ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் எதிர்வரும் 26 ஆம் திகதிய கூட்டத்தில் இலங்கை விவகாரத்தை ஆராய்வதற்கான வாய்ப்புகள் உருவாகிய போதிலும் சீனா அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருப்பதால் அந்த வாய்ப்பு தடையாகும் நிலை எழுந்துள்ளது.
இந்நிலையில், சீனா அரசாங்கத்திடம் தமிழ் மக்களின் நிலை தொடர்பில் ஐ.நாவின் பாதுகாப்புசபை கூட்டத்தில் இரண்டாவது தடைவை விவாதிக்கப்படுவதை சீனா அரசாங்கம் நிறுத்தப்போவதை பரீசீலிக்குமாறு விடுதலை புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பி.நடேசன் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டுள்ளார்.
சிறீலங்கா தமிழர்களின் இறையாண்மையை மறுப்பதோடு மட்டுமல்லாது இனஅழிவு நடவடிக்கையில் பலவேறு வடிவங்களில் முன்னெடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சீனா, ரஷ்யா மற்றும் உலகின் வல்லாதிக்க நாடுகள் சிறீலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் இனஅழிவு நடவடிக்கையை அசட்டை செய்ய வேண்டாம் எனவும் கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.
முதலில் ரஷ்யா பாதுகாப்புசபையில் இதுதொடர்பில் விவாதிக்க விரும்பவில்லை எனவும் பின்னர் பாதுகாப்புசபையில் சுருக்கமாக பேசப்பட்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
மருத்துவப்பொருட்கள், மனிதநேய விநியோகங்களை தடுத்தல் மற்றும் பொதுமக்கள் வாழும் வதிவிடங்களை வேண்டுமென்றே தாக்குதல் போன்றன யுத்த குற்றச் செயல்களாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
70 மில்லியனுக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் தமது சொந்தங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்நிலைகொண்டு ஆழ்ந்த கவலை கொண்டுள்ளனர். விடுதலைப் புலிகள் பிரதிநிதிகள் தமிழ் மக்களின் இந்நிலை தொடர்பில் சீனா அதிகாரிகளுக்கு விளக்க விருப்பமுடையர்களாக உள்ளதாகவும், சீனாவிடம் ஐ.நாவில் தமிழ் மக்களின் நிலை தொடர்பில் விவாதிக்கவேண்டும் எனவும் கோரியுள்ளனர்.
Comments