![Nedumaran](http://www.keetru.com/thamizhar/mar09/rajapakshe_pranab_300.jpg)
1.இறையாண்மை கொண்ட இலங்கை நாட்டில் நமது முடிவுகளைத் திணிக்க முடியாது. எனினும் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்த இலங்கைத் தமிழர் சிலர், இராணுவத்தால் கொல்லப்பட்டது ( have been caught ub cross fire) துரதிர்ஷ்டவசமானது.
2.விடுதலைப் புலிகளால் தமிழர்களுக்கு நேரிட்ட இன்னல்களுக்கு அளவே இல்லை. அவர்கள் இலங்கைத் தமிழர்களுக்குக் கடும் துன்பத்தையும், துயரத்தையும் ஏற்படுத்தி விட்டனர்.
ராஜபக்சேவோ, அவருடைய தம்பி கோத்தபய ராஜபக்சேவோ பேசுவது போலிருக்கிறது, பிரணாப்பின் குரல்.
இறையாண்மை கொண்ட அயல் நாட்டில் இந்தியா இன்றுவரை தலையிட்டதே இல்லையா ? வங்கதேசத்தின் விடுதலைக்காகப் பாகிஸ்தான் நாட்டின் இறையாண்மையிலும், திபேத் விடுதலைக்காகச் சீன நாட்டின் இறையாண்மையிலும் நாம் தலையிட்டது ஏன் ? இதே இலங்கை அரசின் இறையாண்மை குறித்து எந்தக் கவலையும் கொள்ளாமல், இராசீவ் காந்தி காலத்தில், இந்திய விமானங்கள் எல்லைதாண்டிப் பறந்து அன்று உணவுப் பொட்டலங்கள் வீசினவே...அப்போது எங்கே போயிற்று அடுத்த நாட்டின் இறையாண்மை பற்றிய கவலை ?
பிறகு, ஏதோ குறுக்கே ஓடிய சிலரை இராணுவம் கட்சியாக உள்ள காங்கிரஸ் பெற்ற வாக்குகள் வெறும் 26 சதவீதம் மட்டும்தானே. 26 சதம் வாக்குப் பெற்றவர்கள் நாட்டை ஆளும்போது, 43 சதம் ஆதரவு பெற்றவர்களை ஏன் நாம் ஏற்க முடியாது ? அவர்கள் ஈழமக்களின் சார்பாளர்களா (பிரதிநிதிகளா) இல்லையா என்பதை ஈழ மக்கள்தாம் சொல்லவேண்டும். இங்கே உள்ள காங்கிரஸ்காரர்கள் அதனைத் தீர்மானிக்க முடியாது. ஐக்கிய நாடுகள் அவையின் மூலம், ஈழ மக்களிடம் ஒரு கருத்துக் கணிப்பை நடத்த இந்தியா முன்வரட்டும். எத்தனையோ நாடுகளில் அத்தகைய கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டுள்ளன என்பதையும், அதன் விளைவாகப் பல புதிய நாடுகள் தோன்றியுள்ளன என்பதையும் நாம் அறிவோம்.
இந்தோனே´யாவிலிருந்து தனியாகப் பிரிந்து செல்ல விரும்பிய கிழக்குத் திமோர் மக்களிடம் 1999 ஆம் ஆண்டு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.74.2 சதவீதம் மக்கள், தனிநாடாகப் பிரிந்து செல்ல விருப்பம் தெரிவித்ததையடுத்து, 2002 ஜீன் மாதம், கிழக்குத் திமோர் தனி நாடாகியது. 1989 இல் சோவியத் உடைந்ததைத் தொடர்ந்து, வேறு சில பொதுவுடைமை நாடுகளும் சிதறின. அவற்றுள் ஒன்று யுகோஸ்லேவியா. அந்நாடு சில துண்டுகளாக உடைந்தபோது, செர்பியா ‡ மாண்டிநீக்ரோ என்று ஒரு நாடு உருவாயிற்று.
இரண்டு தேசிய இனங்களும் ஒன்றாக இருக்கலாம் என்று அன்றைய தினம் (1993) கருதினர். ஆனால் காலப்போக்கில் அவர்களின் ஒற்றுமையும் நிலைக்கவில்லை. மாண்டி நீக்ரோ மக்கள் தனியாகப் பிரிந்து போகவேண்டும் என்று கருதினர். 1997 முதல் கலவரங்கள் தோன்றின. அவை மெல்ல மெல்ல வளர்ந்து இனமோதலாக மாறிற்று. அதன்பின் அங்கும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 55.5 விழுக்காடு மாண்டி நீக்ரோ மக்கள் தனியே பிரிந்து செல்ல விரும்பினர். இறுதியில் 2006 ஜீன் மாதம் மாண்டி நீக்ரோ என்னும் தனிநாடு உருவானது.
எனவே, உலக நாடுகள் ஈழ மக்களிடமும் ஏன் வாக்கெடுப்பு நடத்தக்கூடாது ? அப்படி நடத்தினால், ஏறத்தாழ 90 % ஈழமக்கள் தனி ஈழத்தையும், விடுதலைப் புலிகளின் தலைமையையும்தான் ஏற்பார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அதனால்தான் அங்கு வாக்கெடுப்பு நடத்தாமல், ஆளாளுக்குப் புள்ளி விவரம் சொல்லிக்கொண்டுள்ளனர். இனிமேலாவது, ராஜபக்சேயின் குரலில் பேசுவதை விட்டுவிட்டு, இந்திய அரசும், பிரணாப் முகர்ஜிகளும் மனிதநேயக் குரலிலும், ஜனநாயகக் குரலிலும் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
சுப.வீரபாண்டியன்
Comments