கனடாவில் தமிழீழ தேசிய கொடியை தடை செய்யுமாறு விடுத்த கோரிக்கையை அரசு நிராகரித்தது

கனடாவில் சமீபத்தில் நடந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தின்போது பெரும் திரளான மக்கள் தமிழீழ தேசிய கொடிகளை ஏந்தி நின்றதை பொறுக்க முடியாத இலங்கைத் தூதுவர் அந்நாட்டரசு புலி சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும் அக்கொடியை தடைசெய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

இக்கோரிக்கைக்கு பதிலளித்துள்ள பிரதி வெளிவிவகாரச் செயலாளர், தமது அரசு அக்கொடியை தடைசெய்ய முடியாது எனவும், அது தமிழ் மக்களின் கலாச்சார மற்றும் அரசியலில் சின்னமாக விளங்குவதாகவும் தெரிவித்தார். தாம் விடுதலைப் புலிகளை தடைசெய்திருப்பதாகவும், இருப்பினும் இக்கொடியானது 1990 ம் ஆண்டிற்கு முன்னரே பாவனையில் இருப்பதனால் அந்த காலகட்டத்தில் புலிகள் இயக்கம் கனடாவில் தடைசெய்யப்பட்டிருக்கவில்லை எனவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.

தற்போது பாவனையில் உள்ள தமிழீழ தேசிய கொடியில் விடுதலைப் புலிகளின் வாசகங்கள் எதுவும் இல்லை. இரு துப்பாக்கிகள் குறுக்கு வெட்டாக அதில் புலி சின்னம் அமைந்திருப்பதாகவே தற்போதுள்ள தமிழீழ தேசியகொடி அமைந்திருப்பதால், கனடா அரசானது தாம் எவ்வித சட்டநடவடிக்கையும் எடுக்கப்போவது இல்லை என திட்டவட்டமாக அறிவித்திருப்பது, இலங்கைத் தூதுவருக்கு பெரும் கவலையாக உள்ளதாம்.

குறிப்பிட்ட சில வேலைகளை செய்யாவிட்டால் பதவி பறிபோகும், அல்லது இடமாற்றம் என்றும் இலங்கை அரசு தற்போது தூதுவர்களின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டிவருகிறது.

Comments