புலிகளுக்கு ஆதரவளிப்பதையே பெரும்பான்மைத் தமிழகம் விரும்புகின்றது: என்.டி.ரி.வி கருத்துக்கணிப்பின் வெளிப்பாடு
![](http://www.puthinam.com/d/p/2009/apr/lr/ndtv_1.jpg)
இந்தியாவின் முன்னணித் தொலைக்காட்சி நிறுவனமான என்.டி.ரி.வி. நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பிலேயே இந்தப் பெறுபேறுகள் வெளியாகியிருக்கின்றன.
இந்திய அரசாங்கம் விடுதலைப் புலிகளை ஆதரிக்க வேண்டுமா என்ற கேள்விக்குப் பதிலளித்தவர்களில் 66 வீதமானவர்கள் "ஆம்" எனக் கூறியிருக்கின்றனர் என நேற்று செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட என்.டி.ரி.வி.யின் இந்த கருத்துக் கணிப்பு முடிவு தெரிவிக்கின்றது.
இதேவேளையில் தமிழக அரசியல் விவகாரங்களைப் பொறுத்தவரையில் அடுத்த முதலமைச்சர் பதவிக்கு, முதலமைச்சர் கருணாநிதிக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவி ஜெயலலிதாவுக்கும் இடையில் கடுமையான நேரடிப் போட்டி இருக்கும் என்பது போலவும் இந்த ஆய்வில் தெரியவந்திருக்கின்றது.
தற்போதைய நிலையில், கருணாநிதிக்கு 41 வீதமானவர்களும் ஜெயலலிதாவுக்கு 40 வீதமானவர்களும் ஆதரவளித்திருப்பதாக என்.டி.ரி.வி.யின் இந்த கருத்து கணிப்பு முடிவு காட்டுகின்றது.
Comments