அனைத்துலகத்தின் அசைவுகளும் உக்கிரமடைந்துவரும் களமுனையும்

வன்னியில் மோதல்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்ற அதேசமயம் இராணுவம் அதிக படையினரை புதுக்குடியிருப்பு களமுனையை நோக்கி நகர்த்தி வருகின்றது.

40,000 படையினரை புதுக்குடியிருப்பு மீதான தாக்குதலுக்கு நேரடியாக களமிறக்கியுள்ள அரசாங்கம், வன்னியின் பின்னணி நிலைகளை தக்கவைக்கும் பொருட்டு 30,000 படையினரை நிறுத்தியுள்ளது. அதாவது வன்னி நடவடிக்கையின் தற்போதைய படை பலம் 70,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக கடந்த வாரம் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தி ருந்தார்.

இருந்த போதும் அங்கு மோதல்கள் உக்கிரமாக நடந்து வருகின்றன. இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து புதுக்குடியிருப்பு மீது 10 தடவைகளுக்கு மேலாக இராணுவம் அலை அலையாக தனது தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது. படையினரின் இந்த நடவடிக்கைகளுக்கு உதவியாக 35 இற்கு மேற்பட்ட ரீ55 ரக டாங்கிகளும் பயன்படுத்தப்பட்டிருந்தன. செறிவான பீரங்கி மற்றும் மோட்டார் எறி கணை வீச்சுகளும் இடம்பெற்றுள்ளன.

தென்பகுதியால் புதுக்குடியிருப்பு சந்தியை கைப்பற்ற முனைந்த 53 ஆவது படையணியும், நடவடிக்கை படையணி எட்டும் உக்கிர மோதல்களை எதிர்கொண்ட நிலையில் கடந்த வாரம் 58 ஆவது படையணியின் 7 பற்றõலியன் படையினர் தேவிபுரம் ஊடாக நகர்ந்து இரணைப்பாலை பகுதியை கைப்பற்ற முனைந்திருந்தனர். இந்த டிவிசன் 12 பற்றாலியன்களை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

58 ஆவது டிவிசனின் 11 ஆவது சிலோன் இலகுகாலாட்படை பற்றாலியன், 7 ஆவது சிங்க றெஜிமென்ட் பற்றாலியன், 8 ஆவது, 10 ஆவது 12 ஆவது மற்றும் 20 ஆவது கஜபா றெஜிமென்ட் பற்றாலியன்கள், 9 கெமுனுவோச் பற்றாலியன் ஆகிய படையணிகள் இரணைப்பாலை சந்தியை நோக்கி கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட நகர்வு முயற்சிகளுக்கு எதிராக விடுதலைப்புலிகள் கடுமையான எதிர்த்தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

கடந்த வாரம் நடைபெற்ற மோதல்களைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை 18 தடவைகளும், வியாழக்கிழமை 8 தடவைகளும் வான்படையின் மிகையொலி விமானங்கள் புதுக்குடியிருப்புப் பகுதி மீது தாக்குதல்களை நடத்தியுள்ளன.
ஏறத்தாழ 35 சதுர கி.மீ பரப்பளவுள்ள விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகள் மீது இவ்வாறு மேற்கொள்ளப்படும் செறிவான பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களால் அங்கு வாழும் மக்களும் பாரிய இழப்புக்களை தினமும் சந்தித்து வருகின்றனர்.

ஜனவரி மாதம் 20 ஆம் நாளில் இருந்து மார்ச் 7 ஆம் நாள் வரையில் அங்கு இடம்பெற்ற தாக்குதல்களில் 2683 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 7241 பேர் படுகாயமடைந்துள்ளதாக ஐ.நா. சேகரித்துள்ள தகவல்கள் தெரிவித்துள்ள போதும் அவை வெளியிடப்படவில்லை என கூடஞு ஐணணஞுணூ இடிtதூ கணூஞுண்ண் கடந்த புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இந்தத் தகவல்களை மறைப்பதன் மூலம் அனைத்துலக சமூகம் ஒருதலைப்பட்சமாகவும், பாரபட்சத்துடனும் நடந்து கொள்வதான குற்றச்சõட்டுக்களும் எழுந்துள்ளன. இருந்த போதும் போரில் ஈடுபடும் இரு தரப்பும் போர்க்குற்றங்களை மேற்கொண்டு வருவதாக ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்த கருத்துக்கள், வன்னியில் உடனடியான போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் என்பன அரசுக்கு அனுகூலமானதல்ல.

