இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் குறித்து இந்திய மத்திய அரசு உரத்துக் குரல் கொடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய புதுடில்லியில் தேசிய மனித உரிமை ஆணைக்குழுவின் நிகழ்வில் உரையாற்றும் போது தெரிவிக்கையில்
உலகில் மனித உரிமையும் சுதந்திரமும் எங்கெல்லாம் ஆபத்துக்குள்ளாகியுள்ளனவோ அங்கு அத்தகைய நிலைமையை மாற்றுவதற்கு ஆதரவு வழங்குமாறு அவர் இந்தியாவை வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை, மியன்மாரில் உள்ள அச்சமூட்டும் நிலை குறித்து இந்தியா குரல் கொடுக்க வேண்டும் மனித உரிமை நிகழ்ச்சி நிரல் எங்கெல்லாம் எவ்வெப்போதெல்லாம் கவலைக்குரிய விடயமாகின்றதோ அப்போதெல்லாம் தனியாகவும் ஏனைய நாடுகளுடனும் இணைந்தும் இந்தியா குரல் கொடுக்க வேண்டுமென அவர் மேலும் கேட்டுள்ளார்
Comments