ஆனையிறவில் புலிகள் ஊடறுத்து தாக்குதல

tamiltigerdm0306_468x252புதுக்குடியிருப்பில் இருந்து மும்முனைகளில் பாரிய முன் நகர்வொன்றை மேற்கொண்ட இராணுவத்தினர், பாரிய இழப்புக்களை சந்தித்து பின் நகர்த்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஞயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமான இச் சமரில் இதுவாரை 604 கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன் 750 பேர்வரை காயமடைந்துள்ளதாக அறியப்படுகிறது. இதனிடையே ஊர்ஜிதமற்ற தகவலின் படி புலிகளின் சிறப்பு படையனி ஒன்று ஆனையிறவு பகுதிக்குள் ஊடுருவி கடும் தாக்குதல் தொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த படையினர் முதலில் மன்னார் வைத்திய சாலைக்கு அனுப்பப்பட்டதாகவும், பின்னர் இடப் பற்றாக்குறை காரணமாக வவுனியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும், தற்போது அங்கும் இடப் பற்றாக்குறை காரணமாக கொழும்புக்கு அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சற்று முன்னர் கொழும்பில் அம்புலன்ஸ் வண்டிகள் விரைந்து சென்று கொண்டிருப்பதாக எமது கொழும்பு நிருபர் தெரிவித்தார். இலங்கை இராணுவத்தின் பலம் மிக்க படையணிகளான 58, 57 மற்றும் Taskforce 1 படைப்பிரிவுகளில் கணிசமான படையினர் இறந்தும் காயப்பட்டும் களத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது அனுபவம் மிக்க இராணுவத்தினர் இப் படையணிகளில் இல்லை.

ஆட்பலத்தால் அதிகரித்து நிற்கும் இராணுவம் அனுபவமற்றவர்களாக தற்போது இருப்பதும், விடுதலைப் புலிகளில் பல போர்க்களங்களை கண்ட அனுபவம் மிக்கவர்கள் இருப்பதால், தகுந்த நேரத்தில் தற்போது பதிலடி கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று மட்டும் 13 தடவைகள் கிபீர் விமானங்கள் புதுக்குடியிருப்பு பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது, இதன் சேத விபரங்கள் இன்னும் தெரிய வரவில்லை.

அத்துடன் பாரிய இளப்புக்களை சந்தித்துள்ள இராணுவத்தினர் தற்போது கடும் எறிகணைத் தாக்குதல்களை தொடுத்திருப்பதாகவும் புதுக்குடியிருப்பு அம்பலவானன் பொக்கணை, மற்றும் மத்தளான் பகுதிகள் அதிர்ந்தவண்ணம் உள்ளதாக களமுணைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments