தமிழீழத்தை உருவாக்க ஆதரவளிக்குமாறு ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பு கோரிக்கை

இலங்கையில் தமிழீழத்தை நிறுவுவுதற்கு ஆதரவளிக்கும் வகையில் ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகள் வாக்கெடுப்பொன்றை கோர வேண்டுமென ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கிழக்குத் திமோர் விவகாரத்தில் ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகள் பின்பற்றிய அதே அணுகுமுறையை இலங்கைத் தமிழர் விவகாரத்திலும் பின்பற்றப்பட வேண்டுமென வலியுறுத்தி சகல உறுப்பு நாடுகளுக்கும் கடித மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்குத் திமோரில் நீண்டகாலமாக நீடித்து வந்த இனப்பிரச்சினைக்கு ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகளினால் வாக்கெடுப்பின் மூலம் தீர்வு காணப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்குத் திமோரில் ஐக்கிய நாடுகளினால் நிறுவப்பட்டதனைப் போன்தொரு தற்காலிக ஆட்சி முறையை இலங்கையின் வடக்கு கிழக்கிலும் நிறுவப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்குத் திமோரிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையில் நடைபெற்ற சிவில் யுத்தத்தின் போது ஏற்பட்ட சகல மனிதாபிமான பிரச்சினைகளையும் இலங்கைத் தமிழர்களும் எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலகின் முதனிலை இணைய தளங்களில் இலங்கை நிலவரம் பற்றி வெளியிடப்பட்டுள்ள செய்தி விபரங்கள் ஆதாரமாக இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comments