மொன்றியல் கியூபெக் நகர மத்தியில், இன்று (16/03/2009) மாலை 3 மணிக்கு ஆரம்பமான இப்பேரணி 6 மணியளவில் முடிவடைந்தது.
இப்பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் பால் வயது வேறுபாடின்றி கலந்துகொண்டதோடு "எமது தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் சுயநிர்ணய உரிமையையும் விடுதலை இயக்கத்தையும் அங்கீகரிக்க கோரியும், தமிழர் தாயகத்திலிருந்து ஆக்கிரமிப்பு இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் எனவும், உடனடியாக யுத்தநிறுத்தத்தை வேற்கொண்டு தமிழ் இன படுகொலையை நிறுத்தி, வன்னிவாழ் மக்களின் அத்தியாவசிய தேவைகளான உணவு, மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் கோசமிட்டு இப்பேரணியை நடாத்தினார்கள்.
இம் மனிதசங்கிலிப் பேரணியில் பங்குபற்றிய பெருமளவிலான மாணவர்கள் நம் தலைவன் பிரபாகரன், நமக்கு வேண்டும் தமிழீழம் என ஆக்ரோசமாக குரலெழுப்பினர்.
கலந்துகொண்ட ஒவ்வொரு மக்களினது கைகளிலும் தமீழத் தேசியக்கொடியும், தமிழீழத் தேசியத்தலைவரின் திருவுருவப்படத்தையும் தாங்கியிருந்தனர்.
அத்துடன் "நமது தலைவன் பிரபாகரன். நமக்கு தமிழீழமே வேண்டும், தமிழினப்பாடுகொலையை நிறுத்து, கொத்தணிக்குண்டுகளை வீசாதே என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளும், சிறிலங்கா அரசின் எறிகணை வீச்சில் சிக்குண்டு, இரத்த வெள்ளத்தில் இறந்துகிடக்கும் குழந்தைகள், சிறுவர்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள், பெண்களின் புகைப்படங்களை தாங்கி நின்றனர்.
இவ் உரிமைப்போரானது சுவிஸ் பிரேசில் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Comments