பயங்கரவாதத்தை ஒடுக்க தெற்காசிய மண்டல ஒத்துழைப்பு அமைப்பு (சார்க்) நாடுகள் ஒருங்கிணைந்த ஒரு நடவடிக்கை திட்டத்தை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
அதிபராக பொறுப்பேற்ற நாளில் இருந்து ஈழத் தமிழர்களின் இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண இராணுவ நடவடிக்கையைத் துவக்கி, ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் தனது நாட்டு மக்களையே கொன்று குவித்துவரும் ராஜபக்ச, பயங்கரவாதத்தைப் பற்றியும் அதனை ஒடுக்குவது பற்றியும் பேசுவது 21வது நூற்றாண்டின் சிறந்த நகைச்சுவைகளில் ஒன்றென்றாலும், தனது நாட்டு மக்களை அப்பட்டமாக இனப் படுகொலை செய்து கொண்டு, அதனை வெளியிடும் ஊடகங்களை முடக்கி, உண்மை உலகத்திற்கு தெரியாமல் மறைத்து, அதையும் மீறி தனது அரசின் கடத்தல், கொலைகளை உலகிற்கு கொணரும் ஊடகவியலாளர்களைக் கொன்று குவிக்கும் ராஜபக்சவின் நடவடிக்கையை உலகமே கண்டித்துக் கொண்டிருக்கையில் அவரால் இவ்வளவு துணிந்து எவ்வாறு பேச முடிகிறது? அதுவும் தெற்காசிய மண்டல ஒத்துழைப்பு அமைப்பு எனும் 9 நாடுகளின் அயலுறவு அமைச்சர்கள் மாநாட்டில் எப்படி அவரால் பேசமுடிகிறது?
“பயங்கரவாதத்தை ஒடுக்க ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் நமது நாடுகளின் ஜனநாயகத்தை காத்திட வேண்டும்” என்று முழங்கியுள்ளார். சிங்கள-பெளத்த மேலாதிக்கத்தை உறுதி செய்யும் ஒரு ஒற்றையாட்சி அரசமைப்பை வைத்துக்கொண்டு, அதன் அதிபராகவும் இருந்துகொண்டு இந்த சாத்தான் வேதம் ஓதியதையும் சார்க் அயலுறவு அமைச்சர்கள் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள்!
ஒரு காலத்தில் சர்வாதிகாரத்திற்கும், எதேச்சதிகாரத்திற்கும் மன்னராட்சி வழி வகுத்தது. மன்னராட்சியை கபளீகரம் செய்த காலனி ஆட்சிகள் தங்கள் நாட்டின் நலனை (செல்வத்தை) காப்பாற்ற தாங்கள் அடிமைப்படுத்திய நாட்டு மக்களை அடித்து, உதைத்து, மிதித்துப் பிழிந்தனர்.
முதலாவது உலகப் போர் இந்த காலனி ஆதிக்க அராஜகத்தை பலவீனப்படுத்தியது, அதன் விளைவாக உலகின் பல்வேறு நாடுகளில் விடுதலைப் போராட்டங்கள் பலம் பெற்றன. இரண்டாவது உலகப் போர் காலனி ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு, அவைகளின் பிடியில் இருந்த நாடுகளுக்கு விடுதலை கிடைக்கவும் வழி செய்தது. இந்தியா போன்று விடுதலைக்காக ஒரு மிக நீண்ட போராட்டம் நடத்திய நாடுகளுக்கும், அதற்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடாத நாடுகளுக்கும் விடுதலை கிடைத்தது.
எங்கெல்லாம் மேலாதிக்கத்திற்கு எதிராக நடந்த விடுதலைப் போர் கடுமையாக இருந்ததோ அந்த நாடுகள் எல்லாம் தங்களின் விடுதலைக்குப் பிறகு ஜனநாயக நீரோட்டத்தை நிலைப்படுத்தி, ஒரு வலிமையான மக்கள் ஜனநாயக அரசை ஏற்படுத்தியதோடு நில்லாமல், சமத்துவத்தை நிலைநாட்டி, தம்மக்களுக்கிடையே இருந்த ஏற்றத் தாழ்வுகளுக்கு விடைகொடுத்தன. இந்தியாவில் இந்த சமூக சமத்துவம் இட ஒதுக்கீட்டின் மூலம் நிறைவு செய்யப்பட்டது. அம்பேத்கார், பெரியார் ஆகியோரின் போராட்டங்களினால் சமூக நீதியின் மூலம் அந்தச் சமத்துவம் இந்தியாவில் நிலைநாட்டப்பட்டது. அதனால்தான் பல்வேறு தேசிய இனங்களைக் கொண்டு, பல மாநிலங்களாக இந்தியா இருந்தும், அதன் மக்களுக்கு சமூக, கல்வி, வேலை வாய்ப்புகளில் கிடைத்த சம வாய்ப்புகளினால் ஜனநாயக ரீதியான அதன் அரசியல் கட்டமைப்பு பலம் பெற்றதாக உள்ளது. இதுவே இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் முதுகெலும்பாக உள்ளது.
