இன்னொரு புறத்தில் யுத்த நிறுத்தம் பற்றி விடுதலைப் புலிகளுக்கு மாத்திரம் சொல்லப்படுவதாக அரச ஊடகங்கள் கூறினாலும் சம்பந்தப்பட்ட நாடுகள் அந்த வேண்டுகோளை அரசுக்கும் புலிகளுக்கும் சேர்த்துவிடுப்பதாகவே அவ்வவ் விடயங்களிலிருந்து செதிகள் வருகின்றன. விடுதலைப் புலிகள் அரச நிறுவனமல்ல என்பதன் காரணமாக அதன் பெயர் முதலில் பேசப்பட்டாலும் அரசாங்கத்தின் பெயரும் அறிக்கைகளில் வரவே செகின்றது.
இவற்றை விட மிக முக்கிய விடயம் என்னவென்றால் இந்தப் பெயர்வுகளினால் பாதிக்கப்படும் மக்களுக்கு உணவு மற்றும் சுகாதார சேவைகளும் நன்கு வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் அழுத்திச் சொல்லப்படுகின்றது. உண்மையில் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் திருவாட்டி நவநீதம்பிள்ளை இந்தக் கருத்தையே கூறினார்.
திருவாட்டி நவநீதம்பிள்ளை கூறியதற்கு மேலாக மெக்சிகோ ஐ.நா பாதுகாப்பு சபையில் இலங்கைத் தமிழர் அவலம் பேசபட வேண்டுமென்று முன்வைத்தும் அதனை இரு தடவைகள் சீனா தடுத்துள்ளதும் முக்கியமான விடயங்களாகும்.
சீனாவின் இந்த நடவடிக்கை இலங்கை உறவுகளுக்கு காலோசிதமானது. இந்திய செல்வாக்கை இறைப்பதற்கு சீனா செயும் இராஜதந்திர காநகர்த்தல் என்பது தெரியப்படாமல் இல்லை. அமெரிக்க செல்வாக்கு தனது தென்கிழக்குக் கோடியில் அதிகரித்து விடுமோவென்ற பயத்தில் டில்லி பெரிதும் கவலையுறத் தொடங்கியுள்ளதென்பதும் உண்மையே.
உண்மையில் எவருமே தங்கள் காகளை மேலே நகர்த்த முடியாத (இடஞுஞிடுட்ச்tஞு) ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் செதிகளென்று வரும்பொழுது அவற்றுக்குப் பல பக்கங்கள் உண்டு. இரு வாரங்களுக்கு முன்னர் வரதராஜனென்ற டாக்டர் அதிக மருத்துவ வசதிகள் இல்லையென்ற காரணத்தினால் அங்கு செயப்படும் மருத்துவ வசதிகள் குறித்து அங்குள்ள உதவி சுகாதாரப் பணிப்பாளர் இப்பொழுது விரிவாகவே பேசத் தொடங்கியுள்ளார்.
இதிலுள்ள சுவாரசியமென்னவென்றால் தாங்கள் மேற்கொண்ட சேவைகள் பற்றி அவர் பேசுகின்ற போது அவயவங்கள் இழந்தவர்கள், குழந்தைகள், பாடசாலைக்கு செல்லாத பிள்ளைகளென்று கூறிச் செல்கின்றார்.
அவர்கள் கூறுவதில் இருந்து தான் அங்கு மக்கள் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளார்களென்ற தகவலை ஊகித்தறிந்து கொள்ளக் கூடியதாகவிருக்கின்றது. இதற்கு மேல் சர்வதேச நாணய நிதியம் யுத்தம் காரணமாக பணம் செலவிடப்படுவது குறித்துத் தனது கவனிப்பைக் காட்டியுள்ளது. அந்த நிறுவனத்திடமிருந்து பெறப்படும் பணம் குறிப்பிட்ட சில விடயங்களுக்கே பயன்படுத்தப்பட வேண்டுமென நிர்ப்பந்திப்பது போல் தெரிகின்றது. டாக்டர் விக்கிரமபாகு கருணாரட்ண கடன் ஒழுங்கு விதி பற்றிக் கூறியிருக்கும் கருத்து மிக பாரதூரமானது. அமெரிக்க தலையீட்டை ஏற்படுத்துவது பற்றி ஒரு நிபந்தனை உள்ளார்த்தமாக உள்ளதெனக் கூறுகின்றார். இலங்கையின் நிலை எவ்வகையாக பார்த்தாலும் நெருக்கடி மிகுந்த ஒரு நிலையையே காட்டுகின்றதெனலாம்.
