இது தொடர்பாக சுவிஸ் தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் எமது சுயநிர்ணய உரிமையையும் விடுதலைப் புலிகளையும் அங்கீகரிக்கவும்...
சிறிலங்கா அரச பயங்கரவாதத்துக்கு எதிராக குரல் எழுப்பவும்...
சிறிலங்கா அரசை உடனடி போர் நிறுத்தத்தை நடைமுறை செய்ய அழுத்தம் கொடுக்கவும்...
வன்னி மக்களின் உடனடித் தேவையான உணவு, மருந்து என்பன அவர்களை சென்றடைவதை உறுதி செய்யவும்...
சுவிஸ் அரசிடமும் மக்களிடமும் கோரிக்கை விடுத்து பேர்ணில் உள்ள நாடாளுமன்ற முன்றலில் நாளை திங்கட்கிழமை (30.03.09) பிற்பகல் 2:00 மணிக்கு மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெறவுள்ளது.
சுவிஸ் வாழ் எங்கள் அன்பு உள்ளங்களே!
அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டு சுவிஸ் அரச மட்டத்தில் தமிழர் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்க ஒருமித்த குரலை எழுப்ப அனைத்து தமிழர்களிடம் சுவிஸ் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள விரும்புபவர்கள் சுவிற்சர்லாந்து தமிழர் பேரவையுடன் தொடர்பு கொள்ளலாம்.
தொலைபேசி இலக்கம்: (41) 31 381 6902
மின்னஞ்சல்: admin@tamilforum.ch
Comments