இந்தியாவுக்கு இன்னொரு கடிதம் …!

பாலஸ்தீனம்
பிரிந்தால் சுதந்திரம்
பாகிஸ்தானைப் பிரித்தால் தந்திரம்
எங்களுக்கு மட்டும்
தரித்திரமா பாரதநாடே …?

அயல்வீட்டுக்கும் ஆயுதவிருந்து
எமது புண்ணுக்கும்
மருந்து
அருமையான அஸ்திரம்
உனது நடுநிலைப்
பாத்திரம் …!

அறநெறி என்பதும் கூட
வெள்ளையருக்கு எதிராக மட்டுமே
நீ பாவிக்கும்
ஒருவழிப்பாதை தந்திரமோ ..?

சொல்வாயா
நேரு நாடே
உனக்கு மட்டும்
ஆனந்த சுதந்திரமாம்
எமக்கோ ஏனிந்த சுதந்திரமா …?

பாரதநாடே
சுதந்திரம்
உனக்கு மட்டும் அழகு
எமக்கென்ன அழுக்கா
பதில் தருவாய்
எமை ஏறெடுத்தும் பாராத நாடே…

-மட்டுவில் ஞானக்குமாரன்-

Comments