இந்திய மருத்துவக் குழுவினரின் உள்நோக்கம் என்ன..?

வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக் காக சிகிச்சையளிக்கும் நோக்கில் புல்மோட்டை பகுதியில் மருத்துவ வசதிகளை வழங்கி வரும் இந்திய மருத்துவர்களின் உள்நோக்கம் அம்பலத்திற்கு வந்துள்ளது.

மருத்துவர்கள் என்ற போர்வையில் வந்துள்ள குழுவினர் அனைவரும் இந்திய இராணுவத்தின் புலனாய்புப் பிரிவினரால் "றோ" அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


இம் மருத்துவக் குழுவில் 1987ம் ஆண்டு வந்த இந்திய அமைதிப்படையினரும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களுக்கான உதவி என்ற போர்வையில் வன்னியிலுள்ள மக்களை படுகொலை செய்யும் சிங்கள இராணுவத்திற்கு பெரும் உதவிகளை மேற்கொள்வதற்காகவே இவர்கள் இங்கு வந்தள்ளதாக தெரிய வருகின்றது.

இம்மருத்துவர்கள் இடுப்பில் ஏதோ ஒரு கூரான பொருளை வைத்திருப்பதாகவும் இது அநேகமாக கைத்துப்பாக்கியாவும் இருக்கக்கூடும் எனவும் சிகிச்சை பெற்றுத் திரும்பிய மக்கள் தெரிவித்துள்ளனர்.


அவர்கள் எந்தவித பதட்டமுமின்றி சேவையில் ஈடுபடு வதாகவும். அதிகமாக அங்கு சிறு காயங்களுக்காக சிகிச்சை பெற வந்த மக்களிடம்

'இன்னும் எவ்வளவு விடுதலைப்புலிகள் அங்கு இருக்கிறார்கள்?

விடுதலைப் புலிகளின் தலைவர் இப்போது எங்கே இருக்கிறார்?

புலிகளுடைய விமானங்கள் எங்கு இருக்கின்றன?

போன்ற விடையங்களை மக்களிடம் கேட்கின்றனராம். இன்னும் சிலரிடம் வன்னியிலுள்ள சில இடங்களின் பெயர்களைக்கூறி அவை எங்கிருக்கின்றன. எதற்கு அருகில் இருக்கின்றன போன்ற விடையங்களை கேட்கின்றனராம்.


இம் மருத்துவ குழுவினர் உண்மையான மருத்துவ சேவையில்லாமல் ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் பணிபுரிவதாக தமக்குத் தெரிவதாக மக்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

இது இந்திய மருத்துவக் குழுவினரின் மருத்துவ முகாம் அன்றி ஏதோ விசாரணைமுகாம் போல இருப்பதாக பொதுமகன் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னரும் இம் மருத்துவக் குழு முகாமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மக்களில் மூவர் இறந்தமை குறிப்பிடத்தக்கது. முல்லைத்தீவு பகுதியில் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் ஆட்லறி, பீரங்கித் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை இம் மருத்துவ குழுவைச் சேர்ந்தவர்கள் வழங்கிவருவதாகவும் விமானத் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு தகவல்களை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப் படுகின்றது.


சிறிலங்கா இராணுவத்திற்கு இராணுவத் தளபாடங்களை ரஸ்யா, சீனா, ஈரான், இந்தியா வழங்கி வருகின்ற போதிலும் இந்தியா வன்னி போர் களத்தில் நேரடியாக தலையிட்டு சிறிலங்கா இராணுவத்தினரை நெறிப்படுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments