![](http://www.tamilwin.org/photos/thumbs/eelam/others/lttelogo.gif)
இது தொடர்பாக புலிகள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
நேற்று அதிகாலை வேளையில் மாத்தளன் பகுதியிலிருந்து பொதுமக்கள் 4 படகுகளில் பயணித்துக் கொண்டிருக்கையில் கடற்படையினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இவற்றில் இரு படகுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. இதில் பயணித்த பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் சடலங்களைக் கைப்பற்றிய கடற்படையினர் அதனை விடுதலைப்புலிகளின் சடலங்கள் என பொய்கூறி வருகின்றனர்.
பொதுமக்கள் மீது தாக்குதலை நடாத்திவிட்டு விடுதலைப் புலிகளுடன் கடும் சமர் இடம்பெற்றதாக அரச ஊடகங்களில் உண்மைக்கு மாறான பொய் தகவல்களை கடற்படைப் பேச்சாளர் வெளியிட்டுள்ளதாக விடுதலை புலிகள் தெரிவித்துள்ளார்கள்.
Comments