அமெரிக்கா - இந்தியா - சீனா: மாற்றமுறும் விசை இயக்கமும் எழுச்சிபெறும் இரு முனை உலகமும்

"சீனாவுடனான எமது (அமெரிக்கா) தொடர்பு உலகில் இந்த நூற்றாண்டில் இரு நாடுகளுக்கிடையேயான மிக முக்கிய உறவாக அமையும்.

அமெரிக்காவும் சீனாவும் ஒருவரிடம் இருந்து மற்றவர் பயன் பெறவும் ஒருவரின் வெற்றிக்கு மற்றவர் பங்களிக்கவும் முடியும் என நாம் நம்புகிறோம்.

எம் இருவருக்கும் உள்ள பொதுவான பிரச்சனைகளிலும், நாம் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்புக்களிலும்

கடுமையாக உழைப்பது எமது நலன்கள் சம்பந்தமானவையாகும்" அமெரிக்க அரச செயலாளர் கிலாரி கிளின்ரன். (US Secretary of State Hillary Clinton)

1983 ஆம் ஆண்டு எதிர்பாராதவாறு கேம்பிறிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சர்வதேச உறவுகள் சம்பந்தமான விரிவுரை ஒன்றில் நான் கலந்துகொண்டிருந்தேன். யேர்மனியில் இருந்து வந்த அதிதிப் பேராசிரியர் ஒருவரால் இந்த விரிவுரை நிகழ்த்தப்பட்டது. அவரின் பெயரை நான் மறந்துவிட்டேன். ஆனாலும் அவரால் சொல்லப்பட்ட சிலகாரியங்கள் கடந்த பல ஆண்டுகளாக என்னோடு நிலைத்துவிட்டது.

"இருமுனை உலகுஇ முடிவில் ஒருமுனை உலகாக மாறும் என வரலாறு காட்டுகிறது. அதன்பின் ஒருமுனை உலகு பலமுனை உலகிற்கு இட்டுச் செல்லும். அந்தப் பலமுனை உலகில் இருந்து ஒரு புதிய இருமுனை உலகு உருவாகும். அதன்பின் அந்த இருமுனை உலகானது இன்னொரு ஒருமுனை உலகிற்கு வழிவிடும் ....இப்படியாக" எனக் கூறினார்.

1983 இல் அவர் பேசியபோது நாம் அமெரிக்காஇ சோவியத்யூனியன் என்னும் இரு வல்லரசுகளைக்கொண்ட இருமுனை உலகில் வாழ்ந்துகொண்டிருந்தோம். மற்றைய நாடுகள் தம்மை "அணிசேரா நாடுகள்" எனக் கூறிக்கொண்டாலும்சரி கூறாவிட்டாலும்சரி தமக்கு ஆதரவாக இரு வல்லரசுகளில் ஒன்றில் குறைந்த அளவோ கூடிய அளவோ சார்ந்திருந்தனர்.

1991 இல் சோவியத்யூனியனின் உடைவுடன் உலகின் ஏக வல்லரசான அமெரிக்காவுடனான ஒருமுனை உலகின் வெளிப்பாட்டினை நாம் கண்டோம். புதிய அமெரிக்க நூற்றாண்டிற்கான 2000 ஆம் ஆன்டுத் திட்டம் .( வுhந Pசழதநஉவ கழச வாந நேற யுஅநசiஉயn ஊநவெரசலஇ 2000) அந்த ஒருமுனை உலகில் அமெரிக்காவின் ஆட்சிஇ ஆதிக்கம் செலுத்தும் என்னும் காட்சியை வெளிப்படுத்தியது.

"அமெரிக்கப் புவிசார் அரசியலின் முதன்மைக்கு அமெரிக்க இராணுவ மேலாண்மைக்கான தரைப்படை வலுமை அந்தச் சங்கிலியின் முக்கியமான இணைப்பாகும். தென்கிழக்கு ஆசியாவில் ஐதாகப் பரந்துள்ள அமெரிக்கப் படையினர் அங்கு எழும் பாதுகாப்புத் தேவைகளை போதுமான அளவில் பூர்த்திசெய்ய முடியாது. தென்கிழக்கு ஆசியாவிற்கான எமது பாதுகாப்பு உத்தரவாதம் தொடர்பற்றதாகவும் அமெரிக்க இராணுவத்தின் இருப்பு தவணை சார்ந்ததாகவும் அமையின் அமெரிக்காவின் பிராந்தியத் தலைமைக்கானஇ சீனாவின் அச்சுறுத்தலை எந்தவிதமான அமெரிக்க வியூகத்தாலும் கட்டுப்படுத்த முடியாது. இதற்காகத் தென்கிழக்கு ஆசியாவில் கூடிய அளவிலான கடற்படை அத்தியாவசியமாயினும் அதுமாத்திரம் போதாது. நடைமுறைக் காரணிகளுக்காகவும் அரசியல் காரணிகளுக்காகவும் விரைவாக இயங்கக்கூடிய தரைப்படை மற்றும் வான்படையின் இருப்பு வேண்டப்படுகிறது.

இன்றைய சமாதானம் அமெரிக்காவின் அதி முதன்மையின் ஒரு தனித்துவமான ஒரு பொருளாக இருப்பதால்இ அந்த ஒப்புயர்வற்ற நிலைப்பாட்டை பாதுகாக்கத் தவறின் மற்றவர்களுக்குஇ அமெரிக்காவின் நலன்களுக்கும் கொள்கைகளுக்கும் முரணான வகையில் உலகை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்பைக் கொடுப்பதாக அமையும். உலகத்திற்கு தலைமைதாங்குவது என்பதுஇ எங்களின் மனநிலைக்கேற்ப அல்லது எங்களின் அடிப்படைத் தேசிய பாதுகாப்கபுக்கான நலன்கள் நேரடியான அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போதுஇ ஓய்வு நேரத்தில் செய்யப்படும் காரியம் ஒன்றல்ல. அவ்வாறு இடம் பெறுமாயின் அது மிகவும் பிந்திய காரியமாகும். மாறாக அமெரிக்காவின் புவிசார் அரசியலுக்கான தலைமையைப் பெற்றுக்கொள்வதற்கும் அமெரிக்க சாமாதானத்தை பாதுகாப்பதற்குமான அமெரிக்க இராணுவத்தின் முதன்மையை நிலை நிறுத்துவதா இல்லையா என்ற தெரிவே இது."

2001 இல் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி ஜோர்ஸ் .டபிள்யூ. புஷ் இஅமெரிக்க இராணுவ முதன்மையையும் அமெரிக்க புவிசார் அரசியலுக்கான தலைமையையும் நிரந்தரமாகப் பெற்றுக் கொள்வதற்கான அமெரிக்க மேலாதிக்கக் கொள்கைகளை வலியுறுத்தினார்.

"ஜனாதிபதி புஷ் அவர்களின் நிர்வாகத்தினால் ஏற்படுத்தப்பட்ட வீறார்ந்த வியூகம் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்திற்கும் அப்பாற்பட்டது. அது ஒருமுனை உலகில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் இராணுவக் கொள்கை பற்றிய தீவிரமான மறுபரிசீலனை பற்றியது. அமெரிக்க உயர் அதிகாரிகள் விளக்குவதுபோல் தமக்கு ஒப்பான போட்டியாளர் எழுச்சி பெறுவதை தடுப்பதற்கான கொள்கைகளை வகுப்பதிலும்இ நடைமுறைப்படுத்துவதிலும் அமெரிக்கா மூர்க்கமாக உள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்புச் சம்பந்தமாக வழமையாகக் கையாளும் யதார்த்தமான அணுகுமுறையை தூக்கி வீசிவிட்டு ஜனாதிபதி புஷ் தனது மிக முக்கியமான வெளியுறவுக் கொள்கை பற்றி யூன் 2002 இல் வெள்ளை மாளிகையின் மேற்குப் புள்ளியில் உரையாற்றும்போது எடுத்து உரைத்தார். இதன்போது அவர் சர்வதேச பாதுகாப்புச் சம்பந்தமாக அமெரிக்க மேலாதிக்க அல்லது நவ ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலை எடுத்து விளக்கினார். இதன்படி கூட்டான பாதுகாப்பிற்கான உத்தரவாதத்திற்கு அமெரிக்கா பெரும் சக்திகளின் கூட்டான ஆதரவினை இனிமேலும் எதிர்பார்க்காது என்பதுடன் அச்சுறுத்தல்களுக்கு அப்பால் அமெரிக்க இராணுவ வலுவை தக்கவைத்திருப்பதற்காக தனக்கு எதிராக உலகில் ஆற்றல்வாய்ந்த வேறு நாடுகள் எதுவும் எழுச்சி பெறுவதை தடுப்பதிலும் அது கவனமாக உள்ளது." வுhந ருளு Pழறநச ஊழஅpடநஒ: றூயவ"ள நேற - வுழஅ டீயசசலஇ ழேஎநஅடிநச 2002

ஆனால் 9ஃ11 இன் நிகழ்வுகளும் இ ஆப்கானிஸ்தான் யுத்தமும் ஈராக் மீதான வீரப்பிரதாபமும் அமெரிக்க வலுவின் எல்லைகளை விரைவாக அம்பலப்படுத்தியது.

".....மிகையான உற்பத்தியின் விளைவான உலகத்தின் பிரச்சனையானது அமெரிக்காவின் உண்மைப் பொருளாதாரத்தில் உள்ள அடிப்படையான பலவீனங்களை வெளிக்காட்டுகிறது. இதன் விளைவாக அமெரிக்காவின் வர்த்தக மற்றும் பட்ஜட் (பாதீடு) என்பவற்றின் பற்றாக்குறை பெருகிச்செல்கிறது. உலகின் சேமக் கையிருப்புக்கான நாணயமாக அமெரிக்க டொலருக்குப் பதிலாக ஈறோ தகுந்த மாற்றீடாக தன்னைக் காட்டிக்கொள்கிறது. இது அமெரிக்கா தன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உலகத்தின் சேமிப்பை உறிஞ்சி எடுப்பதற்கு அச்சுறுத்தலாக உள்ளது. ஈராக்கை கைப்பற்றியமை அத்தோடு அந்தப் பிராந்தியத்திற்கு அது கொண்டுள்ள எவையாயினும் தனது கூட்டுத்தாபனங்களுக்கு (எண்ணைஇ ஆயுதங்கள்இ பொறியியல்வேலைகள்இ நிதி என்பன சம்பந்தமான) நேரடியான அனுகூலங்களைத் தரும் என அமெரிக்கா எதிர்பார்க்கிறது. மற்றைய ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள தன் கூட்டுத்தாபனங்களை அது மூடினாலும் இந்த அனுகூலங்கள் கிடைக்கும் என அமெரிக்கா எதிர்பார்க்கிறது. அத்தோடு பெற்றோலியத்திற்கான மொத்த வர்த்தகத்தை ஈறோ நாணயத்தில் நடத்துவதை தடுப்பதில் அமெரிக்கா முனைந்து நிற்கிறது. இதன் மூலம் டொலறின் மேலாண்மையை தக்கவைக்க முயல்கிறது. " வுhந ஐnஎயளழைn ழக ஐசயங: ழுடை ரூ வாந நுரசழ - யுளிநஉவள ழக ஐனெயை"ள நுஉழழெஅல - னுநஉநஅடிநச 2002

ஈராக் மீதான படையெடுப்பின் பின்னான ஆண்டுகளில் அமெரிக்க மேலாதிக்கத்தின் ஒருமுனை இயக்கம் முடிவடைந்துவிட்டது என்கிறார் ஒக்ஸ்பேட் பல்கலைக்கழகப் பேராசிரியர் ரிமதி ஹாட்ரன் வுiஅழவால புயசவழn யுளாஇ Pசழகநளளழச ழக நுரசழிநயn ளுவரனநைளஇ ருniஎநசளவைல ழக ழுஒகழசன றசழவந in 2007இ -

".... அதிகாரம் என்பது எங்கு இருந்ததுஇ எப்படி இருந்தது என்பதல்ல இனிமேல் கேள்வி. (அது மேற்கில் குவிந்திருந்ததுஇ அதிலும் குறிப்பாக வெள்ளை மாளிகையின் மேற்கு இறகில்). அது இப்போ செங்குத்தாகவும் கிடைக்கோடாகவும் சிதறியுள்ளது. செங்குத்தாக என்று கூறும்போது நாடுகளின் அரசாங்கங்களிடம் ஒப்பீட்டளவில் குறைந்த அதிகாரங்களே உள்ளன. கிடைக்கோடாக என்று கூறும்போது அதிகாரம் என்பது சக்திவாய்ந்த பல நாடுகளிடையே பரவலாக பகிரப்பட்டுள்ளது என்பதாகும். அதிகார வரைப்படம் பல அடுக்குகளையும் பல முனைகளையும் கொண்டுள்ளது."

