எமது தமிழீழ விடுதலைப் போராட்டம் அடுத்த கட்ட பரிணாமமாக மக்கள் தன்னெழுச்சி போராட்டமாக எழுச்சிபெற்று வருகின்றது.தமிழீழம் என்றதனி நாடொன்றில் தான் தமிழர்கள் சுதந்திரத்தடனும், மகிழ்ச்சியுடனும், கௌரவத்துடனும் வாழமுடியுமென்ற முடிந்த முடிவான எமது ; தீர்மானத்தின் வடிவாக இன்று உலக நாடுகள் எங்கும் நாம் உறுதியுடன் முன் வைக்கும்….
(1) தமிழீழ விடுதலைப்புலிகள் எமக்காக போராடும் தமிழர்களின் இராணுவம் அவர்கள் வேறு நாங்கள் வேறல்ல எங்களிலிருந்தே அவர்கள் உருவானவர்கள் எனவே „தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை உலக நாடுகள் நீக்க வேண்டும் என்றும்;,
(2) தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழர்களின் உரிமைக்காக போராடும் தமிழ்மக்களின் ஏகோபித்த தலைவர் என்றும்,
(3) எமக்கான ஒரு நாடான தமிழீழத்தில் மட்டுந்தான் பயமற்று மகிழ்வுடனும், சுதந்திரத்துடனும், கௌரவத்துடனும், மானத்துடனும் நிறைவான வாழ்க்கையை வாழ முடியுமென்று என்றும் எம்மவர்களின் பிரகடனங்களைக் கண்டு இலங்கை அரசு தடுமாறத் தொடங்கியுள்ளது. தமிழர்களாகிய நாங்கள் தான் எங்கு எவரின் ஆட்சியின் கீழ் வாழ வேண்டும் என்று தீர்மானிப்பவர்கள்.எமது உரிமையை நாமே முதலில் அங்கீகரிப்பவர்கள்.
இவ்வெழுச்சி காரணமாக தமிழர்களையும் தமிழீழ விடுதலைப்புலிகளையும் வேறு வேறாக பார்க்க முடியாத நிலையை உலகிற்கு நாம் ஏற்படுத்தியுள்ளோம். மிரண்டு போன இலங்கையரசு உலகத்தமிழர்களின் தன்னெழுச்சியை சிதைக்க தனது ஒட்டுக்குழுக்களின் துணையை நாடியுள்ளது.
ஓட்டுக்குழுக்கள் இப்போதைக்கு வன்னியில் தடைமுகாம்களில் வாழும் எம்முறவுகளைப் பகடைக்காய்களாக பயன்படுத்துகின்றனர்.
தடைமுகாம்களுக்குச் செல்லும் ஒட்டுக்குழுக்கள் அங்குள்ள எம்மக்களின் பரிதாபகரமான நிலையை சாதகமாக பாவித்து அங்குள்ள எம்மக்களின் வங்கிக் கணக்குக்கு வெளிநாட்டு உறவினர்களைக் கொண்டு பணத்தை அனுப்பி வைக்கும்படி நிர்பந்திக்கப்படுகின்றனர்.அவர்களின் இக்கட்டான சூழ்நிலையும் அவர்களை வெளிநாடுகளுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பணம் அனுப்பி வைக்கும்படி கூறும் நிலை ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள எம்மக்கள் நிர்பந்திக்கப்பட்டும் மிரட்டியும் அவர்களின் பெயர்களிலுள்ள காசோலைகளில் கையொப்பமிட வைக்கின்றனர்.ஒட்டுக்குழுக்களால் எடுக்கப்படும் இப்பணம் அவர்களுக்காகவும் இராணுவத்திற்காகவும் பயன்படுத்தப்படுத்தப்பட போகின்றது என்பதை வெளிநாடுகளில் வாழும் எம்மவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமென வேண்டுகிறேன்.
எனவே வெளிநாடுகளில் இருக்கும் உறவுகள் தயவு செய்து தடை முகாம்களிலிருந்து பணம் வேண்டி வரும் தொலைபேசிகளுக்கு எச்சரிக்கையுடனும் அவதானத்தடனும் நடந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்.எம்பணமே எம்முறவுகளுக்கு மேல் குண்டு போடும் நிலையை உருவாக்கும்.எனவே ஒட்டுக்குழுக்கள் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். பெரியவர்களே இத்தகைய தொலைபேசி அழைப்புக்களுக்கு பதிலளியுங்கள்,கையாளுங்கள்.
ஓட்டுக்குழுக்களின் இத்தகைய அணுகுமுறை இப்போதைக்கு இடைத்தங்கள் முகாமில் அணுகப்பட்டாலும் இவை யாழ் குடாநாடு உட்பட நாடெங்கும் அணுகப்படும் என அறியப்படுகின்றது.
பெரும் பொருளாதாரச் சரிவில் அகப்பட்டுக் கொண்ட இலங்கையரசு தமிழர் மீதான இன அழிப்புப் போரை நடத்த முடியாத நிலையிலும் நடத்த வேண்டிய நிலையிலும் இனவாத சகதியில் தத்தளித்து தடம்புரண்டு இரண்டும் கெட்டானாக திண்டாடுகின்றது.
இலங்கை என்றுமில்லாதவாறு பொருளாதார நெருக்கடியையும் சிங்கள மக்களின் சீற்றத்திற்கும் ஆளாகப் போகின்றது.போர் என்ற போதையிலிருந்து சிங்கள மக்கள் விழித்துக் கொள்வார்கள். தமிழீழ விடுதலைப் போர் தமிழீழ மக்களின் மக்கள் போராகபுரட்சி வடிவம் பெற்றுள்ளது.எனவே ஒட்டுக்குழுக்கள் பற்றி கவனமாக இருக்குமாறு வேண்டுகிறோம்.
Comments