தமிழகத்தில் தேர்தல் நிலவரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரசுக்கெதிரான பிரச்சாரங்கள் வலுக்கின்றன என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தல் கூட்டணி அமைப்பதிலும், தேர்தல் தொகுதிப் பங்கீட்டுக்களிலும், அரசியற்கட்சிகள் அனைத்தும் தற்போது மும்மரமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் சில நாட்களில், அவைகள் முடிந்து வேட்பாளர் நியமனங்களும், தேர்தற் பிரச்சாரங்களும் தொடங்கிவிடும்.
இந்நிலையில், வழமைக்கு மாறாக இம்முறை பல்வேறு பொது அமைப்புக்களும், தேர்தலில் கலந்து கொள்ளாத அரசியல் அமைப்புக்களும், அரசியற்கட்சிகளுக்கெதிரான பிரச்சாரப் பரப்புரையை ஆரம்பித்து விட்டதாகத் தெரிய வருகிறது.குறிப்பாகக் கிராம மட்டங்களில் ஆரம்பிக்கபட்டிருக்கும் இப்பரப்புரையில், காங்கிரஸ் கட்சிக்கும், திமுகவிற்கும், எதிரான பிரச்சாரம் வெகுவாக நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஈழத்தமிழர் பிரச்சனையில் இவ்விரண்டு கட்சிகளும் காட்டிய போலித்தன்மையை விளக்கும் வகையில் பிரச்சாரங்கள் நடப்பதாகுவும் அறிய முடிகிறது. ஆயினும், தேர்தலக்குச் சமீபமான நாட்களில், இவ்விரண்டு கட்சிகளும் வாக்காளர்களை வசீகரிக்க என்ன செய்ய வேண்டுமென்பதை திட்டமிட்டுச் செய்துகொள்ளக் கூடியவை எனவும் பரவலாகப் பேசப்படுகிறது.
எது எப்பயிருப்பினும், இம்முறை தமிழகத் தேர்தல் களத்தில் ஈழத்தமிழர் பிரச்சனை வழமைக்குச் சற்று அதிகமாகவே தாக்கம் கொண்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. கீழே காங்கிரஸ் கட்சியைத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டிய அவசியம் குறித்து தமிழகத்தில் பரப்புரை செய்யும் ஒரு துண்டுப்பிரசுரம்.
பெரிதாகப் பார்க்க படத்தின் மேல் க்ளிக் செய்யவும்.
தமிழ்மீடியா
Comments