பிரித்தானியா, கொவன்றியில் இலங்கை தமிழின அழிப்பிற்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலம்

நேற்று (20-03-09) பிரித்தானியாவில் கொவன்றி மாநிலத்தில் தமிழ் மாணவர்களால் இலங்கை அரசாங்கத்தின் இன ஒழிப்பிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கொவன்றி வாழ் தமிழ் மாணவர்கள் மட்டுமல்லாது அவர்களது நண்பர்களான பிற இன மாணவர்களும் பங்கு கொண்டனர்

இவ்வூர்வலம் மதியம் 1.30 மணிக்கு ஆரம்பித்து மாலை 5.00 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற ஊறுப்பினர் திரு. சிவாஜிலிங்கம் அவர்களின் சிறப்புரையுடன் நிறைவுபெற்றது.

இவ் மாணவர்கள் கடந்த வாரம் தொடர்ந்து மூன்று நாட்கள் மாநகரசபைக்கு முன் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தி அதன் தொடர்ச்சியாக இன்று ஊர்வலம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments