தமிழகத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கும் தேர்தல் பிரச்சாரத்தில், ஈழப்பிரச்சனையும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. இது இப்போதுதான் முதல் முறையாக நடப்பது அல்ல. ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன் ஈழப்பிரச்சனை, தமிழகத் தேர்தல் களங்களில் சற்று ஒலித்த விடயம்தான்.
ஆனாலும் இம்முறை இதன் பிரதிபலிப்புச் சற்று வித்தியாசமாக இருக்கிறது. இதுவரை காலமும் அரசியற் கட்சித் தலைவர்களே, தங்கள் கட்சி அரசியலுக்காக ஈழத் தமிழர் பிர்ச்சரனையைப் பேசியிருக்கின்றார்கள். ஆனால் இம்முறை முதன் முதலாக ஈழத்தமிழர் பிரச்சனையில், இந்தியத் தலையீடு, தமிழக அரசியற் தலைவர்களின் அனுகுமுறை, என்பன குறித்து மக்கள் பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளார்கள்.
தேர்தற்களத்தின் தொடக்க நிலையிலேயே காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, ஈழத்தமிழர் பிரச்சனையில் காங்கிரசின் அனுகுமுறை தொடர்பான இறுவட்டுப் பிரச்சாரமும், குறுஞ்செய்திப்பிரச்சாரமும், தொடங்கப்பட்டிருக்கும் நிலையில் , தற்போது காங்கிரசின் கூட்டுக் கட்சியான திமுக குறித்தும், இறுவட்டுப்பிரச்சாரம் தொடங்கியுள்ளமை தெரியவருகிறது. கலைஞருக்குப் பெருமை சேர்த்த பராசக்திபட வசனத்தையும், நீதிமன்றக் காட்சியையும் சற்று மாற்றியமைத்து இந்தச் சிடி தயாரிக்கபட்டிருக்கிறது. இதில் ஈழத்தமிழர் பிரச்சினையில் கருயாநிதியின் அனுகுமுறை குறித்து சற்றுக் காட்டமாகவே விமர்ச்சிக்கப்பட்டிருக்கிறது.
தேர்தற்களத்தின் ஆரம்க கட்டத்திலேயே இவ்வகைப் பிரச்சாரங்கள் தொடங்கியிருப்பதாலும், புதிய வழிமுறைகளில் இப்பிரச்சாரங்கள் தொடங்கப்பட்டிருப்பதாலும், மக்கள் மத்தியிலிருந்து இம் மறுதலிப்புக்கள் தொடங்கியிருப்பதாலும் இம்முறை தமிழகத் தேர்தற் களம் சற்று மாறுபாடு உடையதாகவே இருக்கப் போகிறது போலும்.
தமிழ்மீடியா
Comments