வன்னி மக்களுக்கான மருந்துப் பொருட்களை அனுப்பி வைப்பதில் சிறிலங்கா அரசு பெரும் இழுத்தடிப்பினை மேற் கொண்டுவருகின்றதென்பது வெளிப்படையானது. ஊர்ஜிதப் படுத்தப்பட்ட தகவலின்படி தேவையான மருந்தின் அளவில் ஐந்து சதவீதமான மருந்துப்பொருட்கள்கூட அனுப்பி வைக்கப்படுவதில்லை.
இது மாத்திரமின்றி தற்பொழுது அத்தியாவசியமாகத் தேவைப்படும் மருந்துப் பொருட்களும் அனுப்பிவைக்கப்படு வதில்லை. குறிப்பாக, எறிகணைவீச்சு, விமானக் குண்டுவீச்சு போன்றவற்றால் காயமடைவோருக்குச் சத்திர சிகிச்சையில் இருந்து காயங்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கான மருந்து வகைகள் அனுப்பிவைக்கப்படுவதாக இல்லை.
வன்னியில் தற்பொழுது தங்கியுள்ள அரச வைத்திய அதிகாரிகளினால் காயமடைந்தோருக்கு முதலுதவிச் சிகிச்சையும் ஏனைய நோயாளருக்கு வைத்திய ஆலோ சனைகளுமே வழங்கக்கூடியதான நிலையே காணப்படு கின்றது. ஆனால் உலகில் மனிதாபிமானம், மனிதநேயம் பற்றிப் பேசுபவர்கள் எவருமே இங்கு அல்லலுறும் மக்களுக்கு வைத்திய உதவியையோ அன்றி மருந்துப் பொருட்களையோ அனுப்பிவைக்கத் தயாராக இல்லை.
ஆனால், இங்குள்ள மக்களுக்கு மருந்துப் பொருட் களையோ ஏனைய அத்தியாவசியப் பொருட்களையோ கொண்டுவந்து சேர்ப்பதற்கு சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் தயாராகவே உள்ளது. அதாவது சிறிலங்கா அரசின் அனுமதி கிடைத்தால் தேவையான மருந்துப்பொருட்கள் வந்தடைதல் சிரமமானதொரு விடயமல்ல.
ஆனால், சிறிலங்கா அரசின் மீது அழுத்தம் கொடுத்துக் குறைந்த பட்சம் மருந்துப் பொருட்களைத்தானும் வன்னிக்கு அனுப்பிவைக்க எந்தவொரு நாடுமோ அமைப்புமோ விரும்ப வில்லை. மாறாக வன்னியில் காயமடைந்து மருந்தின்றி இறந்த வர்கள்போக - எஞ்சியவர்களுக்கு இந்தியா மருத்துவசேவை வழங்க முன்வந்திருப்பது கேள்விக்குரியது.
இலங்கைத் தமிழர் விடயத்தில் சிறிலங்கா அரசின் நிலைப் பாட்டிலிருந்து எந்தவித வேறுபாட்டையும் கொண்டதாக இந்தியா இல்லை. யுத்தத்தை முழு அளவில் ஆதரிக்கும் இந்தியா - வன்னியில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்ற வும் அவர்களைத் தடுப்பு முகாங்களில் அடைக்கவும் ஆதரவு தெரிவிக்கின்றது.
சுருக்கமாகக் கூறப்போனால் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் இராணுவ ரீதியில் முற்று முழுதாகத் தோற்கடிக்கப்படவேண்டும் எனவும் விரும்புகின்றது. இதற்கெனச் சிறிலங்காவிற்குப் பூரண ஆதரவும் வழங்கி வருகின்றது.
இத்தகைய நிலைப்பாட்டைக் கொண்ட இந்திய அரசாங்கம் தற்பொழுது புல்மோட்டைக்கு மருத்துவக்குழு ஒன்றை அனுப்பி காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க முன்வந் துள்ளது.
அதாவது தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்தும் தமிழர் கொல்லப்படுவது, படுகாயமடைவது குறித் தும் கவலைப்படாத இந்திய மத்திய அரசிற்கு காயமடைந்து உயிர் தப்பியவர்கள் மீது மட்டும் கரிசனை, காருணியம் ஏன் வந்தது? இதற்கு ஒரே காரணம் - வருகின்ற பொதுத் தேர்தலில் தமிழக மக்களின் வாக்குக்கள் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குத் தேவையாக இருப்பதேயாகும்.
அவ்வாறு இல்லாதுவிடில் இலங்கைத் தமிழர்கள் மீது இத்தகையதொரு கரிசனை இந்திய மத்திய அரசிற்கு ஏற்பட்டிருக்கமாட்டாது. அவ்வாறு இல்லாது இலங்கைத் தமிழர்கள் மீது - இந்திய மத்திய அரசிற்குக் கரிசனை இருந்திருக்குமேயானால் இலங்கைத் தமிழர்களைக் காயமடையாமலே காத்திருக்கமுடியும்.
மருந்துப் பொருள் தடை மூலமாகவும் மரணத்தை அதிகரிக்கும் சிங்களம்.
சிங்களப் படைகளின் வன்கொடு மைத் தாக்குதல்களால் மரண ஓலங் கள் மலிந்த பகுதியாய் மாத்தளன் தொடக்கம் முள்ளிவாய்க்கால்வரை யான பகுதிகள் மாறியுள்ளன.
இலட்சக்கணக்கான மக்களின் இடப்பெயர்வால் நிரம்பியுள்ள இப்பகுதி கள் சிங்கள அரசின் கொலை வலய மாக்கப்பட்டு நாளாந்தம் பல பத்து பொதுமக்கள் படுகொலை செய்யப் பட்டுவருகின்றனர். பெருமளவானோர் படுகாயங்களுக்குள்ளானநிலையில் பெரும் அவஸ்தைப்படுகின்றனர்.
இந்த இருபத்தியோராம் நூற்றாண் டில் எந்தவொரு சனநாயக அரசுமே செய்யாத படு கொடூரமான இன அழிப்பை மகிந்த அரசு இன்று இந்த மண்ணிலே நடாத்திக் கொண் டிருக்கிறது என்ற கசப்பான உண்மையை இந்த உலகம் சரிவரப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறது என்ற உண்மையையும் சுட்டிக் காட்டியாக வேண்டும்.
போர் நடக்கிற பகுதிகளிலே உத வக்கூடிய சர்வதேச தொண்டு நிறுவ னங்களை வெளியேற்றி அந்நிறுவனங் களின் உதவிமூலம் தமிழினம் தப்பிப் பிழைத்துவிடக்கூடாது என்ற கொடூர நோக்கில் தனது இறையாண்மைக் கொள்கையைப் பேசிவந்த மகிந்த குடும்பம் போரினால் பாதிக்கப்பட்ட மக் களுக்கு தன் அரசாங்கம்தான் உதவி செய்யவேண்டும் அவ்வாறுதான் செய் துவருகிறது என்ற போலிமுகத்தைக் காட்டமுனைந்தது. இந்நிலைப்பாட்டை ஏற்று பல தொண்டு நிறுவனங்கள் இந்த மக்களை தவிக்கவிட்டு வெளி யேறிய கொடுமையை உலகின் மனச் சாட்சிமுன் சுட்டிக்காட்ட வேண்டும்.
ஏனெனில் மிகக் கொடுமையான போரை சிறுபான்மை இனம் ஒன்றின் மீது திணித்து நிற்கும் அரசின் மிரட் டலுக்கு அஞ்சி தாம் ஏற்றுக்கொண்ட மனிதாபிமானப் பணிகளை இடை நிறுத்தி வெளியேறியமை அவ் அமைப் புக்களின் அப்பாவி மக்களுக்கான பணி இதுதானா? என்ற வினாவை தமிழி னத்தின் மத்தியில் ஏற்படுத்தியது.
அவ்வாறு வெளியேறிய தொண்டு அமைப்புகள் தாம் வெளியேற நிர்ப்பந் திக்கப்பட்டமை தொடர்பில் சரியான முறையில் வெளிப்படுத்தத் தவறியமை யும் சிங்கள அரசின் அதிகார மிரட்டல் போக்கை ஆசீர்வதிப்பதாய் அமைந்தது.
