இந்திய அரசு இலங்கைக்கு ராணுவ உதவி செய்துவிட்டு ஈழத் தமிழர்களுக்கு மருந்துகளையும் அனுப்பி வருகிறது என்று கூறிய ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ, இவ்வாறு இரட்டை வேடம் போட்டு துரோகம் செய்து வரும் மத்திய அரசையும் அதற்கு துணையாக இருக்கும் தி.மு.க அரசையும் தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றார்.
ம.தி.மு.க கொள்கை விளக்க அணி செயலர் நாஞ்சில் சம்பத், பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான் ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து கோவையில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வைகோ பேசுகையில், பாசிச வெறி பிடித்த தமிழக அரசின் காவல்துறை தொடர்ந்து பொய் வழக்கு போட்டு வருகிறது என்றார்.
இதேபோல் இயக்குனர் சீமான், கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத் ஆகியோர் மீதும் பொய் வழக்குப் போட்டு அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்தது கடும் கண்டனத்திற்குரியது என்றும் இது ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் செயல் என்றார்.
ஒரு நாஞ்சில் சம்பத்தை கைது செய்தால் ஓராயிரம் நாஞ்சில் சம்பத்துக்கள் உருவாவார்கள் என்பதை தமிழக அரசு மறந்து விடக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தார்.
இந்திய அரசு இலங்கைக்கு ராணுவ உதவி செய்துவிட்டு ஈழத் தமிழர்களுக்கு மருந்துகளையும் அனுப்பி வருகிறது. இவ்வாறு இரட்டை வேடம் போட்டு துரோகம் செய்து வரும் மத்திய அரசையும் அதற்கு துணையாக இருக்கும் தி.மு.க அரசையும் தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று வைகோ கூறினார்.
தமிழர்களுக்கு துரோகம் செய்து வரும் காங்கிரசுக்கும், அதற்கு துணை நிற்கும் தி.மு.க.விற்கும் வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றார் வைகோ.
|

Comments