உலகச் சபை ஏறிய
உன் கால்கள் ஈழ
விடுதலைக்காய்
உள்ளூர் சபைகளுக்கேவர
மறுப்பதேன்...?
அதிகார சாட்டையில்
தெறித்து ஓடும் மேகங்களாய்
பீதியில் பதுங்கும் விண் மீன்களாய்
எம் தமிழர் வாழ்வு
ஈழத்தில் நிலை குலைந்து தவிக்க
உன் சாகசப் பேச்சுக்களை
நாங்கள் சரித்திரம் என்பதே?...
தெருக்கள் எங்கும்
அந்நியச் சுவடுகள்
ஈழத்தின் வயல்கள் எங்கும்
உடல்களை எரித்த சாம்பல் மேடுகள்..
இத்தனைக்குப் பிறகும்
அவர்கள்
சமாதானம் வேண்டுவதே?...?
சீக்கிய நியாயத்தை
சிறை பிடித்த உன் கரங்கள்
ஈழத்தின் நியாயத்திற்காய்
எப்படி ஆயுதம் எடுத்துக் கெ?டுக்கும்...?
அசாம் வீதிகளில்
பிணங்களைக் குவித்தும்
இரத்தம் சுவைத்தும்
உன் பசி அடங்கா நாக்கு
ஈழத்தில் எப்படி நியாயம் கேட்கும்...?
வஞ்சகத்தால்இ
வளைத்த காசுமீரம்
அரசியலால் அபகரித்த சிக்கிம்
இன்னும் இன்னும்
தேசிய இனங்களின்
உரிமை ஒடுக்கி
உயிர் நெரித்து
உலா வருகிறாய்...
இன்று
உன் இறையாண்மை
உளறல் கேட்டு
எள்ளி நகைக்கிறது மானுடம்..
ஆனாலும்
ஆடுகளைக் காப்பாற்றும் அவசரம்
நாங்கள்
ஓநாயிடம் தானே
விண்ணப்பம் செய்கிறோம்...!
- நன்றி - தென்செய்தி -
Comments