வன்னி நிலப்பரப்பிலிருந்து இடம்பெயர்ந்து. சிறிலங்கா படையினரால் வவுனியா வதை முகாங்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பெண்கள் தினம் தோறும் சிறிலங்கா படையினராலும், ஈ.பி.டி.பி, புளொட் ஒட்டுக்கும்பல்களினால் பாலியல் சித்திரவதைகளுக்கு உட்பட்டிருப்பதாக, வவுனியா வதை முகாமில் பணியாற்றி விட்டு விடுமுறையில் திரும்பிய முஸ்லீம் பொலிஸார் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
தினம் தோறும் இரவு நேரங்களில் வதை முகாங்களுக்கு வரும் சிறிலங்கா படைத்துறை அதிகாரிகளும், ஒட்டுக்கும்பல்களும் பெண்களை விசாரணை எனும் பெயரில் பிடித்துச் செல்வதாகவும், அப்பெண்கள் சிறிலங்கா படை முகாங்களில் படையினரால் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதாகவும், அச்சித்திரவதைகளில் இறக்கும் பெண்களை காட்டுப் பகுதிகளில் கொண்டு சென்று புதைத்து விடுவதாகவும், தப்பிப் பிழைக்கும் பெண்களை வேறு வதை முகாங்களில் அடைத்து சித்திரவதை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வதை முகாங்களில் அடைக்கப்பட்டிருக்கும் உறவினர்களுக்கு, புலம்பெயர் தேசங்களில் இருந்து அனுப்பப்படும் பணங்களை ஒட்டுக்கும்பல்கள் ஈபிடிபி, புளொட் ஆகியன போட்டியிட்டு கப்பங்களாக அறவிட்டு வருவதாகவும், அவ்வதை முகாங்களில் இருக்கும் மக்களிடம், அவர்களின் உறவினர்கள் புலம்பெயர் தேசங்களில் இருக்கும் விபரங்களையும் ஒட்டுக்கும்பல்கள் சேகரித்து வருவதாகவும் தெரிகிறது.
Comments