உரக்கச் சொல்வோம். காங்கிரசுக்கோ, திமுகவுக்கோ , அதிமுகவுக்கோ, ஒட்டு போடக்கூடாது; போட மாட்டோம்.

தற்போது நடக்கும் இந்திய, தமிழக அரசியலில் தமிழ் மக்கள் அறிந்து கொண்டுள்ளது என்ன ?, என்பது இன்று நமக்கு முன்னிருக்கும் நியாயமான முக்கியமான கேள்வி. இக்கேள்வி ஈழமக்களுக்காக அல்லாமல் தமிழக மக்களுக்காகவே அவர்களின் உரிமையை பற்றிய விசயத்தில் மிகவும் முக்கியமானதாகிறது. தமிழகத்தில் இருந்து 40 இடங்களை வென்று மத்திய அரசில் பெரும் அளவில் பங்கு கொண்டாலும், தமிழ் மக்களின் உயிரைக் காப்பற்ற கூட அது உதவாது என்ற உண்மை தான் தற்பொழுது வெளிப்பட்டுள்ளது. மிக மிக அடிப்படையான தேவைகள் இருந்தால் கூட அதை மத்திய அரசில் இருந்து பெற முடியாது என்பது தான் இன்றைய அரசியல் நமக்கு தெரிவிக்கும் உண்மை.

ஈழத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சவின் ஆட்சி முடிவதற்குள் அவர் விடுதலை போரட்டத்தை நசுக்கி இருந்த இடம் தெரியாமல் ஆக்கவேண்டும் என்று நினைக்கிறார். அதாவது இந்த வாக்குறுதியை கொண்டு அடுத்த ஆட்சியையும் தானே பிடிக்க் வேண்டும் என்பதற்காக இந்திய மத்திய அரசை தன் வீட்டு வேலைக்கரனை உபயோகிப்பது போல் உபயோகிக்கிறார். நொண்டிச் சாக்குகள் பல சொல்கிறார். இந்தியா ஆயுதம் வழங்காவிட்டால் பாகிஸ்தான் தரும், சீனா தரும் என்று பயமுறுத்துகிறார். உடனே கிடைக்கும் சந்தர்ப்பத்தை நழுவவிடக்கூடாது என்று திருமதி.சோனியா அரசு புலிகளை பழிவாங்க வேண்டும் என்று முடிவு செய்து இலங்கைக்கு ஆயுதம் வழங்குகிறது. கிபீர் விமானங்களைக் கொண்டு மருத்துவமனைகள், பள்ளிகள் மீது குண்டு போடுகிறது ராஜபக்சே அரசு.

"
பாதுகாப்பு பிரதேசம்" என்று சொல்லிக்கொண்டு அதற்குள் வரவழைத்து தமிழ் மக்கள் மீது வானிலிருந்து குண்டுகள் வீசுகிறது ராஜபக்சேவின் அரசு. இந்தியா இதற்கு என்ன பதில் சொல்கிறது? வழக்கமான பதில் தான். கள்ள மெளனம்தான். இப்படியான செய்திகளை உலகுக்கு தெரிவிக்காமல் மறைப்பதையும் தனது போர் யுக்தியில் ஒன்றாக நடத்தி வருகிறது ராஜபக்சே அரசு. ஆனால் இப்போரை இந்தியா நடத்தவில்லை என்று மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் டில்லியில் அறிக்கை வெளியிடுகிறது. அதையும் தமிழர்கள் நம்புவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள் என்றால் என்ன துணிச்சல் வேண்டும்?

இவையெல்லாம் 21 ஆம் நூற்றாண்டின் மனித உரிமையின் மீது வீசப்பட்ட மிக மிக கீழ்த்தரமான நடவடிக்கைகள். இதைக் கண்டபிறகு எந்த தமிழனும் நான் தமிழ்நாட்டில் வாழ்கிறேன் என்று பெருமைகொள்ளவே முடியாது. கூடவும் கூடாது.

ஆதாரம்:
1. http://www.greenleft.org.au/2009/783/40321
2.
http://article.wn.com/view/2009/02/07/52_killed_in_northern_Sri_LankaUS_UK_urge_ceasefire/
3.
http://www.boston.com/bostonglobe/editorial_opinion/oped/articles/2009/02/15/genocide_in_sri_lanka/
4.
http://www.tamilnation.org/saty/060902chargeisgenocide.htm
5. http://srilankastateterrorism.blogspot.com/2009/02/sla-attacks-safety-zone-using-short.html

தமிழக முதலமைச்சர் திரு.கருணாநிதி மனிதச் சங்கிலி நடத்த சொன்னார். மழை என்றும் பாராமல் தமிழ் மக்கள் மனிதச்ச‌ங்கிலி நடத்தினர். மாணவர்கள் போராட்டம் நடத்தினர். பந்த் நடத்தினர். மக்கள் முழு ஒத்துழைப்போடு கடை அடைப்பு நடத்தினர். எல்லாம் எதற்கு வெறும் போர் நிறுத்தம் கேட்டும் அமைதி பேச்சு வார்த்தைக்கு திரும்பவும்தான். எந்த போர்ச்சூழலிலும் ஒரு சிறு உதவி கிடைத்தாலும் அதைக்கொண்டு இரு தரப்பும் சீஸ் பைர் என்று சொல்லபடுகிற துப்பாக்கி சூட்டு இடைநிறுத்தத்தை உடனடியாக செய்வார்கள். அப்படித்தான் உலகத்தில் எல்லா நாடுகளிலும் வழக்கம். ஆனால் இலங்கையில் இந்தியா இருக்கின்ற தைரியத்தால்தான் தன் பதவிக்காலம்முடிவதற்குள் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக அழிந்து சிங்கள் நாடு உருவாகவேண்டும் என்று ஆசைப்படுகிறார் அதிபர் ராஜபக்சே. உலக நாடுகள் பொது மக்களின் பாதுகாப்புக்காக போரை நிறுத்தவேண்டும் என்று அழைப்பு விடுத்தும் அவர் துரும்பைக் கூட அசைக்கவில்லை.

ஆதாரம்
1. http://article.wn.com/view/2009/02/04/Hillary_Clinton_and_David_Miliband_call_for_Sri_Lanka_ceasef/

காரணம் தமிழர்கள் இருந்தாலே விடுதலை பற்றிய உணர்வும் , சம உரிமையோடு நடத்தபடவேண்டும் என்று கேட்பார்கள் என்று புரிந்து வைத்திருக்கிறார் . ஆக இப்போது போரில் சண்டை போடுபவர்களை போரிலே அழுத்து விடவேண்டும். சண்டை போடாத பொது மக்களை எப்படி அழிப்பது? அதற்காகத்தான் அகதி முகாம்களை பெரும் அள‌வில் கட்டிக்கொண்டிருக்கிறார் அதிபர் ராஜபக்சே. நடக்கப்போவது இதுதான். அம்மக்களை அவர் கொஞச‌ம் கொஞ்மகா புலிகளோடு தொடர்புடையவர்கள் என்று 'விசாரணை' என்ற பெயரில் கொடுமைப்படுத்துவார். நோய்வாய்ப் பட்டால் மருந்து இல்லாமல் செய்வார். அவர்களை பற்றிய செய்திகளை வெளியில் செல்லாமல் திட்டமிட்டு பார்த்துக்கொள்வார். போரையே மறைப்பவர் அல்லவா? பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடலாம் என்பது தான் அவருடைய திட்டம். ஆக தமிழர் இருந்த சுவடே இல்லாமல் ஆக்கி விடுவார். இங்கே இருக்கும் தொப்புட்கொடி தமிழர்களோ தங்களால் இயன்றதை எல்லாம் செய்து முடித்துவிட்டார்கள். இனியும் என்ன செய்யமுடியும்?

ஒன்றே ஒன்றுதான். அதிமுகவுக்கோ, திமுகவுக்கோ, காங்கிரசுக்கோ ஒட்டு போடக்கூடாது என சத்தியம் செய்தல் வேண்டும்.

முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதாவின் ஈழத்தமிழர்கள் மீதான நிலைப்பாடு நாம் அனைவரும் அறிந்ததே.

அதாவது அவரைப்பொறுத்தவரையில் ஈழத்தில் எல்லோருமே புலிகள். பொது மக்கள் என்று யாருமே கிடையாது. ஆக எல்லாப் புலிகளுமே கொல்லப்படவேண்டியவ்ரகள்தான். அபப்டியென்றால் யாருக்காக ராஜபக்சே அகதி முகாம்கள் அமைக்கின்றார்? புலிகளுக்காகவா என்று அவர் முகம் பார்த்து கேட்கவேண்டும் போல் இருக்கிறது.

மேலும் அவருடைய சர்வாதிகாரப் போக்கு சம்பள உயர்வு கேட்ட மக்களை இலட்சக் கணக்கில் சிறையில் அடைத்தபோதே முழு தமிழகத்துக்கும் ஏன் முழு இந்தியாக்கும் தெரிந்து விட்டது. திரு.கருணாநிதியோ இங்கே தமிழர்களுக்கு ஆதரவாக அறிக்கை விட்டு கொண்டு, தாம்பரத்திலே விமானப் படை தள‌த்தில் சிங்களவர்களுக்கு பயிற்சி கொடுப்பவராக இருக்கிறார். இன்னும் அவர் நடந்து கொண்ட விதம் கீழத்தரமானது.அவர்களை திருப்பி அனுப்பி விட்டோம் என்று பொய்யறிக்கையை மக்களுக்கு செய்தித்தாள்களில் தரச்சொல்கிறார்.

மத்திய அரசில் அழுத்தம் கொடுக்க முதுகெலும்பில்லாமல் முதுகுத் தண்டிலே பிரச்சினை என்று ஆஸ்பத்திர்யில் தஞ்ச‌ம் புகுகின்றார். திரு.கருணாநிதியால் வஞ்சிக்கப்பட்ட‌து தமிழ் மக்களே. உலகமே தமிழ்மக்கள் இலங்கையில் வாழவேண்டும் என்று சொல்கிறது. ஆனால் திருமதி.சோனியாகாந்தியும் , பிரதமர் மன்மோகன் சிங்கும், முதுகெலும்பில்லாத திரு.கருணாநிதியும் எவர் செத்தால் எம‌க்கென்ன, எமது நலன் இன்னும் கெடவில்லை என இருக்கின்றனர். எங்கள் கருணாநிதி எப்போதோ செத்துவிட்டார் என்று இப்பொதிருக்கும் திரு.கருணாநிதிக்கு உணர்த்துவோம். அது நமது கடமையாகிறது இப்போது.

தர்மசங்கடமான இந்நிலையில் ஈழத்துப் பொது மக்களை காக்கும் ஒரே சக்தி, ஒரே உதவி தமிழக மக்கள் மற்றும் உலகாளவிய தமிழர்கள் கைகளில் மட்டுமே இருக்கின்றது. ஏனெனில் ஈழமக்கள் எம் சொந்தங்கள் என்ற 'உண்மையை' உணர்ந்தவர்கள் தமிழர்கள் மட்டுமே. தமிழர்களின் ஓட்டு மட்டுமே அதை வரவிருக்கும் தேர்தலில் சாதிக்கமுடியும். உங்கள் ஒட்டு எத்தனையோ முறை எத்தனையோ பேரின் கஜானாவை நிரப்ப உதவியுள்ளது. இம்முறை தமிழர்களை காக்க அது பயன்படுமென்றால் அதுவே ஜனநாயகத்தின் சிறந்த அத்தாட்சியாக இருக்கும். அதுவே தமிழர்களை வஞ்சித்த அனைவருக்கும் நாம் புகட்டும் பாடமாகவும் இருக்கமுடியும்.

மீண்டும் உரக்கச் சொல்வோம். காங்கிரசுக்கோ, திமுகவுக்கோ , அதிமுகவுக்கோ, ஒட்டு போடக்கூடாது; போட மாட்டோம்.

அன்புடன்,

தமிழன்

Comments