சிறிலங்கா அரசின் தமிழினப் படுகொலைக்கு எதிராக முன்னெடுக்கும் போராட்டங்களின் தொடர்ச்சியாகவே இப்புறக்கணிப்புப் போராட்டமும் நடைபெற்றது.
சிறிலங்காவினால் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் முக்கிய நுகர்வாளர்களாக இருப்பவர்கள் புலம்பெயர் வாழ் தமிழர்கள்.
தமிழர்களை இன அழிப்புச் செய்யும் சிறிலங்காவின் பொருட்கள், சேவைகளை நுகர்வதன் மூலம் தமிழர்களை அழிப்பதற்கான நிதியினை சிறிலங்கா அரசுக்கு வழங்கிக் கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலேயே 'சிறிலங்காவைப் புறக்கணிப்போம்' என்னும் இப்போராட்டம் நடத்தப்பட்டது.
பிற்பகல் 1:00 மணியளவில் தொடங்கிய இப் புறக்கணிப்புப் போராட்டத்தில் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டிருந்தது.
அங்கு நிலத்தில் விரிக்கப்பட்டிருந்த சிறிலங்கா நாட்டின் கொடியின் மேல் மக்களால் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட உற்பத்திப் பொருட்கள் கொட்டப்பட்டு பின்னர் தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
அத்துடன் அங்கு நின்றிருந்த மக்கள் அனைவரும்
- சிறிலங்காவைப் புறக்கணிப்போம்
- சிறிலங்கா பொருட்களைப் புறக்கணிப்போம்
- சிறிலங்காவின் சேவைகளைப் புறக்கணிப்போம்
எமது மக்களை நாம் பாதுகாப்போம் என்று உறுதி எடுத்துக்கொண்டனர்.
Comments