அதிர்ஷ்டவசமாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நடைபெறும் பிரச்சினைகள் இவர்களுக்கு சிறிது உதவுகின்றது போல் தெரிகின்றது. ஆனால் அரசாங்கம் ஒரு பாரிய நெருக்கடியை சர்வதேச உறவு நிலையில் எதிர்கொள்ள வேண்டியுள்ளதென்னும் உண்மையை புறம்தள்ளிவிட முடியாத நிலையுள்ளது.
யுத்த நிறுத்தத்திலும் பார்க்க யுத்தப் பிரதேசத்திலுள்ள மக்களின் அவலம் பற்றியே வற்புறுத்துகின்றன. இவை போதாதென்று இலங்கையின் யுத்தப் பிரதேசத்தில் நடப்பது பற்றிப் பார்வையிடுவதற்கு தனது பிரதிநிதிகளை அனுப்புவது பற்றி சிந்திப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. இந்த நிலையில் அரசாங்கம் அடுத்தென்ன நடவடிக்கையை எடுப்பது என்பது பற்றி மிக ஆழமாக சிந்திப்பது தெரிகின்றது. இதிலுள்ள சோகமென்ன வென்றால் இந்த நடைமுறை சிக்கல்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்ற நிலையில் தமிழர் பிரச்சினை பற்றி அதற்கான தீர்வு பற்றி அரசாங்கத்தின் எந்த மட்டத்திலாவது சிந்திக்கப்படுவதாக தெரியவில்லை.
சிங்களவர் தமிழர் என்கின்ற இனக் குழும உணர்வுப் பிரச்சினை எம்மிடையே உண்டென ஒத்துக்கொள்ளும் அதேவேளையில் இலங்கையாகிய எமது நாடு இத்துணை சிக்கலுக்குள் மாட்டியிருக்கின்றதென்பது பற்றி சிரத்தை கொள்ளாமல் இருக்க முடியாது. இதனுடன் சேர்த்து முஸ்லிம்கள் நிலைமை பற்றிய ஒரு குறிப்பையும் கவனத்தில் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. அரசியல் பலத்துடன் வாழ்கின்ற அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் தமது நிலங்களை இழப்பது பற்றிப் பெரும் சிரத்தை கொண்டுள்ளனர் என்பதையும் மறைக்க முடியாதுள்ளது. இத்தகைய ஒரு கட்டத்திலே தான் புத்திஜீவிகளுக்கு ஒரு கடப்பாடு உள்ளது. துரதிர்ஷ்டவசமாக புத்திஜீவிகள் இடையேயும் சிங்களவர் தமிழர்கள் என்கின்ற நிலைக்கு அப்பாலே போ இலங்கையரென்று பார்க்கும் புத்திஜீவிகள் இல்லையென்றே கூறவேண்டியுள்ளது!
சிங்கள புத்திஜீவிகள் சிலர் அண்மையில் கஷ்டங்களுக்கு ஆளாகியுள்ளனர். எப்போ எந்த மட்டத்தில் இது பற்றி சிந்திக்கப்படும் என்பதற்கான தடயமில்லாமல் நாடு தவிக்கின்றது.... இலங்கையின் நிலை இதுவாக இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்கள் தமிழகத்தை மிகவும் பாரதூரமாக பாதிக்கத் தொடங்கியுள்ளது. அனைத்திந்திய பொதுத் தேர்தல் அங்கு அண்மையில் வரவுள்ளது.
இப்பொழுது அங்குள்ள கட்சி இணைவுகளில் காங்கிரஸ் தி.மு.க.ஒருபுறமாகவும், அ.இ.அ.தி.மு.க. இன்னொரு புறமாகவும் பொது உடைமைக் கட்சிகள் மூன்றாவது அணியாகவும் காணப்படுகின்றன. ஆனால் தமிழகத்தின் உள்ளூர் அரசியல் சக்திகளான திருமாவளவன், டாக்டர் ராமதாஸ், வைகோ, பழநெடுமாறன் ஆகியோர் இலங்கைத் தமிழர் பிரச்சினையை மிக முக்கியமானதாகக் கொண்டுள்ளனர்.
இந்த அணி சேர்ப்புகளுக்கு அடிப்படையான காரணம் தமிழகத்திலுள்ள சாதாரண தமிழ் மக்கள் இலங்கையின் தமிழர்களுக்காக அனுதாபப்படுகின்றனரென்பது மறுக்க முடியாத உண்மையாகும். இலங்கையிலிருந்து சென்று திருச்சி, சென்னை போன்ற இடங்களில் குழுமங்களாக குடியிருப்புகளை ஏற்படுத்தியுள்ள இலங்கைத் தமிழர்களில் பலர் தமக்கு அருகிலிருக்கும் தமிழக தமிழர்களின் பலரின் அனுதாபங்களை இழக்கும் வகையில் நடந்து கொள்கின்றரெனினும் கடல்கடந்த தமிழ் இனம் இன்னபடுகின்றது என்பது தமிழக மக்களுக்கு பெருத்த கவலையாகவுள்ளது.
காங்கிரஸுக்கு எதிராகவே இந்த அலை வீசுகின்றது போல் தெரிகின்றது. இது கலைஞரை மிக இக்கட்டான நிலைமைக்குத் தள்ளியுள்ளது. அவருக்கு ஏற்கனவே விடுதலைப் புலிகள் பற்றிய சில பிரச்சினைகள் உண்டு. எம்.ஜி.ஆருக்கும் இலங்கைத் தமிழ் இளைஞர்களுக்கும் இருந்த உறவை கருணாநிதியால் மறக்கவே முடியவில்லை. ஆனால் அவர்கள் மொழியில் சொன்னால் பட்டி தொட்டிகளிலுள்ள கழகத் தொண்டர்கள் இலங்கைத் தமிழர் நிலையை உணர்ச்சி பூர்வமாகவே பார்க்கின்றனர்.
தமிழகத்தின் அடிநிலையில் இலங்கைத் தமிழருக்கான அனுதாபம் நன்கு வே?ன்றியுள்ளது என்பதற்கு ஜெயலலிதாவின் இன்றைய நிலைப்பாடே நல்ல சாட்சி. அ.இ.அ.தி.மு.க.வே இலங்கை அரசைக் கண்டிருக்கின்றது. ஆக சுப்ரமணியசுவாமியென்கின்ற மனிதர்தான் வழக்கம் போல் தனது குரலை எழுப்பியுள்ளார். ஆனால் இலங்கையின் அரச ஊடகங்களுக்கு அலைகடலில் சிரமப்படுகின்றவனுக்குக் கிடைத்த வைக்கோல் துண்டைப் போன்று சுப்ரமணிய சுவாமியை கெட்டியாக பிடித்துக் கொள்ளப் பார்க்கின்றனர்.
வானொலிச் சேவையில் சுப்ரமணிய சுவாமியின் பெயர் அடிக்கடி பேசப்படுகின்றது. இன்றைய நிலையில் தமிழகத்தின் இந்த அரசியல் கொந்தளிப்புகள் டில்லியின் ஸ்திரப்பாட்டுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளன. முன்னர் கூறியபடி டில்லி அரச அலுவலகத்தின் தெற்குப் பகுதி கட்டிடத் தொகுதிக்குள் கடமையாற்றும் உயர்பதவி வகிக்கும் பிராமணிய உத்தியோகத்தருக்கு பொதுவான தமிழ் உணர்வுக்கு எதிராக அவர்கள் செயும் மௌன காநகர்த்தல்களுக்குத்தான் பலியாகிவிடுவேனோ என்று பயப்படும் அளவுக்கு கருணாநிதி வந்துள்ளார். இவையெல்லாம் முக்கியமான அரசியற் சுழிகள் அடுத்த நிமிடம் எங்கே எப்படித் தள்ளுமென தெரியாது. ஆனால், இலங்கைத் தமிழர்களின் அவலக்குரல் கேட்கப்படுகின்றது. அவர்களின் கண்ணீர் தெரிகின்றது.
""தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்; கருகத் திருவுளமோ?'
பாரதியார்
-பீஷ்மர்-
Comments