மாலை 4 மணிக்கு பாரிஸ் நகரின் போர்த் து வேர்சாய் என்னும் இடத்தில் ஆரம்பித்த இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில், சிறீலங்கா அரசிற்குப் பாரியளவு வருமானங்களை ஈட்டித்தரும் வழிகளில் ஒன்றான சிறீலங்கன் எயர்லைன்ஸ் விமான சேவையை அனைவரும் புறக்கணிக்கவேண்டும் என்னும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இக் கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்பாக அதில் கலந்து கொண்டவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
பொருளாதார வீழ்ச்சியில் உலக நாடுகள் பலவும் தடுமாறிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், தமிழர்கள் மீதான போரிற்குத் தேவைப்படும் நிதியைத் திரட்டிக்கொள்ளும் ஓர் வழியாகவும் சிறீலங்கன் விமானசேவை காணப்படுகின்றது. ஆதலால் இவ் விமான சேவையை அனைவரும் புறக்கணிப்பதன் மூலம் ஓர் இனவழிப்பு நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த முடியும் எனத் தெரிவித்தனர்.
இப் புறக்கணிப்புக் கவனயீர்ப்புப் போராட்டத்தின் போது அப்பகுதியில் பிரான்ஸ் தமிழ் இளையோரினால் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது. அத்துடன் பாதையோரத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த பதாகையும் வைக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments