தமிழக அரசியல் தலைவர்களுக்கு....


ஈழத்தமிழர்களின் அவலங்கள் நீக்கப்படவேண்டும்; அவர்களின் அழிவு தடுக்கப்படவேண்டும் என்பதில் தமிழக மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாகவும், மன ஈடு பாட்டுடனும், உறவு ரீதியான துடிப்புடனும் உள்ளார்கள். அந்த அடித்தளத்தில் வைத்து, இந்திய மத்திய அரசைக் கொண்டு அவற்றைச் செய்விக்கக் கூடிய பலமும் தமிழக மக்களிடம் இருக்கவே செய்கிறது.

ஆனால் அங்குள்ள அரசியல் தலைவர்கள், ஈழத் தமிழர் ஆதரவு அலையைத் தமது சொந்த நலனுக்குப் பயன்படுத்துவதுதான் கேட்க வும், பார்க்கவும் "கண்றாவி"யாக இருக்கிறது!

கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் ஏட்டிக்குப் போட்டி யாக உண்ணாவிரதப் போராட்டங்கள் மற்றும் அறிக்கைப் போர் நடத்துவது மக்களிடையே ஊற்றெடுத்துள்ள ஆத ரவைத் தமது சொந்த அரசியல் நலனுக்காகத் திசை திருப் பும் வகையில் அமைகிறது.

ஈழத் தமிழர்களுக்கு உதவவேண்டும் என்ற நேர்மை யான, இதயசுத்தியான எண்ணம் இருப்பின், தமிழகத் தலைவர்கள் இவ்வாறு நடந்துகொள்ளத் தேவையிருக் காது. இந்தப்போக்கு எந்த வகையிலும் ஏற்புடையதல்ல; நியாயமானதாகவும் இல்லை.

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் நியாயமாக நடந்து கொண்டு அவர்களுக்கு உதவவேண்டும், அவர்களுக் குரிய உரிமைகளை வழங்கச் செய்வதில் இலங்கை அரசிடம் உரத்துக் கூறவேண்டும் என்பதில் உண்மையான, இதய சுத்தியான அக்கறை இந்திய மத்திய அரசிடம் இல்லை. தமிழகத்தின் ஆதரவை இழந்து விடாமல் தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக அரசியல் நூலின் ஒரு புரியை மட்டுமே பிடித்துக் கொண்டிருக்கிறது அது.

அந்த நிலையை மாற்றி, தமிழர் அழிவதைத் தடுப் பதிலும், அவர்களின் நீண்டநாள் விவகாரமான இன விவ காரத்தில் அவர்களுக்குரிய உரிமைகள் கிடைக் கவும், உந்தித்தள்ள வேண்டியவர்கள் தமிழகத் தலைவர்களே. இப்போது தமிழக மக்களிடம் எழுந்துள்ள ஈழத்தமிழர் ஆதரவை ஒருங்கிணைத்து, உறுதியான, அர்த்தபுஷ்டி யான, வினைத்திறன் மிக்க நடவடிக்கையாக மாற்றினால் மட்டுமே மத்திய அரசை உரிய பக்கத்துக்குக் கண்ணைத் திரும்பிப் பார்க்கச் செய்யமுடியும்.

இலங்கையில் நடத்தப்படும் இனவெறித் தாக்குதல் இந்திய அரசின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முழு ஆதரவோடு மட்டுமன்றி, முழுஈடுபாடு கொண்ட ஆதரவுடன் நடத்தப்படுகிறது என்று தமிழகத்தின் முன் னாள் முதலமைச்சர் கூறியிருப்பது அவருக்கு மட்டு மன்றி முதல்வர் கருணாநிதி உட்படத் தமிழக அரசியல் தலைவர்களின் எல்லோரினதும் மனங்களிலும் "உறைக்க" வேண்டும் வெட்கத்தை உண்டாக்க வேண்டும்.

ஈழத்தமிழருக்கான ஆதரவைத் தமது அரசியல் நலன் களுக்காகப் பயன்படுத்தி வாக்கு வாங்கி, தேர்தலில் வெற்றிபெற தமிழகத் தலைவர்கள் அணி பிரிந்து செயற் பட்டால், அது மத்திய அரசுக்குப் "புகுந்து விளையாடவே" இடம்தரும். இலங்கை அரசுக்கு மேலும் சார்பாகச் செயற் படவே வழிசெய்யும்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயராம் ஜெய லலிதாவும் ஈழத் தமிழர் போராட்டத்தை ஆதரித்து உண் ணாவிரம் இருந்து தமது ஆதரவாளர்களையும் உண் ணாவிரதம் இருக்கச் செய்து ஈழத்தமிழர் நலன் நாடி உழைக்க முன்வந்திருக்கிறார். இது சற்று மாற்றமான ஒரு புறச்‹ழலை உருவாக்கி இருப்பது புரிந்துகொள்ளக் கூடிய ஒன்றே.

ஆனால், தமிழக மக்களின் ஈழத்தமிழருக்கான ஆதரவு உணர்வினைக் குலைத்துவிடும் சிதறுண்டு போகச் செய்யும் விதத்தில் தமிழக அரசியல் தலைவர்கள் துளி யேனும் செயற்பட்டு விடக்கூடாது என்பதே இன்றைய முக்கிய தேவை.

அடுத்த மாத இறுதியில் ஆரம்பமாகி நடைபெற வுள்ள இந்தியப் பொதுத் தேர்தலில், அதிக ஆசனங் களைப் பெறவேண்டும் என்று கண்வைத்து, ஈழத் தமிழர் விவகாரத்தில் ஒன்று திரண்டு நிற்கும் தமிழக மக்களைச் சிதறு தேங்காயாக அடித்து, உடைத்து நாசமாக்கி விடக் கூடாது. அரசியல் போட்டிக்கு அதிக ஆசனம் பெறும் இலக்கு வைத்து வெண்ணெய் திரண்டுவிட்ட இந்தவேளை யில் பானையை உடைத்துச் சேதமுற வைக்கக்கூடாது.

அது ஒன்று மட்டுமே, என்றும் ஏதோ ஒருவிதத்திலே னும் ஈழத் தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவும் குறிப்பிடத்தக்க அத்திபாரமாக நிலைக்கும்.

எதிர்வரும் தேர்தலில் ஈழத்தமிழர் அவலம் போக்கு வதற்கு, இலங்கையில் தாழ்நிலை கண்டுள்ள தமிழர் அரசி யல் நிலையைப் போக்குவதற்கு தமிழகத் தலைவர்க ளின் ஒற்றுமை கொண்ட ஆதரவு என்றும் ஒளடதமாக விளங் கும் என்பதனைச் சற்று அயர்ந்தும் மறந்துவிடக் கூடாது.

தமக்கிடையே காணப்படும் பொதுவான அல்லது கோட்பாட்டு ரீதியான வேறுபாடுகளை முன்னிறுத்தி, இப் போது வளர்ந்துள்ள ஈழத்தமிழருக்கான ஆதரவை அவற் றின் பக்கம் சாய்த்துவிட முயற்சிக்கக்கூடாது. இது, பிரதான கட்சிகளுக்கும் அவற்றின் தலைவர்களுக்கும் மட்டுமன்றி ஏனைய சகலருக்கும், தமிழகத்தில் உள்ள மன்றங்கள், சங்கங்களுக்கும் பொருந்தும்.

இது விடயத்தில், தமிழக அரசியல் தலைவர்களிடம் சுயகட்டுப்பாடு நிறையவும் தேவை; அரசியல் சுயநலம் முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும். இதில் அவர்கள் தவறினார்களானால் அல்லது குறுக்கு வழி செல்வார் களானால் தம்மை ஈழத்தமிழர்களின் தொப்புள்கொடி உறவுகள் என்று உச்சரிப்பதற்கும் தகுதியற்றவர்கள் ஆகிவிடுவர்.

மத்திய அரசின் வட இந்தியத் தலைவர்கள், அவர்கள் செய்யும் சுத்துமாத்துகளால் கீழிறக்கிக் கருதப் படுவதை விடவும், ஈழத்தமிழர்களுக்கு அரசியல் துரோகம் இழைத்த கடை நிலையில் வைத்து எண்ணப்பட வேண்டியவராகிவிடுவர் தமிழக அரசியல் தலைவர்கள்.

தமிழக மக்களின் ஒற்றுமையும், ஆதரவுமே ஈழத் தமிழருக்கு உள்ள வைரமான கொழுகொம்பு என்ற நிலை மாறாதிருக்க வேண்டும். மனிதநேயம் எங்கிருந்தும் கிடைக்காமல் தவித்துக்கொண்டிருக்கும் ஈழத்தவருக்கு அதுவே அருமருந்துமாகும்.

Comments