ஐ.நா. மனித உரிமை சபையில் பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையம் அறிக்கை விநியோகம்

சுவிற்சர்லாந்து ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையின் 10 ஆவது கூட்டத்தொடரில் பிரான்சை தளமாகக் கொண்டு இயங்கும் தமிழர் மனித உரிமை மையத்தினால் அறிக்கை விநியோகிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் பல ஆய்வுக்கட்டுரைகள், அனைத்துலகத்தின் பார்வை, ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் தற்போது தமிழீழ மக்களினால் எதிர்கொள்ளப்படும் மிக மோசமான இராணுவ அடக்குமுறைகள், மனிதாபிமான அவலங்கள் அகியனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அறிக்கையினை பிரான்ஸ் தமிழ் மனித உரிமை மையத்தின் பொதுச் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரனும் அதன் மற்றைய பிரதிநிதிகளும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபை கூட்டத்தொடரில் கலந்து கொண்ட இராஜதந்திரிகள், அனைத்துலக மனித உரிமை, மனித அபிமான அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய புள்ளிகளுக்கும் வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிக்கையியில் தொகுக்கப்பட்டுள்ள முக்கிய ஒப்பீட்டை பார்வையிட இங்கே அழுத்தவும்.

Comments