உலகமே எமது மக்களை பாராதிருக்கும் இவ்வேளையில் இங்கிலாந்து வாழ் தமிழ் மக்களினால் வன்னி மக்களின் அவலத்தை துiடைக்கும் பொருட்டு வணங்காமண் எனும் கப்பல் மருந்து பொருட்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிகொண்டு தாயகம் நோக்கி புறப்படுவதற்கு தயாராகி வருகின்றது.
இவர்களது பயணம் காத்திரமும் உறுதியும் பெற்று வன்னி மக்களை சென்றடைவதற்கு உலகின் பல நாடுகளில் இருந்தும் உதவிகள் கோரப்பட்டுள்ளன. இந்த வகையில் சுவிஸ் வாழ் தமிழ் மக்களும் இப்பணிக்கு தம்மாலான அனைத்து உதவிகளையும் அளித்து கப்பலை இனிதே வழியனுப்பி வைக்க தமது வளங்களை வழங்க வேண்டும் என அழைப்பு விடுக்கின்றோம்.
இன்னும் போதுமான மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நிதி உதவி கோரப்பட்டுள்ளது. இந்த நிதி உதவிகளை www.vannimission.org எனும் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்தினூடு (00 44 028 733 82 35) அல்லது மற்றும் பணம்செலுத்தும் வழிகளினூடு தொடர்புகளை கொண்டு நேரடியாக செய்துதவுமாறு தாழ்மையுடனும் அவசரமாகவும் கோருகின்றோம்.
மேலும் வன்னி மக்களிற்கு நேரடியாக சென்று மருத்துவ பணிபுரிய முன்வரும் மருத்துவர்கள், மற்றும் மருத்துவத்துறை பணியாளர்கள் எம்முடன் தொடர்பு கொண்டு விபரங்களை பதியுமாறு கோருகின்றோம். சுவிசில் இருந்து அனுப்பப்பட இருக்கும் மருத்துவக் குழுவில் உங்களுக்கு தெரிந்த தமிழ் மற்றும் சுவிஸ் பணியாளர்களை இணைக்க உதவுமாறு வேண்டுகின்றோம்.
தொடர்புகளிற்கு nalavalvu@hotmail.com, 079 343 95 927
இப்படிக்கு
நலவாழ்வு நிர்வாகத்தினர்
Comments