|
நிலைப்படுத்துவதற்கான சாத்தியங்கள் இருந்தும், அது நடைபெறாமல், வெள்ளையன் வளர்த்துவிட்ட - பிறகு அதையே தங்கள் அரசியல் பாதையாக வகுத்துக்கொண்ட சிங்கள-பெளத்த பேரினவாத அரசியல் - பிளவு ஓரின மேலாதிக்க ஆட்சிக்கு வித்திட்டது. இரு பெரும் மொழியினச் சமூகங்களைக் கொண்ட இலங்கையில் ஒற்றையாட்சி நிலை நிறுத்தப்பட்டு அதற்கு சிங்கள மக்களின் பேராதரவும் கிடைக்க அது தமிழின ஒடுக்கலுக்கு வழிவகுத்தது.
இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் சம வாய்ப்பை உறுதிபடுத்த அரசமைப்பு ரீதியிலான (திருத்தங்களின் மூலம்) நடவடிக்கை எடுக்கப்பட்ட அதே நேரத்தில், இலங்கையில் பெரும்பான்மை சிங்கள இனத்திற்கு மட்டுமே எல்லா உரிமைகளும் உடமையாக்கப்பட்ட ஒரு அரசமைப்பு (1974இல்) வடிவமைக்கப்பட்டு அந்நாட்டு நாடாளுமன்றத்தால் ஏற்பளிக்கப்படுகிறது.
இப்படி இனவழி தேசிய இனங்கள் பலவற்றைக் கொண்ட ஒரு கூட்டாட்சியான இந்தியாவில், ஒவ்வொரு தேசிய இனத்திற்குள்ளும் உள்ள சமூக சமமின்மையைப் போக்க, அவைகளுக்கும் இந்திய ஆட்சி அதிகாரத்தில் உரிய பங்கை (கல்வி, வேலை வாய்ப்பின் மூலம்) அளிக்க அரசமைப்புச் சட்டத்தில் வழிகாணப்பட்ட வேளையில்,
|
ஆயுத போராட்டத்தின் எழுச்சி சிங்கள-பெளத்த மேலாதிக்கத்திற்கு கலக்கத்தை ஏற்படுத்த, முதல் முறையாக தமிழினத்தின் பதிலடி அதனை பொறி கலங்கிடச் செய்தபோது, அது பேச்சுவார்த்தை நாடகத்தை துவக்கியது. தனது பலத்திற்கு ஈடுகொடுத்து பதிலடி கொடுக்கும் தமிழின ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் வலிமை குறைந்த காரணத்தினால்தான் அது பேச்சுவார்த்தைக்கு வந்தது. அந்தப் பேச்சுவார்த்தையெல்லாம், தன்னை மேலும் பலப்படுத்திக் கொண்டு பழைய வழியை மீண்டும் வலிமையாகத் தொடர்வதற்குத்தான் என்பது, அந்தப் பேச்சுவார்த்தைகளில் சிங்களப் பேரினவாத அரசு எதையும் போராடிய தமிழ் மக்களுக்கு அளிக்க முன்வராததில் இருந்து தெரிந்தது.
தமிழன் மீது இராணுவ அசுர பலத்தைப் பிரயோகம் செய்து அவனுடைய அரசியல் ஜனநாயக உரிமை கோரிக்கையிலிருந்து பிறந்த ஆயுத போராட்டத்தை ஒடுக்கி, அதன் மூலம் தமிழனப் பிரச்சனைக்கு ‘தீர்வு’ காண முற்பட்டது. உலகெங்கிலும் திரிந்து, கெஞ்சி, கூத்தாடி ஆயுதம் வாங்கியது. தனது நாட்டின் வளர்ச்சிக்காக அளிக்கப்பட்ட நிதியனைத்தையும் தனது முப்படைகளையும் வலிமைபடுத்திக் கொள்ள பயன்படுத்தியது.
அதன் இந்த குள்ள நரி சூழ்ச்சித் திட்டத்தை நன்றாகவே புரிந்துகொண்ட தமிழினமும், அதன் விடுதலை வேங்கைகளும் அதற்கு ஈடாக தங்களையும் இயன்ற அளவிற்கு பலப்படுத்திக் கொண்டு ஈடுகொடுத்து வளர்ந்தது மட்டுமின்றி, தமிழர்களின் நிர்வாக அமைப்பை தங்களின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட பகுதிகளில் நிலைபெறுவும் செய்து ஆட்சித் திறனை நிரூபித்தனர்.
இது சிங்கள-பெளத்த பேரினவாதத்திற்கு பெரும் சவாலானது. “இது எங்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் எதிர்காலத்தில் சிக்கலாகலாம்” என்று சந்தடி சாக்கில் கந்தப் பொடி தூவியது. ஆமாம் சாமி, அப்படியும் ஆகலாம் என்று இந்திய நாட்டில் தொன்று தொட்டு ஆதிக்கம் செலுத்திவந்து, விடுதலைக்குப் பின், அதன் அதிகார வர்க்கமாக உருவெடுத்த இந்திய ஆட்சியின் நிர்வாக முதுகெலும்பும் ஆட்சியாளர்களுக்கு தவறான தலையணை மந்திரம் ஓத அதுவே
|
|
தனது நாட்டில் ஒரு அங்கமாக இருக்கும் தமிழன மக்களும், அவர்களைப் போன்று பல்வேறு தேசிய மொழியின மக்களும் பெற்றுவரும் உரிமை ஈழத் தமிழர்களுக்கு உள்ளதா என்பதை கேள்வியாக்கி அதனை உறுதி செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்குடன் இந்தியா அன்றைக்கு நின்றிருக்குமானால் அது இலங்கை இனப் பிரச்சனைக்கு அரசியல் ரீதியான நிரந்தரத் தீர்வை எட்டியிருக்க வழிகோலியிருக்கும். அந்த நேர்மையான பாதையில் செல்லாமல், இந்திய அதிகார வர்க்கம் கட்டிவரும் கற்பனை கோட்டையில் மெய் மறந்து, தனது பூகோள நலனை காப்பாற்றிக் கொள்வதாகக் கூறிக்கொண்டு, தமிழினத்தின் இரத்ததில் உருவான ஆயுதப் போராட்டத்தை ஒடுக்கி, அவர்களை அடக்கி அடிமைப்படுத்திடத் துடிக்கும் ஒரு பேரினவாத அரசோடு நட்புகொள்ள மேற்கொண்ட முயற்சி இந்தியாவின் தோல்விக்கு வழிகோலியது.
அதன் பிறகு, இலங்கை இனப் பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண 2002ஆம் ஆண்டு முதல் நார்வே நாட்டின் அனுசரணையுடன் சிறிலங்க அரசும் விடுதலைப் புலிகளும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்தப் பேச்சுவார்த்தைகளில் சற்றும் நேர்மை காட்டவில்லை சிறிலங்கத் தரப்பு. பேச்சுவார்த்தைகளில் ஒப்புக்கொண்ட ஒன்றைக் கூட சிறலங்க அரசு நடைமுறைப்படுத்தவில்லை.
அரசியல் தீர்வு காணும்வரை வடக்கையும் கிழக்கையும் இணைத்து ஒரு தற்காலிக நிர்வாக சபை ஏற்படுத்த விடுதலைப் புலிகள் அளித்த இடைக்கால திட்டத்தை ஆராயாமலே குப்பையில் போட்டது சந்திரிகா அரசு.
சுனாமி பேரலையால் இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்பால் தமிழர், சிங்களர் என இரு தரப்பு மக்களின் மறு வாழ்விற்காக அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட கொடை நாடுகள் அளித்த நிதியை பகிர்ந்துகொண்டு, தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உருவாக்கப்பட்டு இரு தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அமைப்பு (பி-டாம்ஸ்) அரசமைப்பிற்கு உட்படாதது என்று கூறி சிறிலங்க உச்ச நீதிமன்றம் (ஜனதா விமுக்தி பெரமுணா தொடர்ந்த வழக்கில்) தீர்ப்பளித்தது. தமிழர்களின் மறு வாழ்விற்கு வந்த நிதி அனைத்தும் அவர்களுக்கு எதிராக இராணுவத்தை பலப்படுத்திக் கொள்ள செலவிடப்பட்டது.
இப்படிப்பட்ட ஒரு அப்பட்டமான இன ஒடுக்கல் அரசமைப்பு ரீதியாகவே நடந்துகொண்டிருந்த காலத்தில்தான், இராணுவ ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகளை ஒடுக்கி, தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பேன் என்று கூறி தேர்தலில் நின்று வெற்றி பெற்று அதிபரான மகிந்த ராஜபக்ச, தன்னிச்சையாக போர் நிறுத்தத்தை முறித்துக்கொண்டு தமிழர்கள் மீது இராணுவ நடவடிக்கையை முடுக்கிவிட்டார்.
|
இதையெல்லாம் சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், பூடான் ஆகிய எந்த நாடும் கண்டிக்கவில்லை. அவ்வப்போது, ‘அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்’ என்ற உதட்டுச் சேவை மட்டும் செய்துவிட்டு, ராஜபக்சவின் அரசு மேற்கொண்டுவரும் இனப் படுகொலைக்கு ஒரு அமைதி சாட்சியாகவும், ஆதரவாளர்களாகவுமே இருந்து வந்துள்ளன.
மகிந்த ராஜபக்ச அரசு மேற்கொண்டுவரும் இந்த அப்பட்டமான இனப் படுகொலைக்கு இன்றைக்கு நிலவும் உலகின் அரசியல் ரீதியான ஒரு புறச்சூழலும் உதவுகிறது. 2001ஆம் ஆண்டு செப்டம்பரில் நியூயார்க்கின் மீது நடந்த தாக்குதலையடுத்துக் கூடிய
|
அதுமட்டுமல்ல, அதையே தங்களுடைய அரசியல் அதிகாரத்திற்கு எதிரான அமைப்புக்களை மற்ற நாடுகளின் ஆதரவு பெறுவதை தடுக்கக்கூடிய கருவியாகவும் ஆக்கின. சுருங்கக் கூறின், சிறிலங்க அரசு தமிழர்களுக்கு எதிராக தான் மேற்கொண்டுவரும் இனப்படுகொலை எனும் ‘அரச பயங்கரவாத’ நடவடிக்கையை ‘பயங்கரவாதத்திற்கு எதிரான’ போர் என்று காட்டிக் கொள்ளவும், அதனடிப்படையில் மற்ற நாடுகளிடமிருந்து ஆயுதங்களையும், நிதி உதவிகளையும் எளிதில் பெற வழிவகுத்தது.
இந்த பயங்கரவாத கேடயம் தந்துள்ள பாதுகாப்பினால்தான், தெற்காசிய பகுதியில் உள்ள நாடுகளின் உதவியோடு - குறிப்பாக இந்தியாவின் உதவியோடு - தமிழர்களின் எதிரான தனது இனப் படுகொலையை தயக்கமின்றி செய்து வருகிறது ராஜபக்ச அரசு.
|
இதற்கு துணை நிற்கும் அரசுகள் - இந்தியா உட்பட - அது உள்நாட்டுப் பிரச்சனை, அது அந்த நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்ட விடயம், பயங்கரவாதிகளை ஒடுக்க நாங்களும் உதவுவோம், ஆனால் அப்பாவி மக்களை பாதுகாக்க குரல் கொடுப்போம் என்றெல்லாம் கூறி தங்கள் நாடுகளில் எழும் எதிர்ப்புகளை திசை திருப்புகின்றன.
இதில் ‘எங்களின் பூகோள மற்றும் பாதுகாப்பு நலனும்’ அடங்கியுள்ளது என்று கூறி, இனப் படுகொலைக்கும், அரச பயங்கரவாதத்திற்கும் வசதியாக துணை போகின்றன.
இப்படிப்பட்ட அப்பட்டமான அயலுறவுக் கொள்கையே ராஜபக்ச அரசிற்கு துணிவைக் கொடுக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக தெற்காசிய மண்டலத்தில் ஒரு பொதுவான ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை வேண்டும் என்று அவர் கேட்பது, தனது அரச பயங்கரவாதத்தால் தமிழர்களின் விடுதலைப் போரை முற்றிலுமாக அழித்தொழிக்க இணைந்து செய்பட வாருங்கள் என்பதே. இந்த ‘ராஜ தந்திர வேண்டுகோளின்’ அடிப்படையில் சார்க் மாநாட்டில் அப்படியொரு தீர்மானமும் நிறைவேற்றப்படலாம். அதனை இந்தியாவும் ஆதரிக்கலாம்.
சுய நியாயம் கற்பித்துக்கொண்டு இந்த அரசுகள் எடுக்கும் முடிவுகள் மக்களின் வாழ்வுரிமையை அவ்வளவு சுலபமாக பறித்துவிட உதவாது. ஏனெனில் உலகம் விழித்துக்கொண்டு விட்டது. இராணுவ-பாதுகாப்பு நலன்களைக் காரணமாக்கி தங்கள் அரசுகள் எப்படிப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன என்பதை உலக மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
|
எனவே, வார்த்தைகளை அரசியல் கேடயமாக்கிக் கொண்டு இதற்கு மேலும் மானுடத்தை யாராலும் ஏமாற்றிவிட முடியாது.
Comments