அனைத்துலகத்தின் இந்த சிறிய அசைவுக்கு அனைத்துலகத்தில் ஒன்றிணைந்து வரும் தமிழ் மக்களின் ஒருமித்த போராட்டங்களே காரணம் என்பது இராஜதந்திர வட்டாரங்களின் கருத்தாக உள்ளது. வன்னியில் தற்போது உக்கிரமடைந்துள்ள சமர் மேலும் இழுபட்டு சென்றால் அனைத்துலகத்தின் போக்கில் மேலும் மாற்றங்கள் நிகழலாம் என்ற அச்சங்களும் அரசுக்கு உண்டு. எனவே எதிர்வரும் சித்திரை புதுவருடத்திற்கு முன்னர் களமுனையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்த அரசு தீவிர நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றது.

இதேவேளை படையினரின் நடவடிக்கைகளை நெறிப்படுத்தும் நோக்கத்துடன் கடந்த வியாழக்கிழமை இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா வவுனியா இராணுவத் தலைமையகத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். தற்போதைய மோதல்களைப் பொறுத்தவரையில் அவை புதுக்குடியிருப்பின் முன்னணி நிலைகளில் மட்டும் நிகழவில்லை. படையினரின் பின்னணி நிலைகளுக்குள்ளும் பரவியுள்ளதாகவே படைத்தரப்பு தகவல்களின் மூலம் அறிய முடிகின்றது.

கடந்த 18 ஆம் திகதி 57 ஆவது படையணி நிலைகொண்டுள்ள விசுவமடு, புளியம்பொக்கணை பகுதிகள் மற்றும் நடவடிக்கை படையணி இரண்டு, மூன்று என்பன நிலைகொண்டுள்ள உடையார்கட்டு பிரதேசங்களிலும் மோதல்கள் இடம்பெற்றுள்ளதாக இராணுவத் தலைமையகம் தகவல் வெளியிட்டிருந்தது.
மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் வன்னிப் பகுதியை தக்கவைப்பதற்கு மேலதிக படையினர் தேவை என்ற நிலை இராணுவத்திற்கு ஏற்பட்டுள்ளது. இலங்கை இராணுவம் 2005 ஆம் ஆண்டு போர் உக்கிரமடைவதற்கு முன்னர் 09 டிவிசன்களை கொண்டிருந்தது. ஆனால் அது தற்போது 19 படையணிகளை (11 டிவிசன்கள், 8 நடவடிக்கை படையணிகள்) கொண்டுள்ளது. அதாவது 100 வீதத்திற்கு மேற்பட்ட அதிகரிப்பு.

அதிகரிக்கப்பட்ட இந்த 19 படையணிகளில் முன்னணியான 5 டிவிசன்களும், 8 நடவடிக்கை படையணிகளும் வன்னி களமுனையில் உள்ளன. அவற்றுடன் கவசத்தாக்குதல் படையணி, கவசப்படை பிரிகேட் என்பவற்றுடன், 2500 இற்கு மேற்பட்ட வான்படையினரும் வன்னி களமுனைக்கே நகர்த்தப்பட்டுள்ளனர். 2005 ஆம் ஆண்டு 19,000 பøடயினரை கொண்டிருந்த இலங்கை வான்படை தற்போது 35,000 பேரை கொண்டுள்ளது.

அவர்களில் பெரும்பாலானவர்கள் தரை நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படுகின்றனர். திருமலையின் பெரும் பகுதிகளின் பாதுகாப்புக்கள் வான்படையினர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தற்போது ஓமந்தை மணலாறு நெடுஞ்சாலைக்கான பாதுகாப்பும் சிறப்பு அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்
டுள்ளது. வன்னி நடவடிக்கையை பொறுத்த வரையில் 59 ஆவது டிவிசன் முல்லைத்தீவு பகுதியில் நிலைகொண்டிருக்க 53 ஆவது படையணியும், நடவடிக்கைப் படையணி எட்டும் புதுக்குடியிருப்புக்கு தெற்காக நட வடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. அதற்கு அப்பால் நடவடிக்கை படையணிகள் மூன்று மற்றும் இரண்டு என்பன நிலைகொண்டுள் ளன. நடவடிக்கை படையணி நான்கு முத் தையன்கட்டு குளப் பகுதியில் நிலைகொண் டுள்ளது.

கிளிநொச்சி, விசுவமடு மற்றும் புளியம்பொக்கணை பகுதிகளில் 57 ஆவது டிவிசன் நிலைகொண்டிருக்க, 58 ஆவது படையணி தேவிபுரம் ஊடாக இரணைப்பாலை சந்தியை நோக்கி நகர்வில் ஈடுபட்டு வருகின்றது. இந்த படையணியுடன் இரண்டாவது கொமாண்டோ பற்றாலியன் இணைக்கப்பட்டுள்ளது. 55 ஆவது படையணி சாலை பகுதியில் நிலைகொண்டுள்ளது.

இந்தப் படையணிகளை விடுத்து பின்னணி களமுனைகளை கருதினால் 61 ஆவது டிவிசன் கல்மடு பகுதியில் நிலைகொண்டுள்ளது. நடவடிக்கை படையணி ஐந்து துணுக்காய் மல்லாவி பகுதியிலும், நடவடிக்கை படையணி6, பூநகரியிலும், நடவடிக்கை பøடயணி7 ஆனையிறவிலும் நிலைகொண்டுள்ளன. இந்தப் படையணிகள் தலா இரண்டு பிரிகேட்டுக்களுடன் இயங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

யாழ்.குடாநாட்டை பொறுத்தவரையில் அங்கு 51 மற்றும் 52 ஆவது டிவிசன்கள்
நிøலகொண்டுள்ளன. இந்தப் படையணிக ளில் 52 ஆவது படையணியின் இரண்டு பிரிகேட்டுக்கள் 55 ஆவது படையணிக்கு உத வியாக சாலை பகுதிக்கு நகர்த்தப்பட்டுள் ளன. இருந்த போதும் யாழ்குடாநாட்டின் பாதுகாப் புக்களுக்காக கடற்படையினர் அதிகளவில் தரை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள் ளனர்.
இலங்கையின் படை வளங்களில் 19 டிவிசன் படையணிகளில் 2 படையணிகளை தவிர ஏனைய 17 படையணிகளும் வடபகுதியிலேயே குவிக்கப்பட்டுள்ளன.

அதிலும் வலிமையான 9 படையணிகள் புதுக்குடியிருப்பை சுற்றி நிறுத்தப்பட்டுள்ளதுடன், வன்னியில் ஏனைய பகுதிகளில் 6 படையணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் இலங்கை இராணுவத் தின் கவசத்தாக்குதல் படையணி, இரண்டாவது கொமாண்டோ றெஜிமென்ட், மூன்றாவது சிறப்பு படையணி, பீரங்கி படையணி என்ப னவும் புதுக்குடியிருப்பு களமுனையில் தான் நிலைகொண்டுள்ளன.

மறுபுறம், புதுக்குடியிருப்பு களமுனையை தவிர்ந்த ஏனைய பகுதிகளை

தக்கவைக்க நிறுத்தப்பட்டுள்ள படையினரின் பலம் தொடர்பாகவும் படைத்தரப்பில் பலத்த வாத பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன. ஏ9 நெடுஞ்சாலையை பயன்படுத்துவதற்கும் அதிக படை வளங்கள் தேவை. ஓமந்தையில் இருந்து ஆனையிறவு வரையிலும் பதுங்குழிகளை அமைப்பதற்கு படைத்தரப்பு திட்டமிட்டுள்ள போதும் அது எவ்வாறு சாத்தியமாகும் என்பதும் சந்தேகமே.
வன்னி களமுனை தோற்றுவித்து வரும் இவ்வாறான போர்க்கள நெருக்கடிகள், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தற்போதைய படை நடவடிக்கை மேலும் சில மாதங்கள் இழுபட்டு சென்றால் மேலும் அதிக நெருக்கடிகளை ஏற்படுத்தலாம் என்பதை அரசாங்கம் உணரத்தலைப்பட்டுள்ளது.

உள்ளூரில் ஏற்படும் இந்த நெருக்கடிகளுக்கு அப்பால் அனைத்துலகத்தில் ஏற்பட்டுவரும் மாறுதல்களும் கவனத்தில் கொள்ளத்தக்கவை. எனவே தான் எதிர்வரும் சித்திரைப் புதுவருடத்திற்கு முன்னர் களமுனையில் ஒரு
திருப்பத்தை ஏற்படுத்திவிடும் நோக்கத்துடன் அரசு தனது முழு படை வளங்களையும் வன்னிக்கு நகர்த்தியுள்ளதுடன், மோதல்களையும் தீவிரப்படுத்தி வருகின்றது.

- வேல்ஸிலிருந்து அருஷ்

Comments