப்பாலைப் பிரதேசம் புதுக்குடியிருப் புக்கு அடுத்ததாக புலிகளால் முக்கியத்துவ மாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததொன்று.
இங்கு கடற்புலிகளின் கட்டமைப்புகள், புல னாய்வுத்துறையின் கட்டமைப்புகள் அதிகமாக இருப்பதாக கூறுகிறது படைத்தரப்பு.
பலநாட்களாகத் தொடர்ந்து நடைபெற்ற மோதலை அடுத்து கடந்த 16ஆம் திகதி 58ஆவது டிவிசன் படையினர் இரணைப்பாலைச் சந்தியைக் கைப்பற்றியிருந்தனர்.
லெப்.கேணல் தேசப்பிரிய குணவர்த்தன வின் தலைமையிலான 581 பிரிகேட் படையி னரே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த பிரிகேட்டில் 20ஆவது கஜபா றெஜி மென்ட், 7ஆவது சிங்க றெஜிமென்ட், 11 ஆவது இலகு காலாற்படை ஆகிய பற்றாலி யன்கள் நேரடியாகக் களமிறங்கியிருந்தன.
அதற்குத் துணையாக 10ஆவது, 12ஆவது, 8ஆவது கஜபா றெஜிமென்ட்களும், 9ஆவது கெமுனுவோச்சும் களமிறக்கப்பட்டிருந்தன.
ஏழு பற்றாலியன் படையினர் இப்போது இரணைப்பாலைச் சந்தி, இரணைப்பாலை கிழக்கு தேவிபுரம் பிரதேசங்களில் கடும் சண்டைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தப் பகுதிகளில் கடும் சண்டை சென்ற வாரம் முழுவதும் நடந்து கொண்டிருந்தது.
இரணைப்பாலைச் சந்தியைக் கைப்பற்றியது படையினரைப் பொறுத்தவரையில் முக்கிய மானதொரு பெறுபேறாகும்.
காரணம் இது கரையோரப் பாதுகாப்பு வலயத்தில் உள்ள புதுமாத்தளனுக்குச் செல் லும் வீதியில் உள்ளது.
இதன் மூலம் புதுமாத்தளனுக்கும் இரணைப் பாலை புதுக்குடியிருப்பு பகுதிகளில் உள்ள புலிகளுக்குமான நேரடித் தொடர்பு துண்டிக்கப் பட்டிருக்கிறது.
அதேவேளை புலிகள் முல்லைத்தீவு வீதி வழியாக புதுமாத்தளனுக்குச் செல்ல முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தச் சந்தியைக் கைப்பற்றியதன் மூலம் புதுமாத்தளன் பகுதியில் இருந்து பொதுமக்களை உள் இழுக்கலாம் என்று படைத்தரப்பு கருதுகின்றது.
மூன்றாவது களமுனை புதுக்குடியிருப்புக்கு கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை உள்ளடக் கியது.
புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீதியை உள்ளடக்கியதாகவும், அதற்கு தெற்குப் புறமா கவும் 53ஆவது டிவிசனும் புதிதாக உருவாக் கப்பட்ட 68ஆவது டிவிசனும் முன்னகர்கின்றன.
53ஆவது டிவிசன் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவின் மேற்பார்வையின் கீழேயே 68ஆவது டிவிசன் இயங்குகின்றது.
கேணல் ரவிப்பிரியவின் தலைமையிலான இந்த டிவிசனின் இரு பிரிகேட்கள் நந்திக்கட லின் வடக்குப் புறத்திலும், புதுக்குடியிருப்பின் தெற்குப் புறத்திலும் புலிகளின் பலமான அரண் களை உடைப்பதற்குப் பெரிதும் போராடிக் கொண்டிருக்கின்றன.
53,68ஆவது டிவிசன்கள் இரண்டுமே புதுக் குடியிருப்பு வைத்தியசாலையை அண்டிய தாகசிவன்கோவிலடிப் பகுதியிலும், மந்துவில் சந்தியைக் கைப்பற்றும் நோக்கிலும் கடும் சண்டையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தப் பகுதியில் 5ஆவது மற்றும் 6ஆவது கஜபா றெஜிமென்ட், 1ஆவது, 5ஆவது, 18ஆவது கெமுனுவோச், 15ஆவது இலகு காலாற்படை ஆகிய ஆறு பற்றாலியன்கள் புலி களுக்கு எதிரான சண்டைகளில் ஈடுபடுத்தப் பட்டிருக்கின்றன.
இதற்கிடையே கடந்த 16ஆம் திகதி புதுக் குடியிருப்பு மற்றும் பழையமாத்தளன் பகுதி களில் கடும் சண்டைகள் நடந்து கொண்டி ருந்தபோது புதுக்குடியிருப்பு நகருக்கு மேற்கே நடந்துள்ள ஒரு சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகும்.
இராணுவச் சீருடையில் சார்ஜன்ட் தர அதிகாரியின் பதவிநிலைச் சின்னத்துடன் நடமாடிய ஒருவர் மீது சந்தேகம் கொண்டு விசேட படைப்பிரிவு படையினர் அவரை அழைத்து விசாரிக்க முற்பட்டனர். அப்போது அவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்க வைத்து மரணமானார்.
இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் ஊடுருவியிருந்த புலிகள் இயக்க உறுப்பினரே அவர் என்பதையறிந்த படையினர் உடனடி யாக உசாரடைந்து பாரிய தேடுதலை மேற் கொண்டிருந்தனர்.
அத்துடன் கடந்த 19ஆம் திகதி வன்னிப் படைகளின் தலைமையகத்தில் நடைபெற்ற டிவிசன்கள், பிரிகேட் தளபதிகளின் மாநாட்டி லும் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா புலிகளின் ஊடுருவல்கள் பற் றியே அதிகளவில் பேசியிருக்கிறார். சண்டை கள் இறுதிக் கட்டத்தை அடைய புலிகள் இராணுவப் பிரதேசத்துக்குள் அதிகளவில் ஊடுருவுவார்கள் என்றும் அதைத் தடுக்கத் தவறினால் பெரும் இழப்புகளை சந்திக்க நே?டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
சண்டைகள் உக்கிரமான கட்டத்தை அடைந் துள்ள நிலையில் இரண்டு தரப்பிலும் பெருமளவில் சேதங்கள் ஏற்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனாலும் விடுதலைப் புலிகளை அழித்தே தீருவோம் என்பதில் படைத்தரப்பு உறுதியாக இருப்பது போன்றே, புலிகளும் தடுத்து நிறுத்துவோம் என்று தம்மால் இயன்றளவுக்கு முயன்று கொண்டிருக்கின்றனர்
Comments