ஆமாம்... ஆனால் இல்லை!

இலங்கையில்

தமிழின அழித்தொழிப்புப்

போரை நடத்துவது

ராஜபக்சே தானே?

ஆமாம்... ஆனால்

இல்லை!

போரைப்

பின் நின்று இயக்குவது

இந்தியாவே..?

ஆமாம்... ஆனால்

இல்லை!

இந்தியா

இல்லையயன்றால்

இந்திய அரசா?

ஆமாம்... ஆனால்

இல்லை!

இந்திய அரசு

இல்லையயன்றால்

இந்திய அரசின்

ஆட்சி அதிகாரத்தில்

உள்ளகாங்கிரசுக் கட்சியா?

ஆமாம்... ஆனால்

இல்லை!

காங்கிரசுக் கட்சி

இல்லையயன்றால்

காங்கிரசுக் கட்சிக்குத்

தலைமை தாங்கும்

சோனியாவா?

ஆமாம்... ஆமாம்!

ஆமாம்!

இது அபாண்டம்

இல்லையா?

கணவரைக் கொன்றதாக

அவர் கருதுபவரை

இலங்கை

இராணுவத்தைக்

கருவியாகக் கொண்டு

கைது செய்யத்துடிக்கும்

ஆத்திர நடவடிக்கையின்

அவசர நடவடிக்கையின்

உக்கிர நடவடிக்கையின்

உச்சம் தான்

இந்த இன அழிப்பு

யுத்தம்!

பழிவெறியின்

ஏவுகணைதான்

இனவெறி

இதை

அறியாமல்

புலம்புகிறான்

அறிவிலி!

தமிழன் அறிவிலி!

மாமியாரைக் கொன்ற

சீக்கியரின் இனத்தைச்

சேர்ந்த

மன்மோகன் சிங்கைப்

பிரதமராக்கி

அழகுபார்க்கும்

பெருந்தன்மைக்காரர்

அல்லவா

சோனியா?

அது

பெருந்தன்மை அல்ல.

நன்றிக்கடன்!

தன்னைப் பிடிக்காத

தனக்கும் பிடிக்காத

மாமியாரின்

மரணத்துக்குக்

காரணமான

சீக்கியர் இனத்திற்கு

அவர்

ஷமனம் மகிழ்ந்து செய்த

பதில் மரியாதை தான்

பிரதமர் பதவி!

வீரமாமுனிவரைத்

தமிழுக்குத் தந்த

இத்தாலியே!

செத்தொழிந்த

முசோலினிக்கு

மீண்டும் ஏன்

சேலைகட்டி

அனுப்பிவிட்டாய்?

மொத்தத் தமிழனுக்கும்

பாடை கட்டவா?

தமிழர்களே!

நிழலோடு நமக்கு

ஏன் சத்தம்?

இனி

நிஜத்தோடுதான்

நமது யுத்தம்!

- சீதையின் மைந்தன் -

நன்றி

தென்செய்தி


Comments