படையினரின் கட்டுப்பாட்டு பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் வதை செய்யப்படுகின்றார்கள் - பா.உ ச.கனகரத்தினம்
வன்னியில் படையினரின் கட்டுப்பாட்டு பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் ஆண்கள், பெண்கள் என பிரிக்கப்பட்டு அவர்கள் தனியே கொண்டு செல்லப்படு வதை செய்யப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கென ஒதுக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தின் மீது தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டு நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான பொதுமக்களை கொன்று குவிப்பதுடன் பலரை காயப்படுத்தியும் வருன்ற நிலையில் இராணுவத்தின் முன்னரங்கு பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்களையும் சித்திரவதை செய்வதாக அதிலிருந்து தப்பி வந்த பொதுமகன் ஒருவர் தன்னிடம் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இளம் ஆண்கள், பெண்கள் என பிரிக்கப்பட்டு அவர்கள் தனியே கொண்டு செல்லப்படுவதையும் அவர்கள் கொண்டு செல்லப்பட்ட பகுதிகளில் அலறல்கள், கதறல்கள் கேட்டதை உணவர்ந்ததாகவும், இவ்வாறு செல்லும் மக்களை படையினர் காப்பரண்களை அமைப்பதற்கு ஈடுபடுத்திவருவதாகவும் அச்சத்தினால் மீண்டு தாம் வசித்த இடத்திற்கு தப்பிவந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரிடம் அந்த பொதுமகன் தெரிவித்துள்ளார்.
மாத்தளன் பகுதியில் உள்ள சிறிலங்கா படையினரின் பகுதிக்கு செல்லும் மக்கள், படையினரின் முன்னரண் பகுதியிலேயே பல நாட்களுக்கு தடுத்து வைக்கப்படுகின்றனர். அத்துடன் மக்கள் செல்கின்ற வேளைகளில் துப்பாக்கிச் சூடும், ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதல்களும் படையினரால் நடத்தப்படுகின்றன. என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Comments