யாழ்ப்பாணத்தில் உள்ள மாவட்டபுரத்தில் இருந்து 1990 ஆம் ஆண்டு தொடக்கம் சிறிலங்கா படையினரின் தாக்குதல்களால் இடம்பெயர்ந்து கடைசியாக மாத்தளன் கிராமத்தில் அடைக்கலம் புகுந்த குடும்பமே சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் முற்றாக அழிந்துள்ளது.
சிவகரன் சுவர்ணன் (வயது 12)
சிவகரன் துளசி (வயது 10)
சிவகரன் புவிதாஜினி (வயது 04)
மேற்படி மூன்று பிள்ளைகளின் தாயாரான சிவகரன் சியாமளா (வயது 34)
ஆகியோரே படுகொலை செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவர்.
[படம்: புதினம்]
மாத்தளன் மருத்துவமனைப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 6:00 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் இக்குடும்பம் பலியெடுக்கப்பட்டது.
இவர்களின் தந்தையாரான சிவகரன், படையினரால் கைது செய்யப்பட்டு சிறிலங்காவின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தலையில் கறுப்புத்தொப்பி சூட்டப்பட்டிருக்கும் சுவர்ணன் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் தேர்வில் சித்தியடைந்து பாடசாலையில் மதிப்பளிக்கப்பட்ட வேளை குடும்பத்துடன் எடுத்த படம் ஆகும்.
படத்தில் உள்ள அனைவரும் படுகொலை செய்யப்பட்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments