சிங்கள இராணுவத்தின் மிருகத்தனமான வெறிச் செயலை தட்டிக் கேட்ட எவருமில்லையா - லிம் குவான் ஹெங்

சிங்கள இராணுவத்தின் மிருகத்தனமான வெறிச் செயலையும், அட்டூழியத்தையும் தட்டிக் கேட்ட எவருமில்லையா? என மலேசியாவின் பினாங்கு மாநில முதலமைச்சர் லிம் குவான் ஹெங் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈழத் தமிழர் துயர் துடைப்பு நிதியாக பினாங்கு மாநில அரசாங்கத்தின் சார்பில் நிதி திரட்டும் பணியில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவிக்கையில்

சிங்கள இராணுவம் மிருகத்தனமாக பீரங்கி தாக்குதலை மேற்கொண்டு தமிழர்கள் படுகொலை செய்யப்படுவருகின்றனர். இது மிகவும் கொடுமையான விடயமாக கருதுவதாக மலேசியாவின் பினாங்கு மாநில முதலமைச்சர் லிம் குவான் ஹெங் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர் விடயத்தில் அனைவரும் மௌனம் சாதிக்கின்றனர். ஏன் இந்த நிலைமை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்வாறு படுகொலை செய்யப்படுவதனை வெறுமனே வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது. ஏதாவது செய்தாக வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் பினாங்கு மாநில ஜனநாயக செயல் கட்சி இந்த மாபெரும் நிதித் திரட்டும் செய்ததாகவும் லிம் குவான் ஹெங் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக பினாங்கு மாநில அரசு சார்பாக 15 ஆயிரம் ரிங்கிட்டுகளை வழங்கப்பட்டுள்ளது. மற்றொரு இடத்தில் மேற்கொள்ளப்பட்ட நிதி திரட்டும் நிகழ்வில் 73 ஆயிரத்து 960 ரிங்கிட்டுகள் நிதியாக திரட்டப்பட்டுள்ளன.

திரட்டப்படும் நிதி உலக தமிழர் நிவாரண நிதியத்தில் சேர்க்கப்பட்டு பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் நலனபுரி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

தமிழர்கள் மீது மேற்கொள்ளப்படும் படுகொலையை தடுத்து நிறுத்துவதற்கு விரைவில் கோலாலம்ரில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் மகஜர் ஒன்றை கையளிக்க உள்ளதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசரியர் பி. ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments