புதுக்குடியிருப்பு நோக்கி முன்னேறும் படையினருக்கு எதிராக விடுதலைப்புலிகள் கடுமையான தாக்குதலை நடத்தி பேரிழப்பை படையினருக்கு ஏற்படுத்தியுள்ளனர்.
இதேவேளை, நேற்று சனிக்கிழமை இரவு முதல் சிறிலங்காப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டள்ள சாலை, சுண்டிக்குளம் பகுதிகள் மீது விடுதலைப் புலிகள் கடுமையான ஆட்டிலெறி, மோட்டார் தாக்குதலை நடத்தி வருவதாக தெரியவருகின்றது. இதன்போது சிறிலங்காவின் 55வது படையணி கடும் இழப்புக்களை சந்தித்துள்ளது.
இதுவரை சிறிலங்காவின் படையணிகளின் இழப்புக்களை அதிக அளவு சந்தித்திராத 55வது படையணியும் நேற்று முதல் நடைபெறும் தாக்குதலில் பெரும் அழிவுகளை சந்தித்து வருவதாக தெரியவருகின்றது. அத்துடன், விடுதலைப் புலிகள் மீண்டும் ஆட்டிலெறித் தாக்குதலை ஆரம்பித்திருப்பது படையினரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை, தென்மராட்சிப் பகுதி மக்கள் இதுவரை கேட்காத அளவிற்கு மிகக் கடுமையான எறிகணைத் தாக்குதலின் சத்தங்களை கேட்பதாகத் தெரிவித்துள்ளனர்.
Comments