இன்று உலகப் பொருளாதார நெருக்கடி இன்னொரு பெரும் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. இது அன்னிய (சீனாவின் என வாசிக்கவும்) சேமிப்பில் தங்கிவாழும் அமெரிக்காவின் (கடன் வாங்கும் நாடு) நிலையை தெளிவாகக் காட்ட வைத்துள்ளது. இவர்கள் விசித்திரமான கூட்டாளிகளாக சிலருக்கு படலாம். ஆனால் இதுதான் உண்மை. சராசரி 40 ஆயிரம் டொலர் வருமானத்தைக் கொண்ட அமெரிக்கா கடன்வாங்கும் ஒரு நாடு. ஆணால் சராசரி 2 ஆயிரம் டொலர் வருமானத்தைக்கொண்ட சீனா கடன் கொடுக்கும் ஒரு நாடு. கடந்த ஒரு தசாப்தமாக அல்லது அதற்கும் மேலாக அமெரிக்காவின் கடன் வீக்கத்தை சீனாவே செய்துள்ளது.

"...வியப்புக்குரிய ஒன்றின் அறைகூவலூடாக நாம் வாழந்துகொண்டிருக்கின்றோம். ஆழசவைண ளுஉhரடயசiஉம அவர்களும் நானும் இதனை " சிமெறிக்கா " (சீனா அமெரிக்கா) என கிறீஸ்தவநாமம் சூட்டியுள்ளோம். இந்தப் பார்வையில் கடந்த தசாப்தமாக உலகப் பொருளாதாரத்தை விளங்கிக்கொள்ள சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான தொடர்பின் முக்கியத்துவத்தை விளங்கிக்கொள்ள வேண்டும். சிமெறிக்கா என்னும் ஒரு பொருளாதாரத்தை எண்ணிப் பார்ப்பீர்களாயின் அந்த உறவு உலகத்தின் நிலப்பரப்பில் ஏறத்தாள 13 சதவீதத்தை கொண்டுள்ளது. அது உலகின் 25 சதவீத சனத்தொகையையும் உலகின் மொத்த உற்பத்திப் பொருளில் ஏறத்தாள மூன்றில் ஒரு பங்கையும் கொண்டுள்ளது. அத்தோடு கடந்த ஆறு ஆண்டுகளாக உலகின் பொருளாதார வளர்ச்சியில் 50 சதவீதத்திற்கு மேலான பங்கையும் சிமெறிக்கா கொண்டுள்ளது.

ஒரு நேரத்தில் இந்த உறவானது இணைத்திறமாக சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணம்போல் இருந்தது. சாதாரணமாகச் சொல்வதாயின் ஒருபாதி சேமிக்க மறுபாதி செலவழித்தது. மொத்தத் தேசிய வருமானத்தின் ஒரு பங்காக நிகர தேசிய சேமிப்பை ஒப்பிடும்போது 1990 களில் 5 சதவீதமாக இருந்த அமெரிக்கரின் சேமிப்பு 2005 அளவில் சைவராகியது. அதேசமயம் சீனரின் சேமிப்பு 30 சதவீதத்திற்கு கீழாக இருந்து கிட்டத்தட்ட 45 சதவீதமாகப் பெருகியது. இந்த சேமிப்பு பழக்கத்தில் காணப்பட்ட வித்தியாசம் அமெரிக்காவில் கடன் பெருக்கத்திற்கு வழியிட்டது. ஆசியரின் அதிமிகையான சேமிப்பு அமெரிக்க வீட்டினர் கடன் பெறுவதை மிகவும் இலகுவாக்கியது. அதேசமயம் குறைந்த சம்பளத்தைக் கொண்ட சீனரின் உழைப்பு பணவீக்கத்தை கட்டுப்பாட்டுள் வைத்திருந்தது.

சிமெறிக்காவின் இரு பகுதியையும் ஒன்றாக வைத்திருக்கும் முக்கிய கருவியாக நாணயத் தலையீடு அமைந்தது. றென்மின்பியை (அதன்மூலம் சீனாவின் ஏற்றுமதியை) போட்டிபோடக்கூடியதாக வைத்திருப்பதன் பொருட்டு அமெரிக்க டொலருக்கு எதிராகத் தமது நாணயத்தின் மதிப்பு உயர்வு பெறுவதை தடுப்பதற்காக பீக்கிங்கில் உள்ள அதிகாரிகள் தலையிட்டவண்ணம் இருந்தனர். இதன் விழைவாக சீனாவின் மத்திய வங்கியில் டொலர்களின் ஆதிக்கம் மிக்க பெருந்தொகையான நாணயச் சேமிப்பு குவியலாயிற்று. இதன் மூலம் சீனா அமெரிக்க திறைசேரியாலும் அமெரிக்க அரசின் முகவர்களான குயnnநை ஆயந யனெ குசநனனநை ஆயஉ. என்பவர்களாலும் வெளியிடப்பட்ட கடன்பத்திரங்களை வைத்திருப்போராக மாறியது. அமெரிக்கர் கடன்பட சீனா கருவியாக இல்லாது இருந்திருப்பின் அமெரிக்க வட்டிவீதம் உயர்வாக இருந்திருக்கும். றூயவ “ஊhiஅநசiஉய” ர்யவா றுசழரபாவ - Nயைடட குநசபரளழnஇ டுயரசநnஉந யு. வுளைஉh Pசழகநளளழச யவ ர்யசஎயசன ருniஎநசளவைலஇ 2009

2002 இல் ஈராக் யுத்தத்துடன் ஒருமுனை உலக இயக்கத்தின் முடிவு ஆரம்பமானதுபோல்இ நாம் இன்று பலமுனை உலக இயகத்தின் முடிவிற்கான ஆரம்பத்திற்குச் சாட்சியாக உள்ளோம். உலகப் பொருளாதார நெருக்கடியானதுஇ எழுச்சிபெறும் இருமுனை உலகிற்கான மேடையை அமைத்துள்ளது.

இதுவே 2008 இல் "சீனாவுடனான எமது (அமெரிக்கா) தொடர்பு உலகில் இந்த நூற்றாண்டில் இரு நாடுகளுக்கிடையேயான மிக முக்கிய உறவாக அமையும்." என கிலாரி கிளின்ரனை சொல்ல வைத்தது.

இதுவே அவரை கடந்த வாரம்:
"அமெரிக்காவும் சீனாவும் ஒருவரிடம் இருந்து மற்றவர் பயன் பெறவும் ஓருவரின் வெற்றிக்கு மற்றவர் பங்களிக்கவும் முடியும் என நாம் நம்புகிறோம். எம் இருவருக்கும் உள்ள பொதுவான பிரச்சனைகளிலும்இ நாம் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்புக்களிலும் கடுமையாக உழைப்பது எமது நலன்கள் சம்பந்தமானவையாகும்" எனச் சொல்ல வைத்தது.

ஒபாமா யுகத்துடன் இந்தியா போராடிவெற்றிபெற முயலல் என்னும் தலைப்பில் பெப்பிரவரி 2009 இல் இந்தியாவின் துறைசார் இராசதந்திரியான எம்.கே பத்திரகுமார் இதன் தாக்கம் பற்றி கூறுவது சரியானதாகும்:

".... புதுடெல்கியின் உயர்குழாத்தினரிடையே ஒரு சலிப்பான மனச்சோர்வு ஏற்பட்டுள்ளது. ஜோர்ஸ் புஷ்சிற்காக ஏங்கும் ஒரு நிலை. புஷ் நிர்வாகத்தின் அதிகாரிகள் இந்தியா தென் ஆசியாவில் ஒரு பெரும் சக்தி என்றும் அது சீனா இராணுவரீதியில் பலம் பெறுவதை தடுப்பதற்கான ஒரு கருவியாகவும் இருக்கும் என்ற பார்வையைக் கொண்டிருந்தனர். ஒபாமாவின் சீனக் கொள்கை இந்தியாவின் இந்த விய+கக் கணிப்பை தகர்த்துள்ளது. ஆசியாவில் அமெரிக்கா இயப்பான்இஅவுஸ்திரேலியாஇ இந்தியா ஆகிய நால்வரைக் கொண்ட அணி ஒன்றின் கூட்டிற்கு இந்தியாவை சேர்க்க புஷ் நிர்வாகம் ஊக்கம் அளித்து இரண்டுஇ மூன்று வருடங்கள்கூட ஆகவில்லை. இந்தக் கூட்டு இப்பிராந்தியத்தில் சீனாவின் நடத்தைக்கான விதிகளை விதிக்க முற்பட்டது.

கிலரி கிளின்ரனின் உத்தியோக பூர்வமான முதல் விஜயத்தில் இந்தியாவையும் சேர்த்துக்கொள்ள அமெரிக்க அரசாங்கத் திணைக்கள அதிகாரிகள் முதலில் பிரேரித்து இருந்ததாகவும் ஆயின் கிலரி அதை நீக்கி விட்டதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. இப்ப உள்ள நிலையில் கிளின்ரன் "சீனாவுடனான எமது (அமெரிக்கா) தொடர்பு உலகில் இந்த நூற்றாண்டில் இரு நாடுகளுக்கிடையேயான மிக முக்கிய உறவாக அமையும்." என தனது வெளிநாட்டு விபகாரம் என்னும் கட்டுரையில் எழுதியதையே அவர் நடைமுறைப்படுத்துகிறார்.

ஆசியாவிற்கான தனது பெரிய விஜயத்தை மேற்கொள்ள முன்னர் நியூயோக்கில் உள்ள ஆசியாக் கழகத்தில் கடந்த வெள்ளியன்று அவர் ஆற்றிய முக்கியமான உரையில்
"அமெரிக்காவும் சீனாவும் ஒருவரிடம் இருந்து மற்றவர் பயன் பெறவும் ஓருவரின் வெற்றிக்கு மற்றவர் பங்களிக்கவும் முடியும் என நாம் நம்புகிறோம். எம் இருவருக்கும் பொதுவான பிரச்சனைகளிலும்இ நாம் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்புக்களிலும் கடுமையாக உழைப்பது எமது நலன்கள் சம்பந்தமானவையாகும்" எனக் கூறியுள்ளார். இவர் சீனாவுடன் ஒரு விரிவான உரையாடல் வேண்டும் எனவும் பரந்த நிகழ்ச்சி நிரல் வேண்டும் எனவும் வாதிட்டார்.

சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்காவிற்கு கூடிய வாய்ப்புக்கள் அளிக்கப்பட வேண்டும். டொலர் யுவான் நாணயங்கள் சம்பந்தமாக ஒரு யதார்த்தமான நாணய மாற்றிற்கு பீக்கிங்கை இணங்கச் செய்ய வேண்டும். அத்தோடு சீனா தன் பணத்தை தொடர்ந்தும் அமெரிக்காவில் முதலிட நம்ப வைக்கவேண்டும். ஆயின் நெருக்கடியில் இருவரும் சமமான பங்காளராக மாறும்இ ஒருவரில் ஒருவர் தங்கி இருக்கும் பரஸ்பர உறவானது கட்டவிழ்வது ஒரு வியப்பான கதையாகும். இது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.

தேசிய உளவுத்துறையின் டைறக்ரராகப் புதிதாக நியமனம் செய்யப்பட்ட டெனிஸ் பிளயர் (னுநnnளை டீடயசை) உளவுத்துறை சம்பந்தமான அமெரிக்க செனற் குழுவின்முன் ஜனவரி 22 இல் சாட்சியம் அளிக்கையில் சீனா அமெரிக்கா உறவுபற்றி நல்ல நிலைப்பாடு ஒன்றை தெரிவித்தார். அவர் இது பற்றிக் கூறுகையில்:

சீனாவின் இராணுவக் கட்டுமான வளர்ச்சிபற்றி (அதன் விரிவுஇ அதன் தொழல்நுட்ப சிக்கல்இ அதன் பலவீனங்கள் உட்பட்ட) அமெரிக்கா கரிசனை கொள்வதுடன் நிற்காது நாம் இருவரும் பயன்பெறும் அளவில் ஆசியாவில் இருவருக்கும் இடம் உண்டு என நம்பும் சீனாவின் தலைவர்களுடன் எமது உளவுத்துறை ஒத்துழைக்க வேண்டும். இதனால் இரு நாடுகளும் நலன்பெறுவதுடன் பொது நன்மைக்காக பங்களிக்கவும் முடியும். இங்குதான் இந்தியாவிற்கு கடுமையான பிரச்சனை ஏற்படுகிறது. இந்தியாவின் பார்வையில் தென் ஆசியாவும் இந்து சமுத்திரமும் இந்தியாவும் சீனாவும் பகிர்ந்தகொள்வதற்கு போதியதல்ல."

ஆனால் இந்தவிதமான உலகப்பார்வையை மாற்றும்படி இந்தியா நிற்பந்திக்கப்படலாம். அத்தோடு அக்ரோபர் 2008 இல் (புஷ் நிர்வாகம் நிலவியபோது) இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட்ட கருத்தையும் மீள் பரிசீலனை செய்ய வேண்டி வரலாம்.

"சிறீலங்காவுடன் எமக்கு மிகவும் புரிந்துகொள்ளக்கூடிய விரிவான உறவு உண்டு. தமிழ் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எமது அங்கலாய்ப்பில் இலங்கைத் தீவில் இந்தியாவிற்குள்ள கேந்திர முக்கியத்துவத்தை நாம் மறந்துவிடக்கூடாது. அதிலும் முக்கியமாக பாகிஸ்தான் சீனா போன்ற நாடுகள் இலங்கைத் தீவில் தமது கேந்திர நலன்களுக்காக கால்பதிக்க முயுற்சிக்கும்போது நாம் விழிப்பாக இருக்கவேண்டும். நாம் கொழும்பிற்கு அவர்களின் பாதுகாப்பிற்கான நலன்களை கவனித்துக் கொள்வோம் எனக் கூறியுள்ளோம். ஆனால் கொழும்பு எம்மைவிட்டு மற்றவர்களிடம் அதற்காகப் போகாது விடவேண்டும். இந்தியாவின் கொல்லைப் புறத்தில் சர்வதேச நாடுகளுக்கு ஒரு விளையாட்டு மைதானத்தை அமைக்க நாம் அனுமதிக்கலாகாது."

எழுச்சி பெறும் இருமுனை உலகத்தையும்இ அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தித்தின் கேந்திர முக்கியத்துவத்தையும் இந்தியா விளங்கிக் கொள்ளவேண்டி இருக்கலாம். இலங்கைத் தீவில் பாகிஸ்தான் சீனா போன்ற நாடுகள் தமது கேந்திர நலன்களுக்காக கால்பதிப்பதை தடுக்கும் வல்லமை புதுடெல்கிக்கு இல்லாது இருக்கலாம். புஷ் நிர்வாகத்திலும் இதுதான் விசயமாக இருந்திருக்கலாம். ஆனால் உள்ளாரரந்த சக்தியுடைய எதிரிகளான சீனாவும் றஸ்சியாவும் இந்தப் பிராந்தியத்தில் செல்வாக்குப் பெறுவதை தடுக்கும் வகையில் இந்தியாவின் இராணுவ வலுவை வளர்க்க அமெரிக்கா உதவும் என்ற வகையில் இது அமைந்திருந்தது.

"... களைப்புறும் வரை இப்போ ஓடும் இந்திய அமெரிக்க அணுவாயுத உடன்படிக்கை இ அதிகரித்துச் செல்லும் பொருளாதார ஒத்துழைப்பு இ அத்தோடு (மிக முக்கியமாக) கூட்டான இராணுவப் பயிற்சி இ இந்தியாவால் செய்யப்பட்ட கொள்வனவு மற்றும் கூட்டு நடவடிக்கை என்பவற்றின் பின்னணியில் வைத்துப் பார்க்கும்போது இந்தப் பிராந்தியத்தில் வல்லமையுள்ள எதிரிகளான சீனாவையும் றஸ்சியாவையும் கட்டுப்படுத்த அமெரிக்கா இந்திய இராணுவ வலுவை கட்டி எழுப்புகிறது எனக் கூறலாம். ஆனால் ஏகாதிபத்தியம் பெரும் வல்ரசுகளைக் கட்டி எழுப்புவது இல்லை. அவர்கள் தங்களுக்காக வாடிக்கைகாரரையும் தங்களில் சார்ந்திருப்போரையும்தான் உருவாக்குவார்கள்" நுஅpசைநள னுழn"வ டீரடைன சுiஎயடள - துரளவin Pழனரச இ 5 யுரபரளவ 2008

இந்தியாவின் சோனியா காந்தி மன்மோகன் சிங் நிர்வாகத்தினர் அமெரிக்காவின் வாடிக்கையாளர் பாத்திரத்தை வகிப்பதில் திருப்திப் படினும் இதற்கான ஆதரவு அவர்களுக்கு இந்திய அரசியலின் பெரும் பகுதியினரிடம் இருந்து இல்லாது போகலாம். அதிலும் தேர்தல் காலம் ஒன்றில். எழுச்சி பெறும் இருமுனை உலகில் இந்தியா தனது பழைய அணிசேரா வெளியுறவுக் கொள்கை அணுகு முறைக்குத் திரும்பலாம். அதேசமயம் தனது பழைய நண்பனான றஸ்சியாவுடனான தனது தொடர்பை பலப்படுத்தலாம். இந்த அணுகுமுறை இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவைப் பெறும்.

இலங்கைத் தீவில் இடம்பெறும் முரண்பாடு சம்பந்தமாகஇ நாடுகளுக்கு நிரந்தர நலன்களே உண்டு நிரந்தர நண்பர்கள் இல்லை என்னும் முதுமொழி இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றச் செய்யலாம். அத்தோடு டெல்கியில் உள்ளஇ அபிவிருத்தியடையும் சமூகங்களின் கற்கைக்கான மையத்தில் அதிதிப் பேச்சாளராகக் கலந்து கொண்ட டாக்டர் எம்.எஸ்.எஸ் பாண்டியன் அக்ரோபர் 2008 இல் கூறியதை மனங்கொள்ளலாம்.

"இந்திய அமைப்பில் இருந்து பிரிந்து செல்வதற்கான கோரிக்கையை தமிழ்நாடு வைத்த வரலாறு ஒன்று உண்டு. இருந்தபோதும் காலப்போக்கில் (இந்திய) தேசிய நீரோட்டத்தில் தன்னை முழுமையாக இணைத்துக்கொள்ள அது முடிவு செய்தது. சிறீலங்கா மீதான தனது கொள்கையில் நியூடெல்கி மாற்றத்தை செய்யாதுவிடின்இ தமிழ்நாடு தன் பிரிவினைக் கொள்கைக்கான வரலாற்றை மீட்பிக்கலாம். அது இந்தியாவின் துர்அதிஸ்டமாகும்."

தனது நல்ல முயற்சிகளின் பின்னரும் சிங்கள சிறீலங்காவில் (தனது கொல்லைப்புறம் என நியூடெல்கி கருதும்) அமெரிக்காவினதும் சீனாவினதும் தொடர்ச்சியான இருப்பை நியூடெல்கியால் தடுக்க முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள முன்வரலாம். அத்தோடு எழுச்சிபெறும் இருமுனை உலகில் இந்தியாவின் கேந்திர நலன்ளைப் பாதுகாக்க சுதந்திர தமிழீழம் உருவாவதன் மூலமே முடியும். அதை தடுப்பதன் மூலம் அல்ல என்பதையும் உணர முற்படலாம். தற்போதுள்ள அரசுகளின் ஆட்புல ஒருமைப்பாடு மீறப்படமுடியாதவை என அடம்பிடிப்பது ஒழுங்கான உலக நியதிக்கான மார்க்கம் அல்ல. அதுவம் இந்த அரசுகள் எப்படி எப்போது உருவாக்கப்பட்டவை என்பதும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். மக்களால் மதிக்கப்படும் உண்மையான விழுமியங்களை ஆதரிப்பது அவசியமாகும். இந்த விழுமியங்கள் அவர்களின் உள்ளங்களில் இருந்து அந்த மக்களின் உள்ளங்களை நோக்கிப் பேசப்படுவதாகும்.

விடுதலைக்கான ஒரு மக்களின் போராட்டம் ஆற்றல் வாய்ந்த ஒரு சக்தியாகும். இந்தியப் பிராந்தியத்தில் சுயநிர்ணய உரிமைகளுக்கான போராட்டங்கள் சார்ந்து இந்தியா மெய்மைத் தத்துவம் சார்ந்த அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும். இதைவிட்ட ஒரு குறுகிய அணுகுமுறை எந்த வெளிச் சக்திகளின் அழுத்தங்களை நியூடெல்கி தவிர்க்க முற்படுகிறதோ அந்த சக்திகளுக்கு உள் நுழைய ஊக்கம் அளிப்பதாக முடியும்.


தமிழாக்கம்: ம.தனபாலசிங்கம்
சிட்னிஇ அவுஸ்திரேலியா

Comments