தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு படையணி இராணுவம் கைபெற்றிய பகுதிகளுக்குள் ஊடுருவி கடும் தாக்குதலை மேற்கொண்டவாறு முன்னேறி 12 சதுரக் கிலோமீற்றர் வரை புலிகள் வசம் சென்றுள்ளதாக கொழும்பிலிருந்த வெளியாகும் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
600-க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளின் சிறப்பு படையணியினர் 58 வது படைப்பிரிவிக்குள் ஊடுருவி கடும் தாக்குதலை மேற்கொண்டு படையினருக்கு கடும் இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காப் படையினர் கைபற்றிய இடங்களில் 12 கிலோ மீற்றர் தூரம் வரை தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடுருவியுள்ளதுடன் கிளிநொச்சிக்கு அண்மையாக இருந்த படையினரின் பீரங்கி நிலைகளையும் கைப்பற்றியுள்ளதாக அந்த் இணையம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் இராணுவத்தின் பேச்சாளர் தெரிவிக்கையில் 45 கிலோமீற்றர் தூரத்தில் விடுதலை புலிகள் ஒடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் நேற்று கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பகுதியை நோக்கி புலிகள் கடும் ஆட்லறித் தாக்குதலை மேற்கொண்டனர்.
இத்தாக்குதலையடுத்து ஏ-9 பாதையின் ஊடான படையினரின் போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை மீள கைப்பற்ற முடியாத நிலையில் 58 ஆவது டிவிசன் படையணி உள்ளது.
புலிகள் இராணுவத்தின் 130 மி.மீ பீரங்கிகள் மூன்றைக் கைப்பற்றி அதனைக்கொண்டும் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில தினங்களாக இடம்பெற்றுவரும் மோதல்களினால் இராணுவத்தில் நூற்றுக் கணக்கான படையினர் உயிரிழந்தும், காயப்படுத்தப்பட்டு போர் நிலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments