வன்னி மோதல்களினால் காயமடையும் சிறுவர்களின் எண்ணிக்கை உயர்வு

வன்னி மோதல்களில் காயமடையும் சிறுவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக பிரபல ஆங்கில வார இறுதிப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மைக்காலகமாக மோதல்களில் காயமடைந்து சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியரின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்ட 19 படுகாயமடைந்த சிறுவர்கள், கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலைக்கு
மாற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

காயமடைந்து கொழும்பு வைத்தியசாலைகளுக்கு மாற்றம் செய்யப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும், சிகிச்சை பெற்று குணமடையும் சிறுவர்கள் மீண்டும் அகதி முகாம்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட உள்ளதாக கொழும்பின் பிரபல வைத்தியசாலையொன்றின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Comments