பிரிட்டிஷ் எம்.பிக்களின் ஆர்ப்பாட்டம் அசைக்குமா, என்ன……?

omcatb157kcavqvl8nca6rbwg5cannu63cca098c2gcaxsyjxdcaf1v347ca6pw196cae9qbnccavzzq7vcaunfck1camtaojxcac6crqycafais5mca5urdgfcagbg4e8camjm3keபொதுநலவாய அமைப்பிலிருந்து இலங்கையை இடைநிறுத்தவேண்டும் என்ற நிலைப்பாடு பிரிட் டனில் முகிழ்த்திருக்கிறது. அதற்கான முன்னறிவித் தல் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட் டிருக் கின்றது. அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பி னர் சர்மா விரேந்திரக்குமார் விரைந்து விவாதிக்கப் பட வேண்டிய பிரேரணை (Early Day Motion) என்ற வரிசையில் நேற்றுமுன்தினம் அந்தப் பிரேரணை யைச் சமர்ப்பித்திருந்தார்.

இலங்கை அரசாங்கம் போர்நிறுத்தம் செய்வ தற்கு ஒப்புதல் தெரிவித்து நடைமுறைப்படுத்தும் வரை, பொதுநலவாய அமைப்பிலிருந்து (Commonwealth) அதனை இடைநிறுத்தி வைக்கவேண்டும் என்பதே அந்தப் பிரேரணையின் கருவாகும்.

சர்மா விரேந்திரக்குமார் சமர்ப்பித்துள்ள பிரேர ணைக்கு பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

இலங்கையில் வன்னிப் பகுதியில் நெருக்கடி கள் தீவிரமடைந்து வருவது, இந்த வருட ஆரம்பத்தில் 2,000 பேர் போரில் பலியாகியது ஆகியன அந்தப் பிரேரணையில் முன்னிறுத்திக் காட்டப்பட்டுள்ளன.
நாடாளுமன்றப் பிரேரணைக்கு முன்னறிவித்தல் கொடுத்ததோடு மட்டுமின்றி, இலங்கை நிலைவரம் அதன் பின்னணி என்பன குறித்து பொதுநலவாய அமைப்பிற்கும் நீண்ட மகஜர் ஒன்றை பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சமர்ப்பித்துள்ளனர்.

இதற்கிடையில் இலங்கையை பொதுநலவாய அமைப்பிலிருந்து இடைநிறுத்தம் செய்யவேண் டும் என்று பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

பிரிட்டனில் தமிழர்கள் வாழும் தொகுதிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த ஆர்ப் பாட்டத்தில் தமிழ் மக்களோடு சேர்ந்துகொண் டனர். அந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமையும் வகித்தனர். லண்டனில் உள்ள பொதுநலவாய அமைப்பின் மத்திய அலுவலகத்திற்கு முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட்டு அமைதிப்பேச்சுக்கள் ஆரம் பமாகும்வரை, இலங்கையை பொதுநலவாய அமைப் பிலிருந்து இடைநிறுத்தவேண்டும் என்ற முக்கிய கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அவ்வேளை பொதுநலவாய அமைப்பின் அமைச்சர்கள் மட் டத்திலான செயலணிக் குழுவின் மாநாடு நடை பெற்றுக்கொண்டிருந்தது. அந்த மாநாட்டில் பொது நலவாய அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் அமைச் சர்கள் பங்குபற்றியிருந்தனர்.
தத்தமது தொகுதிகளில் வாழும் ஈழத்தமிழர் களின் உறவுகள் இலங்கையில் இன்னல்களைச் சந் தித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குக் குரல் கொடுப்பதற்காகவே தாம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக நாடாளுமன்றஉறுப்பினர்கள் பலரும் கூறியுள்ளனர்.

எப்படியோ…..

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப் பட்டுள்ள பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் கூட, அதன்மூலம் இலங்கை அரசு, போர்நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற தனது நிலைப் பாட்டில் இருந்து இம்மியும் அசையப்போவ தில்லை என்றே கொள்ளலாம்.

இலங்கை விவகாரம் குறித்து விசேட பிரதிநிதி ஒரு வரை பிரதமர் கோர்டன் பிறவுண் நியமித்தபோது, அதனைக் காலால் எட்டி உதைத்த இலங்கை அர சுக்கு, பொதுநலவாய அமைப்பில் இருந்து இடை நிறுத் தப்படுவது பொருட்டாக இருக்காது; அதற்குப் பாதிப்பாக இருக்காது!

விடுதலைப் புலிகளின் கதை முடியவுள்ள நிலையில், அரசு யுத்த நிறுத்தம் ஒன்றுக்குச் சென்று படுகுழியில் விழுவதற்குத் தயார் இல்லை என்று அரசாங்கம் அடித்துக்கூறும்போது, பொதுநலவாய அமைப்பின் அங்கத்துவம் அதற்குப் பெரும் பொருட்டல்ல என்ற நிலையே நிஜமாகும்.

இலங்கை நாட்டின் முழு மக்களும் போருக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர். ஆகையால் முழு வெற்றியும் கைக்கு வரவுள்ள வேளையில் போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளத் தயாரில்லை என் றும் பிரதமர் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இப்போது போர்நிறுத்தத்தைக் கோரும் விடுதலைப் புலிகள், எத்தனை தடவைகள் அதனை மீறினர் என்பது எமக்குத் தெரியும். இப்போது சர்வ தேச ரீதியில் பொய்ப்பிரசாரம் செய்து, தமது நலன் கருதிப் போர்நிறுத்தம் ஒன்றை வெளிநாடுகள் ஊடாக கொண்டுவருவதற்கு படாதபாடுபடுகின் றனர் புலிகள். அதற்கு நாம் அசைந்து விடப்போவ தில்லை என்று பிரதமர் வெட்டு ஒன்று துண்டு இரண்டாகக் கூறியுள்ளார்.

இத்தகைய இரும்புப் பிடியில் நிற்கும் இலங்கை அரசாங்கம், பிரிட்டனின் பொதுநலவாய அமைப்புத் தடைகுறித்து அலட்டிக்கொள்ளாது….. என்று எதிர் பார்க்கலாம். அவ்வளவுதான்….!

Comments