இந்தப் பொதுக்கூட்டத்தில்பெண்கள் குழந்தைகள் உட்பட சுமார் 300 பேர் கலந்துகொண்டனர்.
பொதுக்கூட்டத்திற்கு தோழர் தென்கனல் (புரட்சிகர தொழிலாளர் முன்னணி) தலைமை வகித்தார். தோழர் மனோகர்(பு.தொ.மு) வரவேற்புரையாற்றினார்.
தோழர் தமிழ்மணி (தமிழீழ விடுதலை ஆதரவு இயக்கம்) சிறப்புரையாற்றினார்.
இந்தியா ஏகாதிபத்திய ஆதிக்க சுபாவத்தையும், அதன் தேசிய ஒடுக்குமுறை கோர முகத்தையும், ஈழ விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதன் சுயநலனையும் மிகத்தெளிவாக ஆதாரபூர்வமாக எடுத்துவைத்தார்.
விடுதலைப்புலிகள் சகோதர யுத்தம் செய்ததாக புளுதிவாரி இறைக்கும் கருணாநிதி ஈழத்தமிழர்களுக்கு செய்யத (குட்டி மணி ஜெகன் போன்றோரை இலங்கை இராணுவத்திடம் ஒப்படைத்தது போன்ற) துரோகத்தை அம்பலப்படுத்தியதோடு, இந்திய உளவுத்துறையின் டைகர்ஸ் ஆப் லங்கா என்ற புத்தகத்தில் இருந்து இந்திய அரசு ஈழ மக்களுக்கு எதிராக செய்த சதிகளை பட்டியலிட்டு காட்டி சகோதர யுத்தம் என பேசும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு சரியான பதிலடி கொடுத்தார்.
குறிப்பாக இந்திய "றோ" உளவு நிறுவனம் ஈழ மண்ணில் பல்வேறு ஆயுதக்குழுக்களை உருவாக்கியதையும், விடுதலைப்புலிகளுக்கு எதிராக அவற்றை யுத்தம் நடத்த தூண்டியதையும், ஆயுதக்குழுக்களுக்குள் முரண்பாட்டை வளர்த்து மோதல் போக்கை உருவாக்கியதையும் அந்த புத்தகத்தில் இருந்து சுட்டிக்காட்டி இந்தியாவின் தமிழின துரோகத்தை அம்பலப்படுத்தினார்.
"ஈழம் வெல்லும்" என்ற தலைப்பில் பொதுக்கூட்டத்தில் நாடகம் நடைபெற்றது. தமிழக ஓட்டுப் பொருக்கி அரசியல் வாதிகளின் நாடகத்தையும், ஈழ மக்களுக்கு இந்திய செய்யும் துரோகத்தையும் நாடகம் அம்பலப்படுத்தியது.
இந்திய அரசின் துரோகத்தை அம்பலப்படுத்தி புரட்சிகர பாடல் இசைக்கப்பட்டது
1
உடைப்போம் உடைப்போம்!
சதிகளை உடைப்போம்!
தடுப்போம் தடுப்போம்!
இந்திய துரோகத்தை தடுப்போம்! (2)
உடைப்போம் சதிகள் உடைப்போம்!
தடுப்போம் துரோகம் தடுப்போம்!(2)
எடுபிடி தமிழக அரசு ஏய்க்கிது நாடகம் நடித்து!
டெல்லியின் கால்களைப் பிடித்து நக்குது நாயென விழுந்து! (2)
உடைப்போம் சதிகள் உடைப்போம்!
தடுப்போம் துரோகம் தடுப்போம்!
(உடைப்போம் !......
உடைப்போம் சதிகள் உடைப்போம்!
தடுப்போம் துரோகம் தடுப்போம்!
வழக்குகள் பலபோட்டாலும்!, சிறையினில் எமைவதைத்தாலும்!(2)
துரோகத்தை நாம்விட மாட்டோம்! பழிவாங்கியே சபதம் முட்டிப்போம்!
கருப்பு சட்டமா? போட்டு பாரடா!
நக்கும் நாய்களா! தமிழ் இனமே சாவதா?
உடைப்போம் சதிகள் உடைப்போம்!
தடுப்போம் துரோகம் தடுப்போம்!
(உடைப்போம் !......
உடைப்போம் சதிகள் உடைப்போம்!
தடுப்போம் துரோகம் தடுப்போம்!
தடியடி நடத்தவந்தாலும்!, துப்பாக்கியால் சுடவந்தாலும்!
தமிழ் ஈழவிடுதலை தீர்வே! அது மனித உரிமைகள் தாமே!(2)
கருப்பு சட்டமா? போட்டு பாரடா!
நக்கும் நாய்களா! தமிழ் இனமே சாவதா?
உடைப்போம் சதிகள் உடைப்போம்!
தடுப்போம் துரோகம் தடுப்போம்!
(உடைப்போம் !
உடைப்போம் சதிகள் உடைப்போம்!
தடுப்போம் துரோகம் தடுப்போம்!
2
உலகத்தின் காதில் காதில் நாங்கள் அரைந்து சொல்கிறோம்!
தமிழீழ விடுதலைப் போரை தமிழர்கள் ஆதரிக்கின்றோம்! (2)
இந்திய சிங்கள அரசுகளே இனவெறிப்போரை நிறுத்து
இந்திய சிங்கள கூலிப்படைகளே ஈழத்தை விட்டு வெளியேறு(2)
(உலகத்தின் காதில் காதில்.....
காலம் காலம் காலமாக வாழ்ந்த தமிழ் பூமி!
காற்றும் கடலும் கரையும் தமிழர் இரத்தம் தோய்ந்த பூமி!
ஈழத்தமிழர்கள் தேசிய அரசுக்கு உரிமையுள்ள பூமி!
அதை தடுக்க நீ யாரடா?
ஈழம் விட்டு நீ ஓடடா!
இந்திய சிங்கள அரசுகளே இனவெறிப்போரை நிறுத்து
இந்திய சிங்கள கூலிப்படைகளே ஈழத்தை விட்டு வெளியேறு(2)
(உலகத்தின் காதில் காதில்.....
ஈழத் தாயக தாகம் என்று போர்கள் புரிந்த பூமி!
இந்திய, சிங்கள கூலிப்படைகளை தோற்கடித்த பூமி!
ஈழத் தமிழர்கள் தேசிய அரசை அமைத்திருந்த பூமி!
அதை சிதைக்க நீ யாரடா?
ஈழம் விட்டு நீ ஓடடா!
இந்திய சிங்கள அரசுகளே இனவெறிப்போரை நிறுத்து
இந்திய சிங்கள கூலிப்படைகளே ஈழத்தை விட்டு வெளியேறு(2)
(உலகத்தின் காதில் காதில்......
நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். நிகழ்ச்சியை புரட்சிகர இளைஞர் முன்னணி, புரட்சிகர தொழிலாளர் முன்னணி, ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் முன்னணி ஆகியவை உள்ளடக்கிய தமிழீழ விடுதலை ஆதரவு இயக்கம் ஒருங்கிணைத்தது.
Comments