புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள பாதுகாப்பு வலயங்கள் மீது தாக்குதல் நடத்துவதில்லை என சிறிலங்கா அரசு உறுதியளித்துள்ள போதும் அங்கு தாக்குதல்கள் நடைபெற்று வருவதாக அறிக்கைகள் தெரிவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான பணிகளுக்கான செயலாளர் ஜோன் கோல்ம்ஸ் தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள பாதுகாப்பு வலயங்கள் மீது தாக்குதல் தாக்குதல் நடத்துவதில்லை என சிறிலங்கா அரசு உறுதியளித்துள்ள போதும் அங்கு தாக்குதல்கள் நடைபெற்று வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஆனால், களமுனையில் கண்காணிப்பாளர்கள் அற்ற நிலையில் யார் இதற்கு பொறுப்பானவர்கள் என்பது தொடர்பாக தெரிவிக்க முடியாது.
சிறிலங்காவில் தற்போதுள்ள நிலையில் மாற்றம் ஏற்படவில்லை. ஆனால், வன்னியில் மக்கள் கொல்லப்படுவதும் காயமடைவதும் அதிகரித்து வருகின்றது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
அனைத்துலகத்தின் மனிதாபிமான விதிகளை மதித்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய கடமை இரு தரப்பிற்கும் உண்டு என்றார் அவர்.
Comments