இன்று ஒருவேளை உணவைக்கூட பெற்றுக்கொள்ள முடியாது மிகக் கொடும் மனிதப் பேரவலத்தில் சிக்கித் தவிக்கும் இம் மக்களை எறிகணை வீச்சில் கொன்றொழிக்கும் மகிந்த அரசின் வலைப்பின்னல் திட்டம் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.
எறிகணைகள் வீழ்ந்து வெடிப்பதில் உடனடியாகப் பலியாகும் மக்கள் தவிர காயமடையும் படுகாயமடையும் மக் களும் பிழைத்துவிடக்கூடாது என்ற நோக்கிலேயே மருந்துப் பொருட்களுக் கான தடையை மகிந்த அரசு மாதக் கணக்காய் நீடித்துள்ளது. இது மிக மோசமானதொரு இன அழிப்பு.
மாத்தளன் பாடசாலையில் இயங் கும் பிரதான மருத்துவமனைபோல் உலகில் எந்தவொரு மருத்துவமனை யும் இந்த காலத்தில் செயலாற்றியிருக் காது என கூறும் அளவிற்கு அங்குள்ள மருத்துவர்களினதும் மருத்துவ உத்தி யோகத்தர்களினதும் அயராத அர்ப்பணிப்புநிறைந்த சேவை மட்டுமே பல உயிர்களைக் காப்பாற்றி வரு கிறது. நாளாந்தம் நூற்றுக்கணக்கில் வரும் காயம் அடைந்த பொதுமக் களைச் சமாளிப்பதில் அவ் வைத்திய சாலை பெரும் நெருக்கடியை எதிர் கொள்கிறது.
காயப்பட்டவர்களை படுக்கவைக்க இடமில்லை காயத்தை மாற்றுவதற் குரிய மருந்தில்லை அவர்களுக்கு உண்ணக் கொடுக்கக்கூடிய போசாக்கான உணவில்லை. விடுதியில் தங்கி சிகிச்சை பெறவேண்டிய நிலையில் உள்ள ஓரளவு குணமான காயப்பட்டவர்களைக்கூட தொடர்ந்தும் தங்கவைத்து சிகிச்சை வழங்க முடியாதநிலை என அவ் வைத்தியசாலை சந்திக்கின்ற நெருக்கடிகள் ஏராளம்.
இவைதவிர சாதாரண வருத்தம் தொடர் சிகிச்சை தேவைப்படுபவர்கள் என அத்தனை பேருக்குமான மருத்துவ தேவையும் அதிகரித்தே செல்கிறது.
காயத்தை மாற்றக்கூடிய மருந்துப் பொருட்களைத் தனியார் கடைகளில் தேடி அலையும் நிலையில் பல காயப் பட்ட பொதுமக்களைக் காணமுடி கிறது.
கப்பல்மூலமாக இம் மருத்துவ மனைக்கான மருந்துப் பொருட்களை அனுப்பப்கூடிய நிலையிருந்தும் தமிழ் மக்களை நாளாந்தம் அவலப்படுத்தும் சிங்கள அரசைத் தட்டிக்கேட்க இவ்வுல கில் யாரும் இல்லாத நிலையே தொடர் கிறது.
உலக நிறுவனங்களின் அனுசர ணையுடன் வழங்கப்படுகின்ற நிவா ரணப் பொருட்களைக்கூட தமிழ் மக் களுக்கு சீராக வழங்கவிடாது சிங்கள அரசு தடுத்துவருகிறது. தமிழ் மக்கள் தனது மக்கள் என்றும் தனது நாடு இறைமையுள்ள நாடு என்றும் உலகின் முன் கூறி ஒரு இனத்தையே பட்டினிச் சாவிற்குள் தள்ளும் படு பயங்கரத்தை எந்தக் கொடிய அரசும் செய்ததாக வர லாற்றில் இல்லை.
இப்படிப்பட்ட சிங்கள அரசிடத்தில் நியாயமான உரிமைக் கோரிக்கை யையோ பாதுகாப்பான வாழ்வையோ எதிர்பார்ப்பது முதலைவாய்க்குள் அடைக்கலம் தேடும் மீனினைப் போன்ற நிலையினை உருவாக்கிவிடும் என்ற உண்மையை தமிழினம் இத் தருணத் தில் தெளிவாகப் புரிந்தாக வேண்டும்